இன்று 62வது பிறந்தநாள் காணுகின்ற யமஹா மோட்டார் கம்பெனி நிறுவனத்தை பற்றி அதிகம் அறிந்திராத சில சவாரஸ்யங்களை அறிந்து கொள்வதற்கான ரேஸ் இங்கே தொடங்குகின்றது.

யமஹா மோட்டார் சைக்கிள்

இந்தியர்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்துள்ள யமஹா நிறுவனத்தின் தொடக்கம் 129 ஆண்டு காலத்திற்கு முந்தைய வரலாற்றில் ஜப்பானில் தொடங்கி இன்றைக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இசைக்கருவிகள் முதல் மோட்டார்சைக்கிள் என தனது பயணத்தை மேற்கொண்டு வருகின்றது.

1887 ஆம் ஆண்டு பியானோ மற்றும் ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகளை தயாரிக்கும் நிறுவனமாக யமஹா கார்ப்ரேஷன் தொடங்கப்பட்டது.

1955 ஆம் ஆண்டு ஜூலை 1ந் தேதி யமஹா மோட்டார் கம்பெனி என்ற பெயரில் பைக் பிரிவு தொடங்கப்பட்டது.

யமஹா நிறுவனத்தின் லோகோவில் உள்ள மூன்று கிராஸ் செய்யப்பட்ட டியூனிங் ஃபோர்க்குகள் இடம்பெற்றிருக்கும், அது இசைக்கருவிகளில் பயன்படுத்தப்படுவதாகும். தனது பூர்வீகத்தை யமஹா லோகோ தற்போதும் நினைவுப்படுத்துகின்றது.

யமஹா நிறுவனத்தின் முதல் மோட்டார் சைக்கிள் YA-1 மாடலாகும். YA-1 பைக்கில் 125சிசி எஞ்சின் இடம்பெற்றிருந்தது.

யமஹா YA-1 பைக் 1955 முதல் 1958 வரை உற்பத்தி செய்யப்பட்டது. முதல் 250சிசி மாடலை யமஹா YD-1 என்ற பெயரில் 1957 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.

பெர்ஃபாமென்ஸ் ரக மோட்டார் சைக்கிள் மாடலை YDS-1 என்ற பெயரில் அறிமுகம் செய்த யமஹா முதன்முறையாக ஜப்பானில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்திய மாடலாக 1958ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது.

யமஹா நிறுவனம் கார் எஞ்சின், ஸ்னோமொபைல்ஸ் மற்றும் ஆர்டெர்ரியன் வாகனம் போன்றவற்றின் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றது.

யமஹாவின் நீண்ட நாள் விருப்பமாக கார் தயாரிக்கும் எண்ண உள்ளது. பல்வேறு சமயங்களில் தனது கான்செப்ட் மாடல்களை வெளிப்படுத்தி வந்தாலும், உற்பத்திக்கு கொண்டு செல்லாமலே கிடப்பில் வைத்துள்ளது.

 

வரும்காலத்தில் யமஹா கார்கள் சாலையில் களமிறங்கும் என நிச்சியமாக நம்பலாம்.

யமஹா பைக்கில் மட்டுமல்ல யமஹா காரிலும் பயணிக்கும் நிலை உருவாக வேண்டும் என வாழ்த்துக்களுடன் இனிய யமஹா பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் உங்கள் ஆட்டோமொபைல் தமிழன் தளம்….

ஹேஷ்டேக் #yamahahappybirthday , உங்களது வாழ்த்துக்களை கமென்டில் பதிவு பன்னுங்க…!