வோக்ஸ்வேகன் ஏமியோ, போலோ ஆண்டுவிழா பதிப்பு அறிமுகம்

0

VW Vento ALLSTARவோக்ஸ்வேகன் போலோ, வோக்ஸ்வேகன் ஏமியோ, வென்டோ ஆல்ஸ்டார், மற்றும் போலா ஜிடி ஸ்போர்ட் ஆகிய  என நான்கு மாடல்களிலும் 10வது  ஆண்டு விழா முன்னிட்டு எடிசன் வரையறுக்கப்பட்ட பதிப்பாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஜெர்மனி நாட்டின் வோக்ஸ்வேகன் இந்திய சந்தையில் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டியும் வருடந்தோறும் கொண்டாடப்படும் வோக்ஸ்ஃபெஸ்ட் முன்னிட்டு சிறப்பு எடிசன்களை வெளியிட்டுள்ளது.

வோக்ஸ்வேகன் போலோ

போலோ கம்ஃபார்ட் லைன் வேரியன்டை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள ஆனிவெர்சரி பதிப்பில் 15 அங்குல இரு வண்ண கலவை பெற்ற ரேஸார் அலாய் வீல், கருப்பு நிற இருக்கை கவர், தோற்ற அமைப்பில் கூடுதலான பாடி ஸ்டிக்கரிங் பெற்றுள்ளது.

போலோ சிறப்பு எடிசன் விலை ரூ.5.99 லட்சம்

VW Polo Anniversary Edition VW Polo Anniversary Edition features

வோக்ஸ்வேகன் ஏமியோ

ஏமியோ கம்ஃபார்ட் லைன் வேரியன்டை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள ஆனிவெர்சரி பதிப்பில் 15 அங்குல டோஸா அலாய் வீல், தேன்கூடு வடிவ இருக்கை கவர், தோற்ற அமைப்பில் கூடுதலான பாடி ஸ்டிக்கரிங் பெற்றுள்ளது.

ஏமியோ சிறப்பு எடிசன் விலை ரூ.5.79 லட்சம்

VW Ameo Anniversary Edition VW Ameo Anniversary Edition features

வோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆல்ஸ்டார்

வென்ட்டோ செடான் காரின் அடிப்பையில் வெளியாகியுள்ள வென்ட்டோ ஆல்ஸ்டார் மாடலில் 1.6 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் ஆகிய மாடல்களில் மட்டும் பெற்றுள்ளது. கம்ஃபோர்ட் லைன் வேரியன்ட் அடிப்படையில் லினா அலாய் வீல், அலுமினியம் பெடல், பிளாக் மற்றும் கிரே இன்டிரியர், லெதர் ஹேண்ட் பிரேக் மற்றும் ஆல்ஸ்டார் ஸ்கஃப் பிளேட் ஆகியவற்றை பெற்றதாக வரவுள்ளது.

இந்த மாடலின் விலை விபரம் வெளியிடப்படவில்லை

VW Vento ALLSTAR

வோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்

போலோ ஜிடி ஸ்போர்ட் மாடலில் இருவிதமான நிற கலவையுடன் கூடிய இந்த மாடலில் வெளிதோற்ற அமைப்பில் பாடி ஸ்டிக்கரிங், புதிய அப் ஹோல்ஸ்ட்ரி ஆகியவற்றை கொண்டுள்ளது.

volkswagen polo gt sport