உங்களை வியப்பில் ஆழ்த்தும் மோனோ ரயில் சுவாரஸ்யங்கள்..!

0

சென்னை மாநகரத்தின் அடுத்த போக்குவரத்து சாதனம் என்றால் மோனோ ரயில் தான், இந்த மோனோ ரெயில் பற்றி இதுவரை அதிகம் அறிந்திராத மற்றும் வியப்பில் ஆழ்த்தும் சுவாரஸ்யங்களுடன் நுட்பத்தையும் அறிந்து கொள்ளலாம்.

suspended monorail

Google News

மோனோ ரயில் என்றால் என்ன ?

மோனோ ரயில் என்றால் (mono means one) ஒற்றை ரயிலுக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையான டிராக் அல்லது பீம் வாயிலாக பயணிக்கும் போக்குவரத்து துறை சார்ந்த ரயிலாகும். இந்த ரயில்கள் இரண்டு வகை சக்கரங்களை மட்டுமே கொண்டு இயங்கும் தன்மையை கொண்டதாகும்.

mumbai monorail

ஒரு வகை சக்கரம் ரெயில் எடை தாங்குவதற்கும், மற்றொரு பிரிவு சக்கரம் டிராக்கில் கிரிப்பாக பயணிக்க உதவுகின்றது. தற்போது பெரும்பாலான மோனோ ரெயில்கள் மின்சாரத்தில் இயக்கப்பட்டு வருகின்றது. பொதுவாக நடுத்தர மற்றும் மெட்ரோ நகரங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் மோனோ ரெயில் திட்டம் பயணிகளுக்கு மிகவும் சிறப்பான பயணத்தை வழங்கும் வகையில் சில நாடுகளில் ஏசி உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பெரும்பாலான நாடுகளில் டிராக் மேல் பயணிக்கும் வகையிலே மோனோரயில் செயல்படுத்தப்படட்டாலும், சில இடங்களில் மட்டுமே தொங்கும் அமைப்பிலும் இந்த ரெயில்கள் பயணிக்கின்றன.

chennai monorail

மோனோ ரெயில் வரலாறு

முதன்முறையாக மோனோ ரெயில் 1820 ஆம் ஆண்டு ரஷ்யாவின் இவான் எல்மேனோவ் எனும் ஆய்வாளர் உருவாக்கினார்.

1888 ஆம் ஆண்டு முதன்முறையாக பொது போக்குவரத்து சார்ந்த பயன்பாட்டிற்கு இந்த ரெயில் செயல்படுத்தப்பட்டது.

பிரசத்தி பெற்ற டிஸ்னிலேண்ட் சுற்றுலா தலத்தின் 1959 ஆம் ஆண்டு முதலே மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தினசரி இந்த ரெயில் 1.50 லட்சம் மக்கள் பயணிக்கிறார்கள்.

மோனோ ரெயில்கள் வயர், மக்கள் மற்றும் கால்நடைகள் போன்றவற்றில் எந்தவொரு பாதிப்பும் எற்படாது.

monorail wuppertal red

தற்போது உலகிலேயே அதிக மோனோரெயில்களை இயக்கும் நாடாக ஜப்பான் உள்ளது.

உலிகின் மிக பழமையான மற்றும் இன்றைக்கும் செயல்படுகின்ற  மோனோரெயில் நிலையம் 1 Schwebebahn Wuppertal ஆகும். 1901 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது.

சுதந்திர இந்தியாவிற்கு முன்னதாகவே இந்தியாவில் மோனோரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பஞ்சாபில் பட்டியாலா மாநில மோனோரயில் திட்டம் என்ற பெயரில் 1901 முதல் 1927 ஆம் ஆண்டு வரை 80 கிமீ தொலைவுக்கு செயல்படுத்தப்பட்டது.

Patiala State Monorail

இந்தியாவில் முதல் மோனோரெயில் 2014 ஆம் ஆண்டு மும்பை மாநகரில் தொடங்கப்பட்டது.

monorail