ஆன்லைனில் அதிகம் பார்க்கப்பட்ட ஆட்டோ பிராண்டு : ஹீரோ மோட்டோகார்ப்

2 Min Read

இந்தியா ஆன்லைன் வீடியோ பார்வையாளர்களில் அதிகம் பார்க்கப்பட்ட  ஆட்டோ பிராண்டு என்ற பெருமையை ஹீரோ மோட்டோகார்ப் பெற்றுள்ளது. யூடியூப் , டிவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் உள்ள வீடியோ பார்வையாளர்களை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.

hero-xtreme-200s-1

வீடியேலை (vidooly) நடத்தி ஆய்வில் இந்தியாவில் 19 ஆட்டோ பிராண்டுகள் எடுத்துக்கொண்டதில் 1.3 மில்லியன் வீடியோ பார்வையாளர்களை பெற்று ஹீரோ மோட்டோகார்ப் பிராண்டு முன்னிலை வகிக்கின்றது.

மாருதி சுஸூகி , ஹூண்டாய் இந்தியா , மஹிந்திரா ஆட்டோ , டொயோட்டா இந்தியா , டட்சன் இந்தியா , ரெனோ இந்தியா, செவர்லே இந்தியா, ஃபோர்டு இந்தியா , ஹோண்டா இந்தியா , ஃபோக்ஸ்வேகன் இந்தியா ,  மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா, பிஎம்டபிள்யு இந்தியா மற்றும் ஆடி இந்தியா போன்ற 13 கார் நிறுவனங்களும் ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா இந்தியா , பஜாஜ் ஆட்டோ , டிவிஎஸ், யமஹா மற்றும் சுஸூகி மோட்டார்சைக்கிள்  என 6 பைக் பிராண்டுகள் என மொத்தம் 19 ஆட்டோ பிராண்டுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் வீடியோ பார்வை பட்டியல் – ஆட்டோ பிராண்டு

ஹீரோ மோட்டோகார்ப்  – 13,00,000

ஆடி இந்தியா – 5,24,000

செவர்லே இந்தியா – 4,14,000

மஹிந்திரா ஆட்டோ – 1,79,000

பிஎம்டபிள்யு இந்தியா – 1,65,000

அதிகப்படியான பார்வையாளர்களை பெறுவதில் யூடியூப் முதலிடத்திலும் அதனை தொடர்ந்து பேஸ்புக் , டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளது.

வீடியேலை இனை நிறுவனர் நிஷாத் கூறுகையில் இளம் பார்வையாளர்களை அதிகம் பெற்றுள்ள யூடியூப் வாயிலாக அதிக பார்வையாளர்களை வீடியோ சென்றடைய முக்கிய காரணமாக உள்ளது. மேலும் இன்ஸ்டாகிராம் ,  ஸ்னாப்சாட் மற்றும் பெரிஸ்கோப் போன்றவற்றிலும் ஆட்டோபிராண்டு பார்வையாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.  வரும் காலத்தில் ஆட்டோ பிராண்டுகள் ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த டேட்டாவில் அதிக தகவலை வழங்குவதன் வாயிலாக மிக இலகுவாக சென்றடைய வாய்ப்புள்ளது தெரிவித்துள்ளார்.

hero-karizma-zmr

இந்த வருடத்தில் 400,000 மணி நேர விளம்பரங்களை இந்தியர்கள்  யூடியூப் வழியாக பார்த்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. பேஸ்புக் பயன்படுத்துவதில் இந்தியர்கள் அமெரிக்காவினை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளனராம்.

 

 

 

Share This Article
Follow:
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.