ஜன., 1 முதல் ரெனால்ட் இந்தியா கார்கள் விலை உயருகின்றது

renault kwid 02 anniversary editionரெனால்ட் இந்தியா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற க்விட், லாட்ஜி மற்றும் டஸ்ட்டர் ஆகிய மூன்று மாடல்களின் விலையை 3 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

ரெனால்ட் கார்கள் விலை

renault duster petrol

இந்தியாவின் மாருதி சுசூகி, டொயோட்டா, ஹோண்டா, ஸ்கோடா, டாடா , மஹிந்திரா உட்பட பெரும்பாலான மோட்டார் நிறுவனங்கள் விலையை ஜனவரி 1, 2018 முதல் அதிகரித்துள்ள நிலையில், அந்த வரிசையில் ரெனால்ட் இந்தியா நிறுவனமும் இணைந்துள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயர்ந்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதனாலும் விலை உயர்வை அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் அறிமுகம் செய்த ரெனால்ட் கேப்டூர் எஸ்யூவி தவிர க்விட், லாட்ஜி மற்றும் டஸ்ட்டர் மாடல்களின் விலை 3 % வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.