ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் விற்பனைக்கு வெளியானது

0

2020 Skoda Rapid at

ரூ.9.49 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு ஸ்கோடா ரேபிட் செடான் ரக மாடலின் ஆட்டோமேட்டிக் வெளியிடப்பட்டுள்ளது. மேனுவல் வேரியண்டை விட ரூ.1.50 லட்சம் வரை கூடுதலாக அமைந்துள்ளது.

Google News

கடந்த மாதம் முதல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் பெற்ற மாடலுக்கு ரூ.25,000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், 1.0 லிட்டர் TSI 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 110 ஹெச்பி பவர் மற்றும் 175 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இப்போது 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஆராய் சான்றிதழ் படி மைலேஜ் 16.24 கிமீ ஆக உள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா சிட்டி,ஹூண்டாய் வெர்னா,மாருதி சுசுகி சியாஸ், டொயோட்டா யாரீஸ் மற்றும் ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ போன்ற கார்களுக்கு கடுமையான போட்டியை ரேபிட் ஏற்படுத்த உள்ளது.

ஸ்கோடா ரேபிட் AT விலை பட்டியல்

Rider Plus AT – ரூ. 9,49,000

Ambition AT – ரூ. 11,29,000

Onyx AT – ரூ. 11,49,000

Style AT – ரூ. 12,99,000

Monte Carlo AT – ரூ. 13,29,000