4 நட்சத்திர மதிப்பை பெற்ற ரெனோ காப்டூர் – லத்தீன் கிராஷ் டெஸ்ட்

0

அடுத்த சில மாதங்களில் இந்தியா வரவுள்ள ரெனால்ட் காப்டூர் எஸ்யூவி காரின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள் வெளியாகியுள்ளது. பிரேசில் சந்தையில் விற்பனையில் உள்ள மாடல் வயது வந்தோர் பாதுகாப்பில் 4 நட்சத்திரமும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 5க்கு 3 நட்சத்திர பாதுகாப்பினையும் பெற்றுள்ளது.

renault kaptur crash

Google News

ரெனோ காப்டூர் – லத்தீன் கிராஷ் டெஸ்ட்

இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் புதிய ரெனோ காப்டூர் எஸ்யூவி பண்டிகை காலத்துக்கு முன்னதாக விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்ட மாடல் 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்று அசத்தியுள்ளது.

renault kaptur crash test

சோதனை செய்யப்பட கேப்டூர் மாடலில் 4 காற்றுபைகள் உள்பட எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் பெற்ற மாடலாக விளங்குகின்றது. இந்த மாடல் லத்தீன் கிராஷ்டெஸ்ட் சோதனையில் வயது வந்தோர் பாதுகாப்பில்  34 புள்ளிகளுக்கு 30.27 பெற்று 4 நட்சத்திரத்தை பெற்றது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 33.68 பெற்றதால் 3 நட்சத்திரத்தை பெற்றுள்ளது.

இதில் பொருத்தப்பட்டுள்ள ஏர்பேக்குகள் தலை மற்றும் கழுத்து போன்ற பகுதிகளுக்கு சிறப்பான பாதுகாப்பினையும், ஒட்டுநர் மார்பக பகுதிக்கு ஒரளவு பாதுகாப்பையும், பயணிகளுக்கு சிறப்பான பாதுகாப்பினையும் வழங்குகின்றது.

renault kaptur crash test latin

இந்தியா வருகை

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள காப்டூர் இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் உள்நாட்டிலே பெரும்பாலான பாகங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளதால் லத்தின் என்சிஏபி சோதனைக்கு இணையான மதிப்பீட்டை பெறுவது சந்தேகம்தான். ஏன் என்றால் சமீபத்தில் வெளிவந்த ரெனோ டஸ்ட்டர் குளோபல் என்சிஏபி சோதனையில் பூஜ்யம் மட்டுமே பெற்றது இங்கே குறிப்பிடதக்கதாகும்.