இந்தியாவில் KTM 390 அட்வென்ச்சர் டூரர் ரக பைக் மாடல் 2019 ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கேடிஎம் உறுதிப்படுத்தியுள்ளது. கேடிஎம் 1290 சூப்பர் அட்வென்ச்சர் பைக் மாடலின் அடிப்படை வடிவத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
KTM 390 அட்வென்ச்சர்
சர்வதேச அளவில் அட்வென்ச்சர் டூரர் ரக மோட்டார்சைக்கிள் மீதான கவனத்தை மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர்கள் உருவாக்கி வரும் நிலையில் , சந்தையில் உள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், கவாஸாகி வெர்சிஸ்-X 300, மற்றும் பிஎம்டபிள்யூ ஜி 310ஜிஎஸ் ஆகிய மாடல்களை கேடிஎம் 390 அட்வென்ச்சர் எதிர்கொள்ள உள்ளது. இதைத் தவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் குறைந்த விலை ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கும் சந்தையில் களமிறங்க தயாராகி வருகின்றது.
தற்போது சந்தையில் விற்பனையில் உள்ள கேடிஎம் டியூக் 380 , ஆர்சி 390 மாடல்களில் இடம்பெற்றுள்ள 373 சிசி எஞ்சினை பெற்றதாக வரவுள்ள 390 ADV மாடலில் பெரும்பாலான பாகங்கள் விற்பனையில் உள்ள 1290 சூப்பர் அட்வென்ச்சர் மாடலின் அடிப்படையில் பெற்றிருக்கும் என்பமதனால் மிகவும் நேர்த்தியான உயர்தர கட்டமைப்பினை வெளிப்படுத்தும் என்பதனால் மிகவும் சவாலான விலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நவம்பர் 2018யில் நடைபெற உள்ள EICMA 2018 மோட்டார் வாகன கண்காட்சி அரங்கில் அதிகார்வப்பூர்வமாக கேடிஎம் 390 அட்வென்ச்சர் அறிமுகம் செய்யப்படுவதனை தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.