வணக்கம் தமிழ் உறவுகளே….1. அசோக் லைலேன்ட் புதிய லாரிகளை அறிமுகம் செய்துள்ளது.அவை 2516il twin speed மற்றும் 3118il twin speed ஆகும்.2. மஹிந்திரா சாங்யாங் ரெஸ்டான் (Ssangyong Rexton SUV) கார் மும்பை மற்றும் டில்லியில் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் வருகிற நவம்பர் 20 அன்று சென்னை, பெங்களுரு, ஹைந்திராபாத்,லூத்தியனா,பூனே, பாட்டியலா மற்றும் சண்டிகரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.3. மஹிந்திரா குவேன்டா(Quanto) முன்பதிவு கடந்த இரு மாதங்களில் 10000 எட்டியள்ளது. முன்பதிவினை கருத்தில் கொண்டு தன்னுடைய நாஸிக் உற்பத்தி ஆலையில் 2500யில் இருந்து 3500யாக உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.4. உலகின் மிகச் சிறந்த ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான லேம்பார்கனி மொபைல் மற்றும் டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது.5. BMW நிறுவனம் இந்தியாவில் வருகிற நவம்பர் 22 அன்று 2013 BMW X6 facelift காரை அறிமுகம் செய்ய உள்ளது.டீசல் 3.0 லிட்டர் V6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் என்ஜின் குதிரை திறன் 235bhp…
Author: MR.Durai
வணக்கம் தமிழ் உறவுகளே…போர்ஷே நிறுவனம் தன்னுடைய 100வது காரினை இந்தியாவில் விற்றுள்ளது. இந்த காரினை பெற்றவர் நடிகை ஶ்ரீதேவி ஆவார். இந்த காரில் என்ன சிறப்பு என்பதை பார்போம்.இந்த காரின் பெயர் போர்ஷே கேயேன்(PORSHCE CAYENEE) போர்ஷே கேயேன்மிகச்சிறப்பான ஸ்போர்ட்ஸ் டீசல் SUV (sports utility vehicle) காராகும். சிறப்பான மைலேஜ் மற்றும் ஸ்போர்டிவான கார்தான் ப்ரோஸ்ச் கேய்னி. இந்த காரில் 3.0 லிட்டர் V6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. என்ஜின் சக்தி 240 குதிரை திறன் கொண்டதாகும். 0-100km வேகத்தை தொட 7.8 நொடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். 8 ஸ்பீட் S ஆட்டோமெட்டிக் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.மேலும் ஆட்டோ ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் வசதி உள்ளது.அதிகபட்ச வேகம் 218km/hrஇந்த காரினை நடிகை ஶ்ரீதேவி தன் கணவரான போனி கப்பூர்க்கு பரிசாக தந்துள்ளார்.இதுபற்றி போர்ஷே நிறுவனத்தின் இந்தியாவின் விற்பனை பிரிவு அதிகாரி அனில் ரெட்டி கூறுகையில்இந்தியாவில் மிகச்சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது.அதிலும் 100வது காரினை நடிகை ஶ்ரீதேவி பெற்றது மகிழ்ச்சி அளக்கிறது. மேலும்…
வணக்கம் தமிழ் உறவுகளே….டாடா நிறுவனம் உலக அளவில் முன்னனி வகிக்கும் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். டாடா சின்ன யானை(ACE) அனைவரும் அறிவீர்கள். கடந்த 7 வருடங்களாக சின்ன யானை விற்பனையில உள்ளது.டாடா ஏஸ் ஆரம்பத்தில் சுமைகளுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.பின்பு பல விதமான பயன்பாடுகளுக்கு பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.2680 நாட்களில் 10,59,135 டாடா ஏஸ் வாகனங்கள் விற்பனை செய்துள்ளது. இவற்றில் இந்திய அளவில் 9,97,133 மற்றும் வெளிநாடுகளில் 62,002 ஆகும்.டாடா ஏஸ் மற்றும் டாடா மேஜிக் என இரண்டிலும் சிறப்பான விற்பனை அடைந்து வருகிறது. அதிகப்படியான டாடா ஏஸ் மற்றும் மேஜிக் இவைகளை அதிகம் வாங்குபவர்கள் யார் என்றால் முதல் முறை வாகனம் வாங்குபவர்கள் மற்றும் மேஜிக் வாகனங்கள் டாக்ஸிகளுக்கு வாங்குகிறார்கள்.இந்திய அளவில் 1346 ஸோவ்ரூம்களை இயக்கி வருகின்றனர்.டாடா ஏஸ் உற்பத்தி ஆரம்பித்த காலத்தில் (2004-2005) டாடாவின் புனே ஆலையில் வருடத்திற்க்கு 30,000 வாகனங்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இயங்கி வந்த்து. பின்பு எதிர்கால…
வணக்கம் தமிழ் உறவுகளே…இந்திய சாலைகளில் வாகனங்களின் எண்ணிகை நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது.அதைவிட வாகனங்களின் அழகான வடிவமைப்பு வசிகரித்து அதன் செயல்திறன் நம்மை வியக்க வைக்கிறது.எதிர்பார்த்தது போல ஸ்கேனியா(scania) நிறுவனம் தன் வாகனத்தை களமிறக்கியுள்ளது. ஸ்கேனியா நிறுவனம் வோக்ஸ்வேகனை(volkswagen) தலைமையில் இயங்கி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பே வெளிவரவேன்டிய ஸ்கேனியா சில நிர்வாக காரணங்களால் காலதமாதமாக களம் கண்டுள்ளது.2007 ஆம் ஆண்டு முதல் ஸ்கேனியா நிறுவனம் லாரசன்-டர்போ நிறுவனத்துடன் இனைந்து இந்தியாவில் தன் சேவையை தொடங்கியது.இதுவரை இந்த நிறுவனம் குவாரிகளுக்கான ட்ரக்களை விற்றுள்ளது. ஸ்கேனியா நிறுவனத்தின் உற்பத்தி ஆலை பெங்களூரு நரசாபுர தொழிற்சாலை பகுதியில் செயல்படுகிறது.உலகின் மிகச் சிறந்த ட்ரக்(லாரி) நிறுவனமும் ஒன்று.ஸ்கேனியா முதல்கட்டமாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள லாரிகள் R 500 6×4, G 460 6×4, P410 6×2 மற்றும் P 360 4×2.1. SCANIA R 500 6×4ஸ்கேனியா R 500 6×4 லாரி மிகச் சிறப்பான இழுவை திறன் கொண்ட வாகனம் ஆகும். இதனை சாலைகளின் அரசன்(king…
வணக்கம் தமிழ் உறவுகளே..1. பயன்படுத்தப்பட்ட கார்களின் தேவை இந்தியளவில் அதிகரித்து வருகிறதாம். உங்கள் கார்களை சரியான முறையில் பராமரியுங்கள் எதிர்காலத்தில் மறுவிற்பனையில் நல்ல விலை கிடைக்கும்.2. ஹீரோ நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு பதிப்பாக X-Pro 110cc பைக்கினை வெளியிட்டுள்ளது. இந்த பைக் 6 வண்ணங்களில் கிடைக்கும். விலை 52,000(delhi).3. DC design நிறுவனத்தால் மஹிந்திரா XUV 500 புதிய வடிவத்தில் வடிவமைத்துள்ளனர்.4. மஹிந்திரா ஸ்டால்லியோ(STALLIO) மறு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் சோதனை ஒட்டம் நடைபெற்று வருகிறது.STALLIO 110ccயில் வரலாம் விலை 45,000 இருக்கலாம்.5.சுசுகி ஸ்விபட் சிறப்பு பதிப்பு தென் ஆப்பரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.6. ஜென்ரல் மோட்டார்ஸ்யின் ஸ்பார்க் கார்யில் corvette V8 என்ஜினுக்கு மாற்றம் செய்துள்ளனர். வீடியோ பார்க்க;[youtube https://www.youtube.com/watch?v=6ncDs2QLdmU]தினபதிவு திரட்டியில் நட்சத்திர பதிவராக்கிதற்க்கு நன்றி….www.dinapathivu.com
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் முதல் ஸ்போர்ட்ஸ் காராக வருகிற 2013 ஆம் ஆண்டின் இறுதியில் டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் கார் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2012 டில்லி ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.டிசி அவந்தி 2.0லிட்டர் ஃபோர்டு ஈக்கோபூஸ்ட் 4 சிலிண்டர் (VVT)என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. என்ஜின் சக்தி 240bhp @ 5500rpm மற்றும் டார்க் 37.3kgm @ 3500rpm. 6 speed maual மற்றும் 6 speed automatic என இரண்டு ட்ரானஸ்மிஷனிலும் கிடைக்கும். காரின் அதிகப்பட்ச வேகம் 250km/hr(எலக்ட்ரானிக் கன்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது).இந்த கார் தற்பொழுதே 500க்கு அதிகமான முன்பதிவினை கடந்துள்ளது. இவற்றில் 300 கார்களை 2013 இறுதியில் வழங்கலாம். இந்த வடிவமைப்பை மும்பையைச் சேர்ந்த டிசி கார் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த வடிவமைப்பினை உருவாக்க ரூ.10 மில்லியன் முதலீடு செய்துள்ளது.இன்னும் மூன்று மாதங்களில் 16 டீலர்களை இந்தியா முழுவதும் நியமிக்க உள்ளது.டிசி அவந்தி கார் விலைRS 30 லட்சம் இருக்கலாம்