கிராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற நிசான் மேக்னைட் – ASEAN NCAP

nissan magnite india crash test

அபரிதமான வரவேற்பினை பெற்றுள்ள நிசான் இந்தியா நிறுவனத்தின் மேக்னைட் காரின் (ASEAN NCAP) ஏசியான் கிராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முழுமையான விபரங்கள் தற்போது வெளியாகவில்லை.

தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்ற நிசானின் மேக்னைட் காரில்  1.0 லிட்டர் B4D பெட்ரோல் இன்ஜின் 72hp பவர் 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடியதாக உள்ள இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.

டாப் வேரியண்டுகளில் 100 hp பவர் 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT வேரியண்ட்) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

குளோபல் என்சிஏபி மையம் பல்வேறு இந்திய கார்களை சோதனை செய்து வரும் நிலையில் டாடா நெக்ஸான், அல்ட்ராஸ் மற்றும் எக்ஸ்யூவி 300 மட்டுமே 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளன. இந்நிலையில் ASEAN NCAP மூலமாக சோதனை செய்யப்பட்ட மேக்னைட் எஸ்யூவி 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. இதன் முழுமையான அறிக்கையை விரைவில் வெளியாக உள்ளது.

magnite asean crash test news

இந்திய சந்தையில் நிசான் மேக்னைட் எஸ்யூவி விலை ரூ.5.54 லட்சம் முதல் துவங்கி அதிகபட்சமாக ரூ.10.09 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்த எஸ்யூவி காருக்கான காத்திருப்பு காலம் 8 மாதங்கள் வரை உயர்ந்துள்ளது.