2 லட்சம் தோஸ்த் வாகனங்களை உற்பத்தி செய்த அசோக் லேலண்ட்

0

இந்தியாவின் முன்னணி வர்த்தக வாகன தயாரிப்பாளரான, அசோக் லேலண்ட் நிறுவனம் எல்சிவி பிரிவில் விற்பனை செய்கின்ற தோஸ்த் மினி டிரக் மாடல் 2 லட்சம் உற்பத்தி எண்ணிக்கையை எட்டியுள்ளது.

தோஸ்த் மினி டிரக்

ஓசூரில் அமைந்துள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இலகுரக ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற தோஸ்த் ரக வாகன எண்ணிக்கை உற்பத்தி 2 லட்சத்தை கடந்த புதிய சாதனையை படைத்துள்ளது. கடந்த மார்ச் 31ந் தேதி தோஸ்த் உற்பத்தி பிரிவில் 2 லட்சமாவது கோல்ட் பீஜ் நிறத்திலான தோஸ்த் உற்பத்தி ஆகி வந்துள்ளதாக பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் நிதின் சேத் குறிப்பிட்டுள்ளார்.

Google News

இலகுரக வரத்தக வாகனங்கள் பிரிவில் 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தோஸ்த் வாகனம், 1 லட்சமாவது வாகன உற்பத்தியை மார்ச் 2015யில் எட்டியுள்ளது. தற்போது 2 லட்சமாவது உற்பத்தியை எட்டியுள்ளது.

ஆரம்பத்தில் மாதந்திர 2500 அலகுகள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் படிப்படியாக விற்பனை அதிகரித்து , தற்போது மாதந்திர எண்ணிக்கை 5000 ஆக உயர்ந்துள்ளது.