தமிழகத்தில் வரவுள்ள புதிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

0

தமிழகம் புதிய முதலீடுகளை பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை என வெளியாகின்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தமிழக அரசு தெரிவிக்கின்றது. தமிழகத்தில் புதிதாக பீஜோ மற்றும் பல்வேறு நிறுவனங்களின் விரிவாக்க பணிகள் உள்பட பல துறை சார்ந்த முதலீடுகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Peugeot 2008 crossover

புதிய ஆட்டோமொபைல் நிறுவனம்

தமிழக அரசு செய்தி வெளியீடு

தமிழகத்திற்கு புதிய முதலீடுகள் வருவதில்லை என்று ஒரு சில செய்திகளில்
குறிப்பிடப்படுகிறது. இது மிகவும் தவறான செய்தி ஆகும்.

தமிழகத்தில் முதலீடு செய்ய பல புதிய தொழில் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. மாநில அரசின் தொடர்ச்சியான முயற்சி மற்றும் முழுமையான ஒத்துழைப்பு ஆகியவற்றினால் கீழ்க்கண்ட தொழில் நிறுவனங்கள் தனது தொழில் திட்டங்களை அமைக்க முன்வந்துள்ளன என்பதே உண்மையாகும்:
பிரான்ஸ் நாட்டின் நிறுவனமான பி எஸ் ஏ பிஜோட்  நிறுவனம் இந்தியாவில்
ஒருங்கிணைந்த உற்பத்தி வசதி திட்டங்களை நிறுவ முன்வந்து உள்ளது. தமிழக அரசின்
இடை விடாத முயற்சியால் இந்த நிறுவனம் தனது மூன்று தொழில் திட்டங்களை தமிழ்
நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் நிறுவ முன்வந்துள்ளது:
இந்த மூன்று திட்டங்களை நிறுவ, முதற்கட்ட முதலீடு ரூ.3000 கோடி ஆகும். இதில்
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களில் ரூ.1500 கோடியும், மற்ற இரு உற்பத்தி திட்டங்களில்
ரூ.1500 கோடியும் முதலீடு செய்யப்படும். இந்த முதலீடு ரூ.4000 கோடியாக அதிகரிக்கலாம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2010 Peugeot Lion

இந்த கூடுதல் முதலீடு வாகனங்கள் மற்றும் பவர் ட்ரயின் உற்பத்தி திட்டங்களில் செய்யப்படும். இதன் மூலம் 1500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு
உருவாகும்.

இதர தொழில் திட்டங்களான ஹுண்டாய் (விரிவாக்கம்), யமஹா மியூசிகல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ், இயந்திர உற்பத்தி நிறுவனம், வேதாந்தா, ஐ.டி.சி. லிமிடெட்
(விரிவாக்கம்), சியட் டையர்ஸ், ப்ரூடன்பெர்க், ஜெர்மனி ஆகியவற்றின் மூலம் விரைவில் ரூ.15,000 கோடி தமிழகத்தில் முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் 6500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.

மற்ற துறை சார்ந்த நிறுவனங்கள்

தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு 2015ல் நடைபெற்றபோது புரிந்துணர்வு
ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட மைக்ரோசாஃப்ட் கார்பரேஷன் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்,
ஆம்வே, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், டக்காசாகா, குரோத்லிங்க் ஓவர்சீஸ்
கம்பெனி, சாம்சங், செயின்ட் கோபைன் லிமிடெட், எம்.ஆர்.எப்., சன் எடிசன் சோலார் பவர் இந்தியா
லிமிடெட், வெல்ஸ்பன் ரெனிவபல் எனர்ஜி பி. லிமிடெட் ஆகிய 10 நிறுவனங்களின் தொழில்
திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

Peugeot 2008 Crossover
மேலும், லோட்டஸ் புட்வேர், அப்பலோ டையர்ஸ், ஐ.டி.சி. லிமிடெட், டி.வி.எஸ் மோட்டார்ஸ்,
செயின்ட் கோபைன் லிமிடெட், எம்.ஆர்.எப்., செங்லாங் பையோ டெக் பி. லிமிடெட், எம்பஸி
லாஜிஸ்டிக் பார்க் ஆகிய 7 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. மேலும் பல திட்டங்கள்
தொடங்கப்படுவதற்கான இறுதி நிலையை எட்டியுள்ளதாக தமிழக அரசு அறிக்கை தெரிவிக்கின்றது.