Automobile Tamilan

2014ல் விற்பனையில் முதன்மையான 10 கார்கள்

கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான 10 கார்களின் விவரங்களை கானலாம். மாருதி சுசூகி தொடர்ந்து இந்திய சந்தையில் 44 சதவீத சந்தை மதிப்பினை தொடர்ந்து தக்க வைத்துள்ளது.

1. மாருதி ஆல்டோ 800

மாருதி ஆல்டோ 800 கார் தொடர்ந்து சிறப்பான விற்பனை பெற்று வருகின்றது. 2014 ஆம் வருடத்தில் 264,544 கார்களை விற்பனை செய்துள்ளது. குறைவான விலை அதிகப்படியான எரிபொருள் சிக்கனம் போன்ற காரணங்களால் தொடர்ந்து விற்பனையில் முதன்மை பெற்று வருகின்றது.

2. மாருதி சுசூகி டிசையர்

ஆல்டோ 800 காரை தொடர்ந்து சுசூகி டிசையர் உள்ளது. கடந்த ஆண்டில் 210,882 கார்கள் விற்பனை ஆகியுள்ளது. சிறப்பான செடான் காராக இந்திய சந்தையில் நிலைத்துவிட்ட டிசையர் காரில் தானியங்கி பரப்புகை வர வாய்ப்புகள் உள்ளது.

Maruti Swift Dzire

3. மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்

பலரின் விருப்பமான ஹேட்ச்பேக் என்றால் அது ஸ்விஃப்ட கார்தான். டிசையரை தொடர்ந்து 202,831 கார்கள் விற்றள்ளது. கடுமையான போட்டியிலும் ஸ்விஃப்ட் காரின் விற்பனை தொடர்ந்து அதிகரித்தே வருகின்றது.

4. மாருதி வேகன்ஆர்

சுசூகி கார் நிறுவனத்தின் வேகன்ஆர் 159,260 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

5. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் ஐ10 காருக்கு மாற்றாக களமிறங்கி சிறப்பான வரவேற்பு மற்றும் விற்பனையை பெற்றுள்ளது. 2014ல் 103479 கார்கள் விற்பனை ஆகியுள்ளது.

6. மஹிந்திரா பொலிரோ

அறிமுகத்தில் இருந்து இன்றுவரை விற்பனையில் சலிக்காத கார்களில் பொலிரோ எம்பிவி காரும் ஒன்றாகும். 102,045 கார்கள் விற்பனை செய்யதுள்ளனர். புதிய பொலிரோ சோதனை ஓட்டத்தில் உள்ளதால் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

7.  ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான் கார் 80,436  விற்பனை ஆகி உள்ளது. இயான் குறைந்த விலையில் சிறப்பான காராக விளங்குகின்றது.

8.  ஹோண்டா சிட்டி

டீசல் என்ஜினுடன் களமிறங்கிய ஹோண்டா கார்கள் ஹோண்டாவை பல மடங்கு விற்பனையில் உயர்த்தி தனியான இடத்தினை பதிவு செய்து வருகின்றது. சிட்டி 77,320 கார்கள் விற்பனை ஆகியுள்ளது.

9.மாருதி ஆம்னி

சிறப்பான இடவசதியை கொண்ட ஆம்னி பல பயன்களுக்கு பயன்படும் வகையில் உள்ள ஆம்னி கடந்த ஆண்டில் 74,498 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

10. ஹோண்டா அமேஸ்

ஹோண்டா நிறுவனத்தின் முதல் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட காராக விற்பனைக்கு வந்த அமேஸ் சிறப்பான வரவேற்பினை பெற்று 65,501 கார்கள் விற்பனை ஆகியுள்ளது.

Top Ten selling Cars in India by year 2014

Exit mobile version