Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

பஜாஜ் பைக் நிறுவனம் மீண்டும் ஸ்கூட்டர்கள் தயாரிக்க உள்ளதாக முன்பே பதிவிட்டிருந்தேன். தற்பொழுது அதனை மேலும் உறுதி செய்யும் வகையில் பஜாஜ் ப்ளேடு 125 ஸ்கூட்டர் விரைவில் வெளிவரவுள்ளது.பஜாஜ் ப்ளேடு 125 ஸ்கூட்டர் மூலம் மீண்டும் ஸ்கூட்டர் விற்பனையில் விரைவில் களமிறங்கயுள்ளது.இந்த ஸ்கூட்டர் 4 வால்வ் 125 சிசி என்ஜினுடன் CVT மற்றும் DTS-i உடன் வரலாம்.அதாவது பஜாஜ் டிஸ்கவர் 125ST என்ஜின் இதிலும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.இதன் சிறப்பம்சங்கள் ப்ரன்ட் டெலஸ்கோப்பிக் அப்சர்பர்,ப்ரன்ட் டிஸ்க் ப்ரேக்..

Read More

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் (2012-2013) வரிக்கு பிந்தைய வருமானம் ரூ 487.89 கோடியாகும். ஹீரோ மோட்டோகார்ப் கடந்த காலண்டில் விற்பனை செய்த எண்ணிக்கை 15,73,135 பைக்கள் ஆகும்.ஹீரோ பைக் நிறுவனத்தின் 4வது உலகத்தரமான உற்பத்தி ஆலையை ராஜஸ்தான் மாநிலத்தில் உருவாகி வருகின்றது. இந்த ஆலையை அடுத்த நிதி ஆண்டுக்குள் உற்பத்தியை தொடங்கும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மொத்த வருவாய் 6187.62 (q3 FY 2012-2013)கோடியாகும்.ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பவன் முன்ஞ்சால் கூறுகையில் கடந்த இரணடு காலாண்டாக மிக கடுமையான சவாலினை சந்தித்து வருகின்றோம். இதற்க்கு காரணம் எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. விழாக்காலங்களில் மிக சிறப்பான விற்பனையை எட்டியது. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான வளர்ச்சியை எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Read More

ஆட்டோமொபைல் அடிப்படை பற்றி சில நாட்களுக்கு முன் தொடராக ஆரம்பித்தோம். அவற்றில் இன்று என்ஜின் பற்றி மீண்டும் ஒரு முறை பார்ககலாம்.என்ஜின் பற்றி முழுமையான தொடரை 7 பிரிவாக முன்பே பார்த்தோம். அதனை முழுமையாக அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பில் சொடுக்கி இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.என்ஜின் இயங்குவது எப்படி PDF வடிவில்..இனி என்ஜினியில் பயன்படுத்தப்படும் முக்கியமான அளவீடுகளின் விளக்கங்களை கானலாம்.1. சிசி(CC-Cubic Capacity)அனைத்து வாகனங்களின் என்ஜின் களின் அளவை குறிக்க இந்த வார்த்தைகளை கானலாம் (100cc,150cc,800cc,1200cc). இவற்றில் வரும் சிசி பற்றி அறிவோம்.படத்தில் உள்ளதை தெளிவாக பாருங்கள். அதில் உள்ள சிசி ஆனது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால்..CC= Cylinder capacity X no. of cylinder`லிட்டர்யில் தெரிந்து கொள்ள வந்த சிசி யை 1000 த்தால் வகுத்தால் லிட்டர் அளவில் கிடைக்கும்.இனி வரும் பதிவுகளில் என்ஜினுக்கு எரிபொருள் கொண்டு செல்லும் அமைப்பு மற்றும் எரிந்த பொருளை வெளியேற்றும் அமைப்பு பற்றி அறியலாம்.உங்களின்…

Read More

ஸ்கூட்டர் நாள்தோறும் விற்பனை வளர்ந்து வருகின்றது.ஸ்கூட்டர் விற்பனையில் ஹோன்டா தனியான முத்திரையுடன் மிக சிறப்பான முறையில் வளர்ந்து வருகின்றது.ஹோன்டா ஸ்கூட்டர்களை புதிதாக அப்டேட் செய்துள்ளது. ஆக்டிவா,ஏவியேட்டர், டியோ போன்ற ஸ்கூட்டர்களை எச்இடி(HET-Honda Eco Technology) வெர்சனாக புதுமை படுத்தியுள்ளது.109சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ள ஆக்டிவா,ஏவியேட்டர், டியோ ஸ்கூட்டர்கள் HET மூலம் அப்கிரேட் வெர்சனாக மாறியுள்ளது.ஹோன்டா ஆக்டிவா109சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ள ஏக்டிவா ஸ்கூட்டர் சக்தி 8.15ps@7500rpm மற்றும் டார்க் 8.74@5500rpm. புதிய வெர்சன் மைலேஜ் 60kmpl. பழைய 4 கலர்களுடன் புதிதாக wild purple metallic வண்ணத்தை இனைத்துள்ளது. விலை 47,188(ex-showroom Delhi).ஹோன்டா ஏவியேட்டர்புதிய வெர்சன் மைலேஜ் 60kmpl. பழைய 3 கலர்களுடன் புதிதாக royal gold metallic வண்ணத்தை இனைத்துள்ளது. விலை 48,212(ex-showroom Delhi).ஹோன்டா டியோபுதிய வெர்சன் மைலேஜ் 60kmpl. pearl trance yellow புதிதாக royal gold metallic வண்ணத்தை இனைத்துள்ளது. விலை 44,701(ex-showroom Delhi).

Read More

கூகுள் நிறுவனத்தின் ஆள்யில்லாத கார் கழுதையின் மோதிவிட்டதாக வெளிவந்த படங்களை தொடர்ந்து கூகுள் புதிய படங்களை வெளியிட்டுள்ளது. இந்த படங்கள் மூலம் கழுதையின் மீது கார் மோதவில்லை என்பதை உறுதிசெய்துள்ளது.கழுதை கார் வருவதற்க்கு முன்பே சாலையில் படுத்திருந்த்தாக தெரிகின்றது. சாலை மண்ணில் புரண்டு கொண்டு இருந்திருக்கின்றது.பழைய படங்களை கானமேலும் முழுமையான விவரங்களை கான கூகுள் நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ அறிவிப்பினை கானுங்கள். Never ass-ume

Read More

கூகுள் நிறுவனம் இணையத்தின் இதயமாக செயல்பட்டு வருவதை அறிவோம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆள்யில்லாத காரினை களமிறக்கியதை பலர் அறிவோம்.இந்த ஆள்யில்லாத கார் தற்பொழுது போட்ஸ்வானாவில் சோதனையில் உள்ளது. நேற்று போட்ஸ்வானாவில் கூகுள் ஆள்யில்லாத கார் ஒரு கழுதை மோதி விட்டதாக டிவிட்டரில்(@TheRealSheldonC) செய்தினை வெளியிட்டார்.இது பற்றி நேற்று கூகுள் ஸ்டீரிட் வீயூவ் டீம் (news.com.au) செய்தி மற்றும் படங்களை அனுப்பியதாம். காரானது கழுதையின் மீது மோதிய பின் கழுதை கீழே விழுந்த சில நிமிடங்களுக்கு பின் எழுந்து நடந்து சென்று விட்டதாம்.கூகுள் ஸ்டீரிட் வீயூவ் டீம் செய்தி தொடர்பாளர் கூறுகையில் கழுதையை மோதி விட்டது உண்மைதான் பின்பு கழுதை எழுந்து பின்புறமாக நடந்து பின்பு முன்னோக்கி நடந்து சென்றது என கூறியுள்ளார்.இது பற்றி மெல்போர்ன் யூனிவர்சிட்டி விலங்கியல் ப்ரபசர் கூறிய செய்தி கழுதை பின்புறமாக நடக்க வாய்ப்பிலை என கூறியுள்ளார்.

Read More