ஜிஎஸ்டி வருகையால் கார் , எஸ்யூவி மற்றும் பைக்குகள் என பெரும்பாலும் விலை குறைக்கப்பட்ட நிலையில் மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி விலை ரூ. 1 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை குறைந்துள்ளது.
மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி
இந்தியாவில் மிட்சுபிஷி நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகின்ற எஸ்யூவி மாடல்களில் பிரசத்தி பெற்ற மாடலான பஜெரோ ஸ்போர்ட் மாடலில் சராசரியாக ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை டீலர்களை பொறுத்து விலை குறைக்கப்பட்டுள்ளது.
177 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 350 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. இதில் ஆல் வீல் டிரைவ் மற்றும் 2 வீல் டிரைவ் என இரண்டிலும் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
மாடல் | பழையது | ஜிஎஸ்டி | வித்தியாசம் |
Pajero Sport AT 4×2 | ரூ.27,69,120 | ரூ. 26,64,380 | ரூ. 1,04,740 |
Pajero Sport 2.5L AT 4×2 Special Edition | ரூ.28,18,610 | ரூ. 27,13,870 | ரூ. 1,04,740 |
Pajero Sport 2.5L MT 4×4 | ரூ. 28,09,520 | ரூ. 27,04,780 | ரூ. 1,04,740 |
Pajero Sport 2.5L MT 4×4 Special Edition | ரூ.28,59,010 | ரூ.27,54,270 | ரூ.1,04,740 |