ரூ.5.75 லட்சத்தில் டாடா டிகோர் கார் விற்பனைக்கு வெளியானது

0

2020 tata tigor

ரூ.5.75 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ள டாடா டிகோர் செடான் மாடல் மிக ஸ்டைலிஷான ஸ்போர்டிவ் லுக் பெற்ற பூட்டை கொண்டு விளங்குகின்றது.  பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்ட என்ஜினை பெற்றுள்ளது.

Google News

முந்தைய மாடலின் தோற்ற அமைப்பிலிருந்து டிகோர் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் புதிய கிரில் மற்றும் குரோம் ஸ்ட்ரிப் உடன் புதுவிதமான ட்ரை ஏரோ தோற்ற அமைப்பினை கொண்டுள்ளது. இரட்டை நிறத்திலான அலாய் வீல், கருப்பு நிறத்தை பெற்ற மேற்கூறை மற்றும் ஓஆர்விஎம் கொண்டுள்ளது. இன்டிரியரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கொண்டுள்ளது.

பிஎஸ்4 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் இடம்பெற்றிருந்த நிலையில், இனி வரவுள்ள மாடலில் 1.05 டீசல் என்ஜின் கைவிடப்பட உள்ளது. பிஸ்6 பெட்ரோல் என்ஜின் தொடர்ந்து 86 ஹெச்பி மற்றும் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

tata nexon

சமீபத்தில் இந்த மாடல் குளோபல் என்சிஏபி சோதனையின் மூலம் கிராஷ் டெஸ்டில் 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள் பாதுகாப்பில் மூன்று நட்சத்திரங்களை கொண்டுள்ளது.

பிஎஸ்6 விலை ( எக்ஸ்ஷோரூம்)
Tigor XE ரூ. 5.75 லட்சம்
Tigor XM ரூ. 6.1 லட்சம்
Tigor XZ ரூ. 6.5 லட்சம்
Tigor XMA ரூ. 6.6 லட்சம்
Tigor XZ+ ரூ. 6.99 லட்சம்
Tigor XZA+ ரூ. 7.49 லட்சம்

மேலும் படிங்க – ரூ.5.29 லட்சத்தில் வந்த டாடா அல்ட்ரோஸ் விபரம்

ரூ.6.95 லட்சத்தில் வந்த டாடா நெக்ஸான் எஸ்யூவி விபரம்

tata cars