நிசான் மேக்னைட் எஸ்யூவி விலை விபரம் கசிந்தது

0

Nissan magnite front

இந்தியாவின் சப்-காம்பாக்ட் எஸ்யூவி மாடலாக வெளியிடப்பட உள்ள மேக்னைட் எஸ்யூவி ரூ.10 லட்சத்திற்குள் எக்ஸ்ஷோரூம் விலையை நிசான் நிர்ணையித்துள்ளது. போட்டியாளர்களை விட குறைவாக விலை, கூடுதல் வசதிகளை வழங்குகின்றது.

Google News

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் ரெனோ-நிசான் கூட்டணியில் விற்பனை செய்யப்படுகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் என்ஜின் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மேக்னைட்டின் மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ எனவும், சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 17.7 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, பேஸ் வேரியண்டுகளில் 1.0 லிட்டர் B4D பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக லிட்டருக்கு 18.75 கிமீ மைலேஜ் வழங்குகின்றது.

மேக்னைட் XE, XL, XV Upper மற்றும் XV Premium என 4 வேரியண்டில் 20 வகையான மாறுபாடுகளில் கிடைக்கின்றது.

1.0-litre Petrol XE – ரூ. 5.50 லட்சம்

1.0-litre Petrol XL – ரூ. 6.25 லட்சம்

1.0-litre Petrol XV – ரூ. 6.75 லட்சம்

1.0-litre Petrol XV Premium – ரூ. 7.65 லட்சம்

1.0-litre Turbo Petrol XL – ரூ. 7.25 லட்சம்

1.0-litre Turbo Petrol XV – ரூ. 7.75 லட்சம்

1.0-litre Turbo Petrol XV Premium – ரூ. 8.65 லட்சம்

1.0-litre Turbo Petrol XL CVT – ரூ. 8.15 லட்சம்

1.0-litre Turbo Petrol XV CVT – ரூ. 8.65 லட்சம்

1.0-litre Turbo Petrol XV Premium CVT – ரூ. 9.55 லட்சம்

புதிய நிசான் மேக்னைட் விலை கசிந்துள்ளதை தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கு அதிகாரப்பூர்வமாக விலை அறிவிக்கப்படலாம்.

Web Title: Nissan Magnite Price list leaked

source- t-bhp