யெட்டி எஸ்யூவிக்கு மாற்றாக ஸ்கோடா கராக் எஸ்யூவி மே18ந் தேதி அறிமுகம்

0

வருகின்ற மே 18ந் தேதி புதிய ஸ்கோடா கராக் (Karoq) எஸ்யூவி கார் மாடலை யெட்டி எஸ்யூவிக்கு மாற்றாக ஸ்கோடா ஆட்டோ அறிமுகப்படுத்த உள்ளது. கராக் மாடல் கோடியாக் எஸ்யூவி காரை அடிப்படையாக கொண்ட புதிய மாடலாகும்.

Skoda Karoq front

ஸ்கோடா கராக் எஸ்யூவி

வோல்ஸ்வகேன் குழுமத்தின் அங்கமராக செயல்படுகின்ற செக் குடியரசின் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் யெட்டி எஸ்யூவிக்கு மாற்றாக வரவுள்ள புதிய கராக் எஸ்யூவி காரானது, சமீபத்தில் வெளியான கோடியாக் எஸ்யூவி ஆடி ஏ3 மற்றும் வோல்ஸ்வேகன் டிகுவான் போன்ற மாடல்களை அடிப்படையாக கொண்ட வோல்ஸ்வேகன் MQB வடிவமைப்பு தளத்தினை கொண்டு வடிவமைக்கப்பட்ட மாடலாகவே புதிய கராக் வரவுள்ளது.

Skoda Karoq profile camoufl

விற்பனையில் உள்ள எட்டி மாடலுக்கு முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பை பெற்றிருப்பதுடன் கோடியாக் எஸ்யூவியின் வடிவ தாத்பரியங்களை தூண்டுதலாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மாடல் வீல்பேஸ் எட்டி -யை விட கூடுதலாக பெற்ற 2638மிமீ கொண்டிருப்பதானல் சிறப்பான இடவசதியை பெற்றதாக இருக்கும்.

கராக் பெயர் விளக்கம்

கராக் (KAROQ) என்ற வார்த்தையை அலாஸ்கா மொழியிலிருந்து ஸ்கோடா உருவாக்கியுள்ளது. KAA’RAQ” என்ற வார்த்தை அடிப்பையிலே KAROQ உருவாகியுள்ளது. kaar (car-கார்) மற்றும் “RUQ” (arrow -அம்பு) இதனை சுருக்கியே KAROQ எனும் கராக் உருவாக்கப்பட்டுள்ளது.

2018 Skoda Karoq New Generation Yeti

இந்த எஸ்யூவி காரின் நீளம் 4,382 மிமீ, 1,841 மிமீ அகலம் மற்றும் 1,605 மிமீ உயரத்தை பெற்றிருப்பதுடன். முன்பக்க வீல் டிரைவ் கொண்ட மாடலுக்கு 2,638 மிமீ மற்றும் ஆல் வீல் டிரைவ் மாடலுக்கு 2,630 மிமீ கொண்ட வீல்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 588 லிட்டர் கொள்ளளவுகொண்ட பூட்வசதியை அதிகரிக்கும் பொழுது அதிகபட்சமாக 1810 லிட்டர் கொள்ளளவு வரை பெறலாம்.

எஞ்சின் விபரங்கள் குறித்து எந்த அதிகார்வப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. மே 18ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த கராக் எஸ்யூவி மாடல் சர்வதேச அளவில் இந்தாண்டின் இறுதியில் விற்பனைக்கு செல்ல உள்ளதால் இந்தியாவில் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஸ்கோடா கராக் (Karoq) எஸ்யூவி குறிப்புகள்
  • மே 18ந் தேதி ஸ்கோடா கராக் (Karoq) எஸ்யூவி கார் வெளியிடப்பட உள்ளது.
  • கோடியாக் எஸ்யூவியை அடிப்படையாக கொண்டதாகும்.
  • காராக் எஞ்சின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Skoda Karoq rear camouflaged