புகாட்டி வேரான் சூப்பர் காரின் முக்கிய விபரங்கள்

உலகின் மிக வேகமான தயாரிப்பு நிலை காரான புகாட்டி வேரான் சூப்பர் காரின் சில முக்கிய விபரங்கள் மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
புகாட்டி வேரான்

புகாட்டி நிறுவனம் 1909ம் ஆண்டில் இத்தாலியை சேர்ந்த எட்டோர் புகாட்டி என்பவரால் தொடங்கப்பட்டது. மிகவும் சக்திவாய்ந்த திறன்மிக்க வாகனங்களையே புகாட்டி குறைவான எண்ணிக்கையில் தயார் செய்து வருகின்றது.

1998ம் ஆண்டில் புகாட்டி நிறுவனத்தை ஃபோக்ஸ்வேகன் குழுமம் கையகப்படுத்தியது. அதனை தொடர்ந்து புகாட்டி வாகனங்கள் புதிய பாதையை தொடங்கியது.

புகாட்டி வேரான்

1999ம் ஆண்டு புகாட்டி நிறுவனம் புதிய கான்செப்ட் மாடலை பல ஆட்டோமொபைல் கண்காட்சியல் புகாட்டி EB118  என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டது.

உற்பத்தி நிலைக்கு 2001ம் ஆண்டில் எடுத்து செல்ல ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டு 2005ம் ஆண்டில் புகாட்டி வேரான் 16.4 முறைப்பட்டி விற்பனைக்கு வந்தது.
அதனை தொடர்ந்து கிரான்ட் ஸ்போர்ட் , சூப்பர் ஸ்போர்ட் , கிரான்ட் சூப்பர் ஸ்போர்ட் விட்டேஸ் என்ற பெயரில் புதுப்பிக்கப்பட்ட வந்தநிலையில் இந்த வருடத்துடன் புகாட்டி வேரான் உற்பத்தியை நிறுத்தப்பட்டது.
மொத்தம் 450 புகாட்டி வேரான் கார்கள் மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் லா ஃபினாலே என்ற பெயரில் கடைசி புகாட்டி வேரான் காரும் விற்றுதீரந்தது. இந்தியாவில் புகாட்டி வேரான் காரை யாரும் வாங்கவில்லை.

உலகின் வேகமான கார்

உலகின் மிக வேகமான கார் என்ற பெருமையை புகாட்டி வேரான் மணிக்கு 408 கிமீ வேகத்தில் இயங்கி சாதனை படைத்தது. ஹென்னஸி வேனாம் ஜிடிகார் மணிக்கு 435கிமீ வேகத்தில் இயங்கி புகாட்டி சாதனையை முறியடித்தது.

புகாட்டி வேரான் பராமரிப்பு



நம்மில் பலர் டூவீலருக்கு ஆகின்ற செலவினை பார்த்தே அதிர்ச்சி அடைய வேண்டிய உள்ள நிலையில் புகாட்டி காரின் பராமரிப்பு செலவு ஆண்டிற்க்கு தொடக்க நிலை சொகுசு காருக்கு இணையாக உள்ளதாம்.

  • பல நாடுகளில் புகாட்டி வேரான் காரின் விலையை விட அதன் பதிவு கட்டணம் மற்றும் சாலை வரி மிக மிக அதிகமாம்.
  • புகாட்டி வேரான் காரில் ஆயில் சர்வீஸ் மட்டும் $21,000 ( ரூ.13,80 ,444) செலவாகும்.
  • புகாட்டி வேரான் காரின் டயர் 2500 முதல் 4000 கிமீக்கு மேல மாற்ற வேண்டுமாம். இதற்க்கான பிரத்யேக டயரை மிச்செலின் தயாரிக்கின்றது. ஒரு செட் டயரை மாற்ற $ 30000 (ரூ.19,72,063) செலவாகும்.
  • 100கிமீ பயணிக்க 78லிட்டர் பெட்ரோலை உறிஞ்சும்.
  • மொத்தமான ஆண்டுக்கு எரிபொருள் மற்றும் பராமரிப்புசெலவீனங்களை சேரத்து ஆண்டிற்க்கு 3 லட்சம் டாலர்கள் (ரூ.1,97,20,635) செலவாகின்றதாம்.

புகாட்டி சிரோன்

அடுத்த மாடலாக வரவுள்ள புகாட்டி சிரோன் கார் 1500 குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜினுடன் வரலாம். 
  
Exit mobile version