1.50 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த டாடா நெக்ஸான்

 

tata nexon suv

4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட நெக்ஸான் எஸ்யூவி காரின் உற்பத்தி எண்ணிக்கை 1,50,000 இலக்கை கடந்த சாதனை படைத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த எஸ்யூவி கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டது.

2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட டாடா நெக்ஸான் எஸ்யூவி மிக குறைந்த காலத்தில் அமோகமான வரவேற்பினை சந்தையில் பெற துவங்கிய நிலையில் மிக கடுமையான போட்டியாளர்களாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி 300,  ஹூண்டாய் வென்யூ, டொயோட்டா அர்பன் க்ரூஸர், புதிதாக வந்த கியா சொனெட் போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது.

சர்வதேச கிராஷ் டெஸ்ட் மையத்தில் பாதுகாப்பு சார்ந்த சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற காராக நெக்ஸான் விளங்குகின்றது. டாடா மோட்டார்சின் ரஞ்சன்கோன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

web title : Tata Nexon Production Crosses 1.5 Lakh Units