1 லட்சம் டியாகோ கார்கள் உற்பத்தியை எட்டியது – டாடா மோட்டார்ஸ்

0

Tata Tiago roll out 100000இந்தியாவின் முன்னணி தொழிற்குழுமங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற டாடா டியாகோ கார் உற்பத்தி ஒரு லட்சம் என்ற இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது.

டியாகோ கார்

tata tiago amt

டாடா நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவை மிக கடுமையான சவால்களில் இருந்து மீட்டெடுத்த டியாகோ கார் இந்நிறுவனத்தின் முதல் இம்பேக்ட் டிசைன் தாத்பரியத்தை கொண்டு வடிவமைக்கப்பட்ட மாடலாகும். டாடாவின் மற்ற மாடல்களான டிகோர்,ஹெக்ஸா மற்றும் புதிய நெக்ஸான் எஸ்யூவி ஆகியவை இதே பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டதாகும்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சனந்த் தொழ்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற டியாகோ கார், கடந்த 19 மாதங்களில் 1,00,000 கார்களை உற்பத்தி செய்து சாதனையை படைத்துள்ளது. விற்பனை செய்யப்படுகின்ற பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் பெட்ரோல் காருக்கு அதிகப்படியான வரவேற்பினை பெற்றுள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

tata tiago

69பிஹெச்பி ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையில் உள்ள  செலிரியோ , கிராண்ட் ஐ 10 , வேகன் ஆர் ஆகியவற்றுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

tata tiago