ஒரே நாளில் 3 லட்சம் பைக்குகளை விற்பனை செய்த ஹீரோ – தந்தேரஸ்

hero duet mastero edgeஉலகின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் தந்தேரஸ் எனப்படும் தீபாவளிக்கு முந்தைய நாளில் மட்டும் 3 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.

3 லட்சம் பைக்குகள்

hero maestro edge

இந்தியாவின் முதன்மையான மோட்டார்சைக்கிள் நிறுவனம் என்ற பெருமைக்குரிய ஹீரோ மோட்டோகார்ப் எந்தவொரு நிறுவனமும் நிகழ்த்த இயலாத புதியதோர் சாதனையை படைத்துள்ளது. ஒரே நாளில் மொத்தம் 3 லட்சம் இருச்சகர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த மாதந்திர நிலவரப்படி இந்நிறுவனம் 7 லட்சம் பைக்குகள் மற்றும் ஸ்கட்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்திருந்த நிலையில், மேலும் முதன்முறையாக 2017-18 நிதி ஆண்டின் இரண்டாவது காலண்டில் 20  லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது என்பதும் இங்கே குறிப்பிடதக்கதாகும்.

NewHeroXtremeSports

தந்தேரஸ்

இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பெரும்பாலான வடஇந்திய பகுதிகளில் 5 நாட்களாக கொண்டப்பட்டு வரும் நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேரஸ் (Dhanteras) என குறிப்பிடுகிறார்கள்.

இந்துக்களில் நம்பிக்கைப்படி தீபாவளிக்கு முந்தைய நாளில் கொண்டாடப்படுகின்ற தந்தேரஸ் எனப்படும் நாளில் தங்கம், வெள்ளி, பித்தளை, இரும்பு அல்லது தாமிரம் எதேனும் ஒரு பொருட்களில் முதலீடு செய்தால் செல்வச் செழிப்பை வருடம் முழுவதும் பெறலாம் என்பது நம்பிக்கையாகும்.