1 லட்சம் கார்களை உற்பத்தி செய்த டட்சன் இந்தியா

Datsun 1 lakh car roll outநிசான் இந்தியா நிறுவனத்தின் கீழ் செயல்படும் டட்சன் இந்தியா பிராண்டில் ஒரு லட்சம் கார்களை உற்பத்தி செய்து புதிய சாதனையை எட்டியுள்ளது. சென்னையில் அமைந்துள்ள நிசான் ஆலையில் டட்சன் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது.

டட்சன் இந்தியா

datsun redi go 1.0 car

ரெனோ-நிசான் கூட்டணியில் அமைந்துள்ள சென்னை அருகே அமைந்துள்ள ஆலையில் ரெனோ கார்கள், நிசான் கார்கள் மற்றும் டட்சன் ஆகிய பிராண்டுகளில் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. டட்சன் பிராண்டில் கோ , கோ பிளஸ் மற்றும் ரெடிகோ ஆகிய கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மொத்தமாக 610 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கூட்டு ஆலையில் ஆண்டுக்கு 4,80,000 கார்கள் உற்பத்தி செய்யும் கொண்டிருக்கின்றது, கடந்த நிதி ஆண்டில் மொத்தம் 3,17,000 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில் முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 40 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

datsun go plus special edition

நிஸான் மோட்டார் இந்தியா தலைமை அதிகாரி பேசுகையில், இந்தியாவில் தற்போது 172 நகரங்களில் 275 க்கு மேற்பட்ட டீலர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் டட்சன் பிராண்டுக்கு என 100 டீலர்கள் உள்ள நிலையில் இதனை இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் 150 ஆக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

datsun go