சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 250cc என்ஜின் பெற்ற ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF 250 என இரு மாடல்களில் பின்புற பிரேக்கிங் அசெம்பிளியில் ஏற்பட்டுள்ள கோளாறினை இலவசமாக சரி செய்து தர நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட 5,145 பைக்குகளை திரும்ப அழைக்கின்றது.
பிப்ரவரி 2022 முதல் ஜூன் 2025 வரை தயாரிக்கப்பட்ட மொத்தம் 5,145 பைக்குகள் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளன.
Gixxer 250 மற்றும் Gixxer SF 250-ல் V-Strom 250 க்கான பின்புற பிரேக் காலிபர் அசெம்பிளி நிறுவப்பட்டதால் பிரேக்கிங் செயல்திறன் சிறப்பாக இல்லாமலும் தேய்மானம் சீராக இல்லாமல் பிரேக் பேட் உள்ளதால், பாதிப்புகளை எதிர்கொள்ளுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான தீர்வினை வழங்கும் நோக்கில் திரும்ப பெற உள்ளதாக அறிவித்துள்ளது.
பாதிப்படைந்த வாடிக்கையாளர்களை நேரடியாக சுசுகி டீலர்கள் தொடர்பு கொள்ள உள்ள நிலையில், உங்கள் வாகனம் பாதிப்படைந்துள்ளதா என கண்டறிய அதிகார்ப்பூர்வ சுசூகியின் இணையதளத்தின் https://www.suzukimotorcycle.co.in/service-campaign உங்கள் பைக்கின் VIN எண்ணை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.