ரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது

டாடா இன்ட்ரா டிரக்
டாடா இன்ட்ரா டிரக் விபரம்

ரூ.5.35 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் மாடல் இரு விதமான என்ஜின் ஆப்ஷனில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ”சின்ன யானை” என அழைக்கப்படுகின்ற டாடா ஏஸ் வெற்றியை தொடர்ந்து இன்ட்ரா வெளியிடப்பட்டுள்ளது.

குட்டி யானைக்கு (டாடா ஏஸ்) மேலாக நிலை நிறுத்தப்பட்டுள்ள புதிய இன்ட்ரா 800சிசி மற்றும் 1.4 லிட்டர் என இரு டீசல் என்ஜின் தேர்வினை கொண்டதாக வந்துள்ளது.

டாடா இன்ட்ரா டிரக் சிறப்புகள்

இன்டராவின் அளவுகள் 4316 மிமீ நீளமும், 1639 மிமீ அகலமும், 1919 மிமீ உயரமும் கொண்டுள்ளது. 1100 கிலோ எடை தாங்கும் திறனுடன் வந்துள்ள இந்த டிரக்கில் 2512 மிமீ, 1602 மிமீ அகலமும் மற்றும் 463 மிமீ உயரமும் கொண்டதாக அமைந்துள்ளது.

டாடாவின் இன்ட்ரா டிரக்கில் மொபைல் சார்ஜிங் போர்ட், பவர் ஸ்டீயரிங், எலக்ட்ரானிக் கன்ட்ரோல் மற்றும் கூடுதலாக ஆப்ஷனல் ஏசி இணைக்கப்பட்டுள்ளது. 14 அங்குல வீல் கொண்டு இந்த மாடலில் உள்ள பிரத்தியேக கியர் அட்வைசர் (Gear Shift Advisor ) ஆனது சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்க உதவுகின்றது.

இன்ட்ரா V20 வேரியன்டில் 1.4 லிட்டர் (DI) டீசல் இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது. 1396 சிசி இயந்திரம் 69 bhp at 4000 rpm பவரையும், மற்றும் 140 NM at 1800-3000 rpm டார்க் உருவாக்குகிறது. 5-வேக கியர்பாக்ஸ் கேபிள் ஷிப்ட் வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளது.

அடுத்தப்படியாக குறைந்த விலை டாடா இன்ட்ரா V10 டிரக்கில் 0.8 லி என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. 800 சிசி இயந்திரம் 39 BHP at 3750 rpm பவரையும், மற்றும் 90 NM at 1750 – 2500 rpm டார்க் உருவாக்குகிறது. 4-வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

intra truck

டாடா இன்ட்ரா டிரக் விலை பட்டியல்

டாடா இன்ட்ரா V20 விலை ரூ.5.85 லட்சம்

டாடா இன்ட்ரா V10 விலை ரூ.5.35 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

இந்த மாடலுக்கு போட்டியாக அசோக் லேலண்ட் தோஸ்த், பியாஜியோ போர்டர், மற்றும் மஹிந்திரா சுப்ரோ மேக்ஸி டிரக் போன்றவை விளங்குகின்றது.