இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற மொபட் ரக மடாலான எக்ஸ்எல் 100 அடிப்படையில் வின்னர் எடிசன் என்ற பிரத்தியேகமான பதிப்பை டிவிஎஸ் மோட்டார் விற்பனைக்கு ரூ.50,929 (எக்ஸ்ஷோரூம் சென்னை ) விலையில் வெளியிட்டுள்ளது.
1980-2020 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்ற டிவிஎஸ் நிறுவனத்தின் மொபட் மாடல்கள் 40 ஆண்டுகளாக மாபெரும் வெற்றியை பெற்றதாக விளங்கும் நிலையில், புதிய நீல நிறத்தை பெற்று பீஜ் நிறத்திலான பாடி என இரு வண்ண கலவையை கொண்டு, டேன் நிறத்திலான இருக்கை, க்ரோம் மிரர், க்ரோம் எக்ஸ்ஹாஸ்ட் மற்றும் மெட்டல் ஃபளோர் போர்டினை வின்னர் எடிசன் கொண்டுள்ளது.
எக்ஸ்எல் 100 மொபட்டில் 99.7சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 4.43 ஹெச்பி பவர் மற்றும் 6.50 என்எம் டார்க் வெளிப்படுத்தும். FI என்ஜினை பெற்றுள்ள இந்த மாடல் முன்பை விட 15 சதவீதம் கூடுதலான மைலேஜ் வெளிப்படுத்தும்.
கம்ஃபோர்ட், ஹெவி டூட்டி என இரு விதமான பிரிவில் விற்பனைக்கு வந்துள்ள பிஎஸ்6 மாடலில் ஸ்பெஷல் வேரியண்ட் உட்பட மொத்தமாக ஆறு விதமான வேரியண்ட்டினை பெற்று ஐ-டச் ஸ்டார்ட் , என்ஜின் கில் சுவிட்சும் இணைக்கப்பட்டுள்ளது. இரு பக்க டயர்களிலும் 110 மிமீ டிரம் பிரேக்குடன் எஸ்.பி.டி பிரேக்கிங் உடன், 16 அங்குல வீல் பெற்றுள்ளது.
டிவிஎஸ் XL100 விலை பட்டியல்
TVS XL100 Comfort – ₹ 41 195
TVS XL100 Heavy Duty – ₹ 43 715
TVS XL100 Heavy Duty i-Touchstart – ₹ 49 039
TVS XL100 HeavyDuty i-Touchstart Special Edition – ₹ 50 529
TVS XL100 Comfort i-Touchstart – ₹ 50 859
TVS XL100 HeavyDuty i-Touchstart Winner Edition – ₹ 50 929
(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)