இன்றைக்கு உலக மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர்களில் மிகவும் லாபகரமான நிறுவனமாக ராயல் என்ஃபீல்டு விளங்கி வருகின்றது. 1954 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியா வந்த என்ஃபீலடு பைக்குகள் அதன்பிறகு தனது தாயகமாக இந்தியாவை மாற்றிக் கொண்டதை பற்றி அறியலாம்.
ராயல் என்ஃபீல்டு இந்தியா
1953 ஆம் ஆண்டு மெட்ராஸ் மோட்டார் என்ற நிறுவனம் என்ஃபீல்டு இங்கிலாந்து நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தம் வாயிலாக இந்திய சந்தையில் என்ஃபீல்டு பைக்குள் களமறிங்கியது. அதன் பிறகு எவ்வாறு இந்தியா தாயகமானது என இனி பார்க்கலாம்…!
முன்பாக வரலாற்றை படிக்க இங்கே செல்லவும் – இங்கிலாந்து என்ஃபீல்டு நிறுவனம்
1954 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய வர்த்தக ரீதியான நடவடிக்கையை தொடர்ந்து என்ஃபீல்டு இந்தியா லிமிடேட் என்ற பெயரில் என்ஃபீல்டு பைக்குகள் இந்தியாவில் உற்பத்தியை தொடங்கியது.
1956 ஆம் ஆண்டில் திருவொற்றியூரில் 2.96 ஏக்கர் பரப்பளவில் ராயல் என்ஃபீலடு நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் வருடத்தில் 163 பைக்குகளை தயாரித்தது.
1959 ஆம் ஆண்டில் முதல் முதல் UCE 250cc எஞ்சின் உருவாக்கப்பட்டது.
1962 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்டு ஃபேன்டாபிளஸ் என்ற ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
1963 முதல் கஃபே ரேஸர் கான்டினென்டினல் ஜிடி மாடல் வெளியடப்பட்டது.
1966 இங்கிலாந்து நாட்டில் உள்ள ரெட்டிச் தொழிற்சாலையை என்ஃபீல்டு நிறுவனத்தின் தொழிற்சாலையை மூடியது.
1970 ஆம் ஆண்டு என்ஃபீல்டு இங்கிலாந்து நிறுவனம் சந்தையிலிருந்து முழுமையான தனது சேவையை நீக்கி கொண்டது. ஆனால் இந்தியா என்ஃபீலடு நிறுவனம் மெட்ராஸ் மோட்டார் நிறுவனத்தால் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது.
1973 ஆம் ஆண்டில் இரண்டு ஸ்டோர்க் கொண்ட க்ரூஸேடர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது.
1980 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து முதல் மினி புல்லட் 200சிசி வில்லயர்ஸ் எஞ்சின் பொருத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
1984 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இங்கிலாந்து நோக்கி பயணத்தை புல்லட்கள் ஏற்றுமதி வாயிலாக தொடங்கியது.
1988 ஆம் ஆண்டு ஜன்டாப் நிறுவனத்துடன் இணைந்து என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களை தயாரிக்க தொடங்கியது. ஃப்யூரி (163cc), எக்ஸ்புளோர் (50cc) மற்றும் சில்வர் ப்ளஸ் (50cc) போன்ற மாடல்களை தயாரித்தது. இந்தியாவின் முதல் டிஸ்க் பிரேக் பெற்ற மாடலாக எக்ஸ்புளோர் வெளிவந்தது.
1989 ஆம் ஆண்டு மோஃபா என்ற பெயரில் மொபட் மாடலை அறிமுகம் செய்தது.
1991 ஆம் ஆண்டு உலக மோட்டார் சைக்கிள் வராலாற்றில் முதன்முறையாக 321 சிசி கொண்ட 3.5 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் டீசல் எஞ்சின் கொண்ட முதல் டாரஸ் புல்லட்டை அறிமுகம் செய்தது.
1993 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் உற்பத்தி செய்யப்பட்ட 500 சிசி புல்லட் மாடல் விற்பனைக்கு வெளியானது.
மீண்டும் உதயமானது ராயல் என்ஃபீல்டு
1994 ஆம் ஆண்டு ஐஷர் நிறுவனம் என்ஃபீல்டு இந்தியா நிறுவனத்தை வாங்கி மீண்டும் ராயல் என்ஃபீல்டு என பெயர் சூட்டியது.
1996 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் க்ரூஸர் ரக லைட்டனிங் 553 அறிமுகம் செய்யப்பட்டது.
1997 ஆம் ஆண்டில் 40 மோட்டார் சைக்கிள்கள் உலகின் மிக உயரமான மோட்டார் சைலை என அழைக்கப்படும் கர்டுங்கலா பகுதிக்கு டெல்லியில் இருந்து பயணித்தது. இதன் தொடக்கமே Himalayan Odyssey உருவானது.
2000 த்தில் ராயல் என்ஃபீல்டு இணையதளம் தொடங்கப்பட்டது.
2001 ல் முதல் எலக்ட்ரிக் இக்னிஷன் கொண்ட எலக்ட்ரா புல்லட்கள் விற்பனைக்கு வந்தது.
2002ல் தன்டர்பேர்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
2005 ராயல் எனஃபீலடு நிறுவனத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
2008ல் கிளாசிக் 500 அறிமுகம் செய்யப்பட்டு ஜெர்மனியில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது.
2009ல் கிளாசிக் 500 மற்றும் கிளாசிக் 350 இந்தியாவில் வெளியானது
2011ல் இரண்டாவது ஆலையை ஒரகடம் அருகில் 50 ஏக்கர் பரப்பளவில் நிறுவியது.
2012ல் தன்டர்பேர்ட் 500 வெளியானது
2013 ல் கான்டினென்ட்டில் GT விற்பனைக்கு வெளியானது.
2014ல் ராயல் என்ஃபீல்டு புதிய லோகோ வடிவமைக்கப்பட்டு வெளியானது.
2015 முதல் உலகப்போரை நினைவை வெளிப்படுத்தும் வகையில் டெஸ்பேட்ச் ரைடர் சிறப்பு எடிசன் அறிமுகம் செய்யப்பட்டது.
2016ல் அட்வென்ச்சர் ரக மாடலாக ஆர்இ ஹிமாலயன் பைக் வெளிவந்தது.
2016ல் தனது பூர்வீகத்தை போற்றும் வகையில் ரெட்டிச் சிறப்பு மாடலை அறிமுகம் செய்தது.
இந்த வருடம் இறுதியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முதன்முறையாக 750சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட கான்டினென்ட்டில் 750 ஜிடி மாடலை வெளியிட உள்ளது.
உலக மோட்டார்சைக்கிள் வரலாற்றில் தனது நீன்டகால பயணத்தில் எண்ணற்ற ரசிகர்களை கொண்டு விளங்குகின்ற ராயல் என்ஃபீலடு நிறுவனம் மிகவும் சக்திவாய்ந்த பிராண்டாக விளங்கி வருகின்ற நிலையில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.
For more news from AutomobileTamilan, follow us on Twitter @automobiletamilan and on Facebook at facebook.com/automobiletamilan
கட்டுரைக்கான ஆதார தகவல்கள் இங்கே பெறப்பட்டது..!