நீரிலும் நிலத்திலும் இயங்கும் டாப் 10 கார்கள் – ஆம்பிபியஸ்

0
ஆட்டோமொபைல் உலகின் சுவாரஸ்யங்களில் நீரிலும் நிலத்திலும் (ஆம்பிபியஸ்) இயங்கும் வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. உலகின் டாப் 10 ஆம்பிபியஸ் கார்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் கானலாம்.

ஆம்பிபியஸ்

ஆம்பிபியஸ் என்றால் நீரிலும் நிலத்திலும் இயங்கூடிய மோட்டார் வாகனமாகும்.  சைக்கிள் , கார் , ஏடிவி , பஸ் , டிரக் , படகு என அனைத்திலும் ஆம்பிபியஸ் உள்ளது. இரண்டாம் உலகப்போரில் ஆம்பிபியஸ் டாங்கிகள் மிக பெரும் பங்கு வகித்துள்ளது.

ரீவைண்ட் :

நீரிலும் நிலத்திலும் இயங்கும் கார்களின் வரலாறு 1770ம் ஆண்டுகளில் தொடங்கியது. ஆனால் நீராவி என்ஜின் மூலம் இயங்கும் முதல் ஆம்பிபியஸ் வாகனத்தினை வெற்றிகரமாக இயக்கியவர் அமெரிக்காவின் ஆலிவர் இவான்ஸ்  என்ற விஞ்ஞானி ஆவார். அதன் பெயர் ஆர்கேடர் ஆம்பிபோலோஸ் என்பதாகும். 1960ம் ஆண்டிற்க்கு பிறகு பெரும்பாலான ஆம்பிபியஸ் வாகனங்கள் பயன்பாட்டிற்க்கு வரத்தொடங்கின.

ஆர்கேடர் ஆம்பிபோலோஸ்

#10 கிப்ஸ் குவாட்ஸ்கீ

கிப்ஸ் ஸ்போர்ட்ஸ் ஆம்பிபியன்ஸ் நிறுவனத்தால் கிப்ஸ் குவாட்ஸ்கீ ஆம்பிபியன் ஏடிவி மற்றும் நீரிலும் இயங்க்கூடிய வாகனமாகும். அக்டோபர் 2012ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த குவாட்ஸ்கீ  நீரிலும் நிலத்திலும் மணிக்கு 72கீமி வேகத்தில் பயணிக்க வல்லதாகும். நீருக்கும் நிலத்திற்க்கும் 5 விநாடிகளில் மாறிக்கொள்ளும் தன்மையுடையதாகும்.

கிப்ஸ் குவாட்ஸ்கீ

#9 ஆம்பிகார்

1961ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆம்பிகார் ஜெர்மனி நிறுவனத்தால் சுமார் 4000 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு சிறப்பாக விற்பனை செய்யப்பட்ட மாடலாகும்.

ஆம்பிகார்

#8 கிப்ஸ் அக்வடா

கிப்ஸ் ஸ்போர்ட்ஸ் ஆம்பிபியன்ஸ் நிறுவனத்தால் கிப்ஸ் அக்வடா காரில் நில வேகம் மணிக்கு 160கிமீ மற்றம் நீர் வேகம் மணிக்கு 50கிமீ ஆகும்.  முதன்முறையாக இங்கிலிஷ் கால்வாயை 1 மணி நேரம் 40 நொடிகள் 6 விநாடிகளை எடுத்துக்கொண்ட கடந்த முதல் நீரிலும் நிலத்திலும் இயங்கும் வாகனமாகும். இதனை இயக்கியவர் ரிச்சர்டு பிரான்சன் ஆவார்.

கிப்ஸ் அக்வடா

#7  ரின்ஸ்பீடு ஸ்பிளாஷ்

இயற்கை எரிவாயுவில் இயங்கும் உலகின் முதல் ஆம்பிபியஸ் வாகனமான ரின்ஸ்பீடு ஸ்பிளாஷ் காரை ஸ்வீஸ் ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனம் ரின்ஸ்பீடு வடிவமைத்துள்ளது.  இதன் நில வேகம் மணிக்கு 200கிமீ மற்றம் நீர் வேகம் மணிக்கு 50கிமீ ஆகும்.

 ரின்ஸ்பீடு ஸ்பிளாஷ்

#6 சீரோடர் லம்போர்கினி கவுன்டேக்

உலகின் முதல் லம்போர்கினி காரின் ஆம்பிபியஸ் மாடலை சீரோடர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. சிறப்பான ஆற்றலுடன் நல்ல செயல்தினை வெளிப்படுதும் மாடலாகும்.

சீரோடர் லம்போர்கினி கவுன்டேக்

#5 கீப்ஸ் ஹம்டிங்கா

5 இருக்கைகளை கொண்ட ஹம்டிங்கா மாடலில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனடன் 450 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் நில வேகம் மணிக்கு 160கிமீ மற்றம் நீர் வேகம் மணிக்கு 65கிமீ ஆகும்.

கீப்ஸ் ஹம்டிங்கா

#4  ஹைட்ரா ஸ்பைடர்

மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் ஸ்போர்ட்டிவ் தோற்றத்தில் விளங்கும் ஹைட்ரா ஸ்பைடர் ஆம்பிபியஸ் காரின் நில வேகம் மணிக்கு 201கிமீ மற்றம் நீர் வேகம் மணிக்கு 85கிமீ ஆகும். இதில் 400 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தம் கவெர்டி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஹைட்ரா ஸ்பைடர்

#3 டாபர்டின் ஹைட்ரோகார்

அலுமினியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளடாபர்டின் ஹைட்ரோகார் இரண்டு விதமான் மோட்களை கொண்டுள்ளது. லேண்ட்மோட் மற்றும் வாட்டர் மோட் என இரண்டு ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இதில் 762 ஹெச்பி ஆற்றலை வழங்கும் செவர்லே என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

டாபர்டின் ஹைட்ரோகார்

#2 சீ லயன்

கடல் சிங்கம் என்ற பெயரில் அமைந்துள்ள சீ லயன் ஆம்பிபியஸ் கார் உலகின் வேகமான நீரிலும் நிலத்திலும் காருக்கு இணையான வேகத்தினை இந்த காரும் பெற்றுள்ளது.  நீரில் இதன் வேகம் மணிக்கு 96கிமீ மற்றும் நிலத்தில் மணிக்கு 201 கிமீ ஆகும்.

சீ லயன்

#1 வாட்டர்கார் பாந்தர்

உலகின் மிக வேகமான ஆம்பிபியஸ் கார் என்றால் அது  வாட்டர்கார் பாந்தர் ஆகும். இந்த ஆம்பிபியசில் 300ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஹோண்டா என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. நீரில் இதன் வேகம் மணிக்கு 96கிமீ மற்றும் நிலத்தில் மணிக்கு 201 கிமீ ஆகும்.

வாட்டர்கார் பாந்தர்

ஜீப் CJ8 எஸ்யூவி கார் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள வாட்டர்கார் பாந்தர் ஆம்பிபியஸ் எஸ்யூவி காராகும். இதன் விலை $ 135,000 (ரூ.8779245 ) ஆகும்.