300 கிமீ ரேஞ்சு.., 8 வருட வாரண்டி டாடா நெக்ஸான் EV எஸ்யூவி எதிர்பார்ப்புகள்

 

nexon ev

இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ள டாடா நெக்ஸான் EV எஸ்யூவி காரில் இடம்பெற உள்ள சில முக்கிய விபரங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜிப்ட்ரான் எலக்ட்ரிக் காரின் பவர்ட்ரெயின் நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஜிப்ட்ரானின் முழுமையான நுட்ப விபரங்களை இந்நிறுவனம் வெளியிடவில்லை, தற்போது வந்துள்ள விபரத்தின் படி குறைந்தபட்ச ரேஞ்ச் 250 கிமீ – 300 கிமீ என தொடங்குவதுடன் மிக வேகமாக சார்ஜிங் செய்வதற்கான விரைவு சார்ஜிங் வசதி ஆப்ஷன் உட்பட லித்தியம் ஐயன் செல் கொண்ட பேட்டரியை பாதுகாக்க லிக்யூடு கூல்டு வசதியுடன், ஐடியல் வெப்பத்தை பராமரிக்கும் நோக்கில் வழங்கப்படும்.  உயர் ரக ஸ்டீல் பேக்கில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பேட்டரிக்கு IP67 சான்றிதழ் பெற்றிருக்கும். எனவே, தூசு மற்றும் நீரினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. டாடாவின் எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 8 ஆண்டு வாரண்டி அல்லது 1,60,000 கிமீ வழங்கப்பட உள்ளது.

#TheUltimateElectricDrive விளம்பர பிரச்சாரத்தின் மூலம் மிக கடுமையான மனாலி முதல் லலே வரையிலான சாலை  கடினமான பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும். டாடா மோட்டார்ஸ், அனைத்து வகையான வெப்பநிலை, நிலப்பரப்புகள் மற்றும் உயரமான இடங்களில் கையாளும் திறன் கொண்டது என்பதைக் காட்ட நெக்ஸான் மின்சார கார் ஒரு சோதனையாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ், மணாலியில் இருந்து லே வரை இயக்கப்படும் முதல் மின்சார காராக நெக்ஸான் விளங்கும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஜிப்ட்ரான்

நெக்ஸான் இ.வி காரில் இரண்டு விதமான வேரியண்டுகள் இடம் பெற்றிருக்கும். பொதுவாக இந்த காரில்  28.8 kwh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 95kW பவர் மற்றும் 254 Nm டார்க் வெளிப்படுத்தலாம்.

இந்தியன் டிரைவிங் சைக்கிள் படி 300 கிமீ வரம்பை ஒற்றை முறை சார்ஜிங்கில் வழங்குவதுடன், அதிகபட்சமாக 80 சதவீத சார்ஜிங் பெற டிசி ஃபாஸ்ட் சார்ஜர் வாயிலாக ஒரு மணி நேரத்திலும், சாதாரன ஏசி சார்ஜரில் 7-8 மணி நேரம் முழுமையாக சார்ஜ் செய்ய தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா நெக்ஸான் EV காரின் விலை ரூ.15 லட்சம் முதல் ரூ.17 லட்சத்தில் அமையலாம்.