Homeசெய்திகள்கார் செய்திகள்ரூ.4.95 லட்சத்தில் ரெனோ ட்ரைபர் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.4.95 லட்சத்தில் ரெனோ ட்ரைபர் விற்பனைக்கு அறிமுகமானது

triber

இந்திய சந்தையில் 7 இருக்கைகளை பெற்ற விலை குறைவான மாடலாக ரெனோ ட்ரைபர் எம்பிவி ஆரம்ப விலை ரூ.4.95 லட்சம் முதல் தொடங்கி ரூ.6.49 லட்சம் வரையிலான விலையில் நிறைவடைகின்றது. ட்ரைபருக்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும், கோ பிளஸ், மாருதி வேகன் ஆர், சில மைக்ரோ எஸ்யூவி மற்றும் ஹேட்ச்பேக் கார்களுக்கு போட்டியாக அமைந்திருக்கின்றது.

7 இருக்கைகள், பல்வேறு நவீன அம்சங்களை பெற்ற 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 72 ஹெச்பி  1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ்டு விவிடி பெட்ரோல் என்ஜின், ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ், மைலேஜ் லிட்டருக்கு 20.5 கிமீ போன்றவை கவனிக்கதக்க அம்சங்களாகும்.

4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எம்பிவி ரக மாடலின் தோற்ற அமைப்பு கிராஸ்ஓவர் ரக மாடல்களின் தோற்ற உந்துதலில் கவனத்தில் கொண்டு வடிவமைகப்பட்ட முன்புற கிரில் மற்றும் பம்பர், மிக நேர்த்தியான ஷார்ப் எட்ஜ் பெற்ற புராஜெக்டர் ஹெட்லைட் , பகல் நேர ரன்னிங் விளக்குகள் மிகுந்த கம்பீரத்தை வழங்குகின்றது.

இந்த மாடலின் நீளம் 3,990 மிமீ , அகலம் 1,739 மிமீ மற்றும் உயரம் 1,643 மிமீ ஆகும். கிரவுண்ட் கிளியரண்ஸ் 182 மிமீ ஆகும்.  ட்ரைபர் காரின் மொத்த எடை 947 கிலோ கிராம் ஆகும். இந்த மாடலின் டாப் வேரியண்டில் 15 அங்குல அலாய் வீல் மற்றும் பேஸ் வேரியண்டுகளில் 14 அங்குல வீல் பொருத்தப்பட்டுள்ளது.

triber interior

இன்டிரியர் சிறப்புகள்

8 அங்குல தொடு திரை  இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்  ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உட்பட யூஎஸ்பி வாயிலாக வீடியோ பிளே செய்யும் ஆப்ஷனை வழங்கியுள்ளது. ஓட்டுநருக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 அங்குல எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர், எரிபொருள் அளவு, உட்பட என்ஜின் வெப்பம் போன்றவற்றை அறிந்து கொள்ள இயலும்.

2,636 மிமீ வீல்பேஸ் பெற்றுள்ள ட்ரைபர் காரில் மொத்தமாக 7 இருக்கைகளை பெற்றுள்ளது. இதில் மூன்றாவது வரிசை இருக்கையில் சிறுவர்கள் அமருதற்கு ஏற்றதாக விளங்கும். மூன்றாவது வரிசை இருக்கையை நமது தேவைக்கேற்ப பொருத்திக் கொள்ளவோ அல்லது நீக்குவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசைக்கு ஏசி வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

triber seat view

மூன்று வரிசை இருக்கையும் பொருத்திருக்கின்ற நேரத்தில் காரின் லக்கேஜ் அளவு வெறும் 84 லிட்டர் கொள்ளளவு மட்டும் ஆகும். அதுவே மூன்றாவது வரிசை இருக்கையின் ஒரு இருக்கையை நீக்கினால் 320 லிட்டர் கொள்ளளவு ஸ்பேஸ், இரண்டினை நீக்கினால் அதிகபட்சமாக 625 லிட்டர் கொள்ளளவு வரை பெறலாம்.

டிரைபரின் என்ஜின்

1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ்டு விவிடி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரு விதமாக கிடைக்க உள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் பிறகு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

ரெனோ ட்ரைபரின் மைலேஜ் லிட்டருக்கு 20.5 கிமீ வழங்கும் என ஆராய் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.

Renault Triber

பாதுகாப்பு வசதிகள்

பாரத் கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ற மாடலாக விளங்க உள்ள ட்ரைபரில் அடிப்படையாக அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட், டூயல் முன்பக்க ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உடன் இபிடி, பார்க்கிங் சென்சார், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், மற்றும் உயர் ரக மாடல்களில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா கொண்டதாக விளங்கும்.

இதுதவிர டாப் வேரியண்டில் அதிகபட்சமாக நான்கு ஏர்பேக்குகள் வழங்கப்பட்டிருக்கும். ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான ஏர்பேக் உட்பட பக்கவாட்டு ஏர்பேக் மற்றும் முன் ஏர்பேக் வழங்கப்பட்டிருக்கும்.

ரெனோ ட்ரைபர் கார் விலை பட்டியல்

முதற்கட்டமாக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ரெனால்ட் ட்ரைபர் கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற டிரைபர் அடுத்த சில மாதங்களில் வெளியாகலாம்.

RxE ரூ. 4.95 லட்சம்

RxL ரூ. 5.49 லட்சம்

RxS ரூ. 5.99 லட்சம்

RxZ ரூ. 6.49 லட்சம்

Renault-Triber-price-list

 

Renault Triber Image Gallery

Most Popular