ஹைனெஸ் சிபி 350 மாடலில் இருந்து மாறுபட்ட ஸ்போர்ட்டிவ் டிசைனை பெற்ற ஹோண்டாவின் CB350RS மாடலில் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய நிறங்களுடன் கூடுதலாக OBD-2B மேம்பாட்டினை பெற்ற எஞ்சினை பெற்று ரூ.2.16 லட்சம் முதல் ரூ.2.20 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம்) விலை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முந்தைய மாடலில் இடம்பெற்றுள்ள அடிப்படையான டிசைனில் எந்த மாற்றமும் இல்லாமல், டிஜிட்டல் அனலாக் முறையிலான கிளஸ்ட்டரில் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன், முன்புறத்தில் 19 அங்குல வீல், பின்புறத்தில் 17 அங்குல வீல் உடன் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக்கினை பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டதாக அமைந்துள்ளது. 348.36cc லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 5500 RPM-ல் 20.8 bhp பவர் மற்றும் 3000 RPM-ல் 30Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் உள்ளது. முந்தைய மாடலில் இருந்து…
Author: MR.Durai
டொயோட்டா நிறுவனம் ஹெலக்ஸ் பிளாக் எடிசன் மாடலை ரூ.37,90,000 விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள பிக்கப் ரக டிரக் மாடல் மிகவும் பிரபலமான மற்றும் சாகசங்களுக்கு ஏற்ற வகையில் விளங்குகின்றது. பிளாக் எடிசன் மாடலில் முழுமையான கருப்பு நிறத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல்வேறு ஸ்டைலிங் எலிமெண்ட்ஸ் என அனைத்து இடங்களிலும் முழுமையான கருமை நிறத்துக்கு மாறியுள்ளது கவனிக்கத்தக்க அம்சமாக பார்க்கப்படுகின்றது. மற்றபடி, அடிப்படையான டிசைனில் எந்த மாற்றமும் கிடையாது அதே நேரத்தில் வசதிகளிலும் எந்த மாற்றமும் இல்லாமல் அமைந்திருக்கின்றது. குறிப்பாக முன்புற ரேடியேட்டர் கிரில், 18 அங்குல கருப்பு நிற அலாய் வீல் கருப்பு நிற ஓஆர்விஎம், டோர் ஹேண்டில்ஸ், கார்னிஷ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி ரியர் காம்பினேஷன் விளக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த மாடலை பொருத்தவரை இன்டீரியர் அமைப்பில் தொடர்ந்து மிகவும் நவீனத்துவமான வசதிகளை கொண்டு 8 அங்குல…
அல்ட்ராவைலெட் நிறுவனத்தின் அட்வென்ச்சர் சாகசங்களுக்கு ஏற்ற வகையிலான புதிய ஷாக்வேவ் எலக்ட்ரிக் பைக்கின் டிசைன் என்டூரா மாடல்களை போல அமைந்து 4Kwh பேட்டரி பேக்கினை பெற்று விலை ரூ.1.50 லட்சம் அறிமுக சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ.25,000 தள்ளுபடியில் கிடைக்கும் பிறகு விலை ரூ.1.75 லட்சத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு தற்பொழுது துவங்கப்பட்டுள்ள நிலையில் டெசராக்ட் இ-ஸ்கூட்டரை போல இந்த மாடலும் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டெலிவரி வழங்கப்பட உள்ளது. ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள 90/90-R19 டயருடன் பின்புறத்தில் 110/90-R17 டயரை பெற்று முன்பக்கத்தில் 200 மிமீ பயணிக்கின்ற அப்சைடு டவுன் ஃபோர்க் உடன் பின்புறத்தில் 180 மிமீ பயணிக்கும் மோனோஷாக் அப்சர்பரை பெற்றுள்ள ஷாக்வேவ் பைக்கில் உள்ள 4kwh பேட்டரி அதிகபட்சமாக 14.7hp பவர் மற்றும் 505Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் மணிக்கு 120 கிமீ…
அல்ட்ராவைலெட் நிறுவனம் ஸ்போர்ட்டிவ் எலக்ட்ரிக் பைக்கினை விற்பனை செய்து வரும் நிலையில் புதிய டெசராக்ட் ஸ்கூட்டரை 3.5Kwh, 5Kwh மற்றும் 6 Kwh என மூன்று வித பேட்டரி ஆப்ஷனில் ரூ.1.20 லட்சம் அறிமுக சலுகை விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் முன்பதிவு துவங்ககப்பட்டு டெலிவரி 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதுதவிர இந்நிறுவனம், ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மின்சார ஷாக்வேவ் பைக்கினை அறிமுகம் செய்துள்ளது. Ultraviolette Tesseract அதிநவீன பாதுகாப்பு சார்ந்த வசதியை ரைடருக்கு வழங்கும் வகையில் ரேடார் அடிப்படையிலான பாதுகாப்பு கேமரா முன் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்டு அருகாமையில் உள்ள பிளைன்ட் ஸ்பாட் வாகனங்கள், கடக்கும் வாகனங்கள், மோதலை தடுக்கும் வசதி போன்றவை பெற்ற முதல் ஸ்கூட்டர் மாடலாக டெசராக்ட் விளங்குகின்றது. டேஸ்கேமரா வசதியுடன், பல்வேறு கனெக்ட்டிவிட்டி வழங்குகின்ற 7 அங்குல தொடுதிரை கிளஸ்ட்டரை பெற்றுள்ளது. 14 அங்குல வீல் பெற்று…
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சிறந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலாக உள்ள எக்ஸ்பல்ஸ் 210 என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை ரூ.2.12 லட்சம் முதல் துவங்குகின்ற அனைத்து வேரியண்டின் முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். HERO XPULSE 210 இந்தியாவில் கிடைக்கின்ற குறைந்த விலையில் சிறப்பான ஆஃப்ரோடு அனுபவத்தை வழங்கும் வகையிலான எக்ஸ்பல்ஸ் 200 வெற்றியை தொடர்ந்து வந்துள்ள எக்ஸ்பல்ஸ் 210 பைக்கில் புதிய ல் 9,250rpm-ல் 24.6hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.7Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 210cc எஞ்சின் உள்ள மாடலில் அசிஸ்ட் உடன் சிலிப்பர் பெற்ற 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. Xpulse 210 Base – ₹ 1,75,800 Xpulse 210 Top – ₹ 1,85,800 (Ex-showroom) Hero XPULSE 210 on-Road Price in Tamil Nadu 2025 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 அட்வென்ச்சர் பைக்கின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின்…
பஜாஜ் ஆட்டோவின் பேட்டரி மூலம் இயங்கும் மின்சார ஆட்டோரிக்ஷா பிரிவுக்கு என பிரத்தியேக கோகோ (Bajaj Gogo) பிராண்டினை அறிமுகம் செய்து P5009, P5012, மற்றும் P7012 என மூன்று வகைகளில் ரூ. 3,26,797 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. P5009, P5012, மற்றும் P7012. வகை பெயருக்கான விளக்கம், ‘P’ என்பது பயணிகளுக்கான வாகனம், ’50’ மற்றும் ’70’ அளவுகளை குறிக்கின்ற நிலையில், ’09’ மற்றும் ’12’ ஆகியவை முறையே 9 kWh மற்றும் 12 kWh பேட்டரி திறனை கொண்டுள்ளது. கோகோ P5009 ஆரம்ப நிலை பஜாஜ் கோகோ பி5009 ஆட்டோ ரிக்ஷாவில் 9 kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 4.5Kw பவர் மற்றும் 36Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 2 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிமீ ஆக உள்ள நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 178 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும்.…