விரைவில்.., கியா சொனெட் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்

kia sonet

இந்தியாவில் கியா கார் தயாரிப்பளாரின் அடுத்த மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள சொனெட் எஸ்யூவி விலை ரூபாய் 7 லட்சம் முதல் ரூபாய் 12 லட்சத்திற்குள் வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ எஸ்யூவி காரின் அதே பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள சொனெட் காரில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் என மொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

பிஎஸ் 6 ஆதரவை பெற்ற 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் ஆகியவற்றினை பெற உள்ளது. செல்டோஸ் காரில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பவர் குறைக்கப்பட்டு வெளியிடப்படலாம்.

இன்டிரியரில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இடம்பெற்றுள்ள UVO கனெக்ட்டிவிட்டி அம்சமான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட வசதிகளுடன் இணையம் சார்ந்த பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கும்.

4 மீட்டருக்கு குறைந்த நீளத்தைப் பெற்ற எஸ்யூவி கார் பிரிவில் உள்ள ஹூண்டாய் வென்யூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாமஹிந்திரா எக்ஸ்யூவி300ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டாடா நெக்ஸான் உள்ளிட்ட எஸ்யூவி கார்களை எதிர்கொள்ள உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக ஆட்டோ கார் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் செல்டோஸ் மற்றும் கார்னிவல் எம்பிவி என இரு மாடல்களும் அபரிதமான வரவேற்பினை பெற்றுள்ளது.