Categories: Truck

ரேஞ்ச் 161 கிமீ.., டாடா ஏஸ் EV 1000 விற்பனைக்கு அறிமுகமானது

டாடா ஏஸ் EV 1000

1 டன் சுமை எடுத்துச் செல்லும் திறனுடன் வெளியிடப்பட்டுள்ள பிரசத்தி பெற்ற ஏஸ் அடிப்படையிலான ஏஸ் EV 1000 டிரக்கினை விற்பனைக்கு டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

வர்த்தகரீதியான எலக்ட்ரிக் ஏஸ் இவி1000 மாடல் FMCG, பானங்கள், லூப்ரிகண்டுகள், LPG & பால் பொருட்கள் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

டாடாவின் EVOGEN பவர்டிரையின் பெற்றுள்ள இந்த மாடலில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 27kW (36hp) மற்றும் 130Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 161 கிமீ வரையிலான பயணிக்கும் வரம்பினை வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்சின் சிறிய ரக வர்த்தக வாகனங்கள், பிக்கப் பிரிவு துணைத் தலைவர் மற்றும் வணிகத் தலைவர் வினய் பதக் கூறுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளில், எங்களது Ace EV வாடிக்கையாளர்கள், லாபகரமாகவும், நீடித்து நிலைத்து நிற்கக்கூடியதாகவும் உள்ளது.

ஈடு இணையற்ற அனுபவத்தைப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில், Ace EV 1000 அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், அவர்கள் சேவை செய்யும் பல்வேறு துறைகளில் மேம்பட்ட செயல்பாட்டு பொருளாதாரத்துடன் தீர்வுகளைப் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு அனுபவத்தை விரிவுபடுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.