டாடா எலக்ட்ரிக் கார் வருகை விபரம்

tata c cube concept frontமத்திய அரசு மோட்டார் துறையில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு மாற்றாக மின்சார கார்களின் திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

டாடா எலக்ட்ரிக் கார்

இந்திய சந்தையில் மின்சார கார் துறையில் மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனம் மட்டும் செயல்பட்டு வரும் நிலையில் பல்வேறு மோட்டார் தயாரிப்பாளர்களும் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்களை வடிவமைப்பதில் தீவரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் உள்ளது.

tata tiago amt

நேற்று நடைபெற்ற 57வது ஆண்டு சியாம் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெண்டர் பட்ஷெக் கூறுகையில் டாடா நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவில் தற்போது உள்ள பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தங்களது மற்றொரு நிறுவனமான ஜாகுவார் மின்சார கார்களுக்கு தனியான ஐ-பேஸ் பிளாட்ஃபாரத்தை போல் அல்லாமல், பயன்பாட்டில் உள்ள பிளாட்பாரத்தில் உள்ள கார்களின் அடிப்படையில் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான பவர்ட்ரெயின் அம்சத்தை செயல்படுத்த உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

tata amp platform suv

சமீபத்தில் புதிதாக டாடா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஏஎம்பி பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட்ட உள்ள முதல் மின்சார கார் 2019 ஆம் வருடத்தில் விற்பனைக்கு வெளியிடப்படும், எனவும் இந்த மாடல் பிரிமியம் ஹேட்ச்பேக் காராக இருக்கும் எனவும், விற்பனையில் உள்ள டியாகோ மற்றும் குறைந்த விலை நானோ மற்றும் போல்ட் ஆகிய கார்களில் மின்சாரத்தில் இயங்கும் அமைப்புகள் ஏற்படுத்த உள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

tataboltfront