77% வளர்ச்சியை அடைந்த ரெனால்ட் கார் விற்பனை நவம்பர் 2019

0

Renault Triber front

முன்னணி ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் விற்பனை நவம்பர் 2019 மாதத்தில் 10,882 கார்களை விற்பனை செய்துள்ளது.

Google News

இந்நிறுவனத்தின் புதிய அறிமுக மாடல்களான மேம்பட்ட ரெனால்ட் ட்ரைபர், ரெனால்ட் க்விட் என இரு மாடல்களும் சந்தையில் சீரான விற்பனையை பதிவு செய்து வருகின்றது. குறிப்பாக ரெனோவின் ட்ரைபர் 7 இருக்கை கொண்ட மிக குறைந்த விலை எம்பிவி ரக மாடலாக விளங்கி வருகின்றது.

கடந்த நவம்பர் 2019  விற்பனையில் 10,882 யூனிட்டுகளை டெலிவரி வழங்கி உள்ளது. இதே காலத்தில் முந்தைய ஆண்டு இதே மாதம் நவம்பர் 2018-ல் 6,134 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. எனவே, முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 77 % வளர்ச்சி பெற்றுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய மாருதி சுசுகி 3.2 % வீழ்ச்சியும், ஹோண்டா 50 % வீழ்ச்சியும் பதிவு செய்துள்ளது. ரெனோ நிறுவனத்தை தவிர வோக்ஸ்வேகன் 17 % வளர்ச்சி மற்றும் ஹூண்டாய் 2 % வளர்ச்சியை நவம்பர் 2019-ல் பதிவு செய்துள்ளது.