இடைநிலை வர்த்தக வாகனங்கள் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மஹிந்திரா ஃப்யூரியோ டிரக் மாடலின் தொடக்க விலை ரூபாய் 17.45 லட்சத்தில் தொடங்குகின்றது. ரூ. 600 கோடி முதலீட்டில் இடைநிலை வர்த்தக வாகனங்களை மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் பிரிவு உருவாக்கியுள்ளது.
மஹிந்திரா ஃப்யூரியோ டிரக்
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ரூ.600 கோடி முதலீட்டில் மஹிந்திரா டிரக் நிறுவனம், 500 மஹிந்திரா என்ஜினியர்கள் மற்றும் 180 உதிரிபாகங்கள் சப்ளையர்கள் உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இடைநிலை வரத்தக வாகனங்கள் பிரிவில் , அதாவது 8 டன் முதல் 16 டன் வரை எடை தாங்கும் திறனை பெற்ற டிரக்குகளின் வரிசைய ஃப்யூரியோ என்ற பெயரில், தனது பிளாசோ டிரக் மாடல்களுக்கு கீழாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய சாலைகளில் சுமார் 17 லட்சம் கிலோமீட்டர்களுக்கு அதிகமாக சோதனை செய்யப்பட்டுள்ள ஃப்யூரியோ டிரக்குகள் மிக சிறப்பான டார்க் மற்றும் செயல்திறன் மிக்கவையாக விளங்குவதுடன், மஹிந்திராவின் அதிக லாபம் அல்லது டிரக்கினை திரும்ப கொடுங்கள் (More Profit or Truck Back) என்ற நோக்கத்தை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிரசத்தி பெற்ற கார் மற்றும் டிசைன் நிறுவனமாக விளங்கும் இத்தாலியின் மஹிந்திரா பினின்ஃபாரீனா உதவியுடன் கூடிய இன்டிரியரை இந்த டிரக் பெற்றுள்ளதால் மிக சிறப்பான வசதிகள் மற்றும் சொகுசு தன்மையை ஃப்யூரியோ கேபின் வழங்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.
பாரத் ஸ்டேஜ் 4 மாசு விதிகளுக்கு உட்பட்ட 138 bhp பவர் மற்றும் 500 Nm டார்க் வழங்குகின்ற mDi டெக் டீசல் என்ஜினில் ஃப்யூவல் ஸ்மார்ட் நுட்பத்தை கொண்டுள்ளது. இதன் காரணமாக சிறப்பான மைலேஜ் வழங்குகின்ற டிரக் மாடலாக ஃப்யூரியோ விளங்க உள்ளது.
மஹிந்திரா நிறுவனம், வெளியிட்டுள்ள ஃப்யூரியோ டிரக்குகள் பராமரிக்க குறைந்த கட்டணம் மட்டும் போதுமானதாகும். மேலும் இந்த டிரக்கிற்கு 5 வருடம் அல்லது 5,00,000 கிமீ வாரண்டி, மேலும் இந்த டிரக்குகளுக்கு 5 வருடம் அல்லது 5 லட்சம் கிமீ சர்வீஸ் வழங்கப்படுகின்றது.
மஹிந்திரா ஃப்யூரியோ 12 டன் 19ft HSD – ரூ.17.45 லட்சம்
மஹிந்திரா ஃப்யூரியோ 14 டன் 19ft HSD – ரூ.18.10 லட்சம்
(எக்ஸ்-ஷோரூம் புனே)