2021 டாடா டிகோர் EV காரின் டீசர் வெளியானது

0

tata tigor ev

டாடா மோட்டார்சின் புதிய ஜிப்ட்ரான் நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட டிகோர் EV விற்பனைக்கு வெளியிடுவதனை உறுதி செய்யும் வகையில் முதல் டீசர் வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்பாக விற்பனையில் உள்ள டிகோர் இவி காரில் வணிகரீததியான பயன்பாட்டிற்கான Xpres-T மற்றும் தனிநபருகளுக்கான வாகனம் என இரண்டு வேரியண்டிலும்  72V, 21.5kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டு 41hp பவருடன் 105Nm டார்க்கினை வழங்குகின்றது.

இந்நிறுவனத்தின் புதிய ஜிப்ட்ரான் எலக்ட்ரிக் தொழில்நுட்பத்தை பெற்ற இரண்டாவது மாடலாக டிகோர் விளங்க உள்ளது. முன்பாக நெக்ஸான் விற்பனையில் 312 கிமீ ரேஞ்சுடன் கிடைத்து வருகின்றது.நெக்சானில் 30.2 KWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 128 ஹெச்பி பவர் மற்றும் 254 Nm டார்க் வெளிப்படுத்தும். 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.5 விநாடிகளும், 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.9 விநாடிகளில் எட்டிவிடும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 312 கிமீ ரேஞ்சு தரவல்லதாக ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள டிகோர் இவி காரின் உறுதியான நுட்ப விபரங்கள் தற்போதைக்கு வெளியாகவில்லை. தற்போதுள்ள மாடலை விட டிசைன் சார்ந்த அம்சங்கள் மேம்பாடுடன் மற்றும் வசதிகள் கூடுதலாக அமைந்திருக்கலாம்.