இன்றைய உலகின் ஆடம்பர சொகுசு வாகனங்களின் மிக முக்கியமான ஒன்றும் நீண்ட கால பாரம்பரியம் மற்றும் ஆட்டோமொபைல் உலகை வடிவமைத்தவர்களான காட்லீஃப் டைம்லர் மற்றும் கார்ல் பென்ஸ் என இருவரின் கடின உழைப்பில் உருவான நிறுவனமே இன்றைய டைம்லர் ஏஜி குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற மெர்சிடிஸ் எவ்வாறு இணைந்தது அதன் பின்னணி என்ன ? மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தை பற்றி அதிகம் அறிந்திராத சுவாரஸ்யங்களை இங்கே காணலாம்  !

காட்லீஃப் டைம்லர் படம்

gottlieb-daimler

கார்ல் பென்ஸ் படம்

karl-benz

மெர்சிடிஸ்-பென்ஸ்

டைம்லர் ஏஜி குழுமத்தின் கீழ் மெர்சிடிஸ்-பென்ஸ், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி, மெர்சிடிஸ்-மேபக், பாரத்பென்ஸ், ஸ்மார்ட் ஆட்டோமொபைல்ஸ், மிட்சுபிஷி ப்யூசோ, தாமஸ் பில்ட் பஸ் , சீட்ரா மற்றும் எம்வி அகுஸ்டா மோட்டார் சைக்கிள் போன்ற நிறுவனங்களை நேரடியான பிராண்டு உரிமையாளராக விளங்குகின்றது.

1883 ஆம் ஆண்டு உருவான கார்ல் பென்ஸ் நிறுவனமும் 1890 ஆம் ஆண்டு உருவான டைம்லர் (காட்லீஃப் டைம்லர் மற்றும் வில்ஹெல்ம் மேபேக் கூட்டணி ) நிறுவனமும் 90 கிமீ இடைவெளியில் ஜெர்மன் நாட்டில் செயல்பட்டு வந்தது.  இரு நிறுவனங்களும் 1926 ஆம் ஆண்டு முழுமையாக இணைக்கப்பட்டு டைம்ல-பென்ஸ் என உருவாகியது. 1900 ஆம் ஆண்டு டைம்லர் மறைவிற்கு பின்னர் மேபேக் நிறுவனத்தை இயக்கி வந்தார்.

மேபேக்

wilhelm-maybach

1901 ஆம் ஆண்டு டைம்ல்ர் கார்களை விற்பனை செய்ய ஆர்வம் காட்டி ஜெர்மனி நாட்டில் பிறந்த ஆஸ்திரியாவில் வளர்ந்த எமில் ஜல்லினெக் என்பவர் கார்களின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் டிஎம்ஜி நிறுவனத்தின் கார்களை விற்பனை செய்ய ஆர்வம் காட்டி 36 கார்களை வாங்குவதாக வாக்குறுதி அளித்தார். 36 கார்கள் என்பது 1900 கால கட்டங்களில் மிகப்பெரிய எண்ணிக்கை ஆகும்.  1900 ஆம் ஆண்டில் டிஎம்ஜி கார்களை விற்பனை செய்வதற்கான டீலராக செயல்பட தொடங்கிய இவர் தன்னுடைய மூத்த மகளான மெர்சிடிஸ் பெயரை தனது நிறுவனமாக அறிவித்தார். அதன்பிறகு ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டிற்கு எமில் வேண்டுகோளுக்கு இணைங்க பிரத்தியேகமாக 35 ஹெச்பி கார் ஒன்றை வில்ஹெல்ம் மேபேக் உருவாக்கினார்.இதுவே முதல் மெர்சிடிஸ் 35hp காராகும்.

தந்தை எமில் ஜல்லினெக் உடன் மெர்சிடிஸ்

emil-jellinek-and-mercedes

டைம்லர் நிறுவனத்தின் விற்பனைக்கு முக்கிய பங்காற்றி வந்த மெர்சிடிஸ் நிறுவனம் மற்றும் மேபக் உருவாக்கிய மெர்சிடிஸ் 35 ஹெச்பி கார் போன்றவற்றை நினைவுப்படுத்தும் வகையில் 1926 ஆம் ஆண்டில் பென்ஸ்-டைம்லர் இணைப்பிற்கு பின்பு டைம்லர் நிறுவனம் தங்களுடைய பெயருக்கு மெர்சிடிஸ் என பரிந்துரை செய்ய மெர்சிடிஸ்-பென்ஸ் என்ற பிராண்டு பெயர் உருவாக்கப்பட்டு முதல் கார் மாடல் 1926 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதன் பிறகு கார்கள் பிரிவுக்கு மெர்சிடிஸ் என்ற பெயர் நிலைத்து வரலாற்றை பதித்துவிட்டது.

இன்றைய ஆட்டோமொபைல் உலகின் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக விளங்குகின்ற டைம்லர் ஏஜி ஆட்டோமொபைல் வரலாற்றின் கதை நாயகனாக விளங்குகின்றது.

நீங்களும் அறிந்த பல்வேறு சுவாரஸ்ய ஆட்டோமொபைல் செய்திகளை இங்கே பதிவுசெய்யலாம். உங்கள் வாகனத்தை பற்றி உங்கள் விருப்பமான பிராண்டு பற்றி என நீங்கள் விரும்பும் எந்த ஆட்டோமொபைல் செய்திகளையும் தமிழ் மொழியில் நம் உறவுகள் பெற உறுதுனையாக நிற்க விருப்பமெனில் உங்கள் கட்டுரைகள் மற்றும் உள் நுழையும் வழிமுறை உள்பட அனைத்திற்கும் அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்  இணைவதில் பதிவிடுவதில் சிக்கல் என்றால் தொடர்பு கொள்ள — க்ளிக் பன்னுங்க

https://bit.ly/motortalkies