Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

பஜாஜ் ஆட்டோ மற்றும் ட்ரையம்ப் கூட்டணியில் உருவான முதல் மோட்டார் சைக்கிள் ஸ்பீடு 400, ஸ்கிராம்பலர் 400 எக்ஸ் என இரண்டு மாடல்களை தொடர்ந்து அடுத்ததாக மூன்றாவதாக ஒரு மாடல் அனேகமாக இது ஸ்பீடு 400 அடிப்படையில் விற்பனைக்கு வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பஜாஜ் ஆட்டோ நிறுவன தலைவர் குறிப்பிட்டபடி, இரண்டு புதிய பைக்குகளை 400 சிசி இன்ஜின் பிரிவில் ட்ரையம்ப் மூலம் விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். வரவுள்ள மாடல் தொடர்பாக வெளியிட்டுள்ள டீசரில் டேங்கின் தோற்றம் வெளியாகி உள்ளது இது ஏற்கனவே விற்பனையில் இருக்கின்ற ஸ்பீடு 400 பைக் மாடலை போலவே இருப்பதால் அனேகமாக இது ஸ்பீடு 400 யின் புதிய வேரியண்ட் ஆக இருக்கலாம் அல்லது மாறுபட்ட ஏற்கனவே சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஃபேரிங் ஸ்டைல் கொண்ட திரஸ்டன் 400 மாடலாகவும் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.…

Read More

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை கொண்டு வந்துள்ளது. மூன்று விதமான வேரியண்டுகளில் ஐந்து விதமான நிறங்களை பெறுகின்ற இந்த மாடலானது இளைய தலைமுறையினரை வெகுவாக கவரும் வகையிலான பல்வேறு டிசைன் அம்சங்களை கொண்டிருக்கின்றது. புதிய டெஸ்டினி ஸ்கூட்டரில் 124.6cc ஏர்-கூல்டூ 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7000 rpm-யில் 9bhp பவர் மற்றும் 10.4Nm டார்க் ஆனது 5500 rpm இல் வழங்குகின்றது. சிவிடி கியர் பாக்ஸ் மூலம் ஏங்குகின்ற இந்த மாடலின் மைலேஜ் ஆனது இந்நிறுவனத்தின் தரவுகளின் படி லிட்டருக்கு 59 கிலோமீட்டர் கிடைக்கும் என சொல்லப்படுகின்றது. முன்புறத்தில் டெலஸ்கோபிக் போர்க்கு பின்புறத்தில் ஹைட்ராலிக் ஸ்ப்ரிங் டைப் சிங்கிள் காயில் ஷாக்அப்சார்பர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. முன்பக்கத்தில் டிரம் அல்லது டிஸ்க் பிரேக் ஆப்ஷனும் 90/90-12 பின்புறத்தில் டிரம் பிரேக் மட்டும் பெற்று 100/80-12 அங்குல…

Read More

ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42 பாபெர் என ஐந்து பைக்குகளை விற்பனை செய்து வருகின்ற நிலையில் இதன் வித்தியாசங்கள் மற்றும் முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். ஜாவா 350 42, 42 FJ என மூன்று கிளாசிக் ஸ்டைல் பெற்று டிசைன் மாறுதல்களுடன், மாறுபட்ட எஞ்சின் என வேறுபடுகிறது. பாபர் பைக் ஸ்டைல் பெற்றுள்ள பெராக் மற்றும் 42 பாபர் ஒற்றை இருக்கை அமைப்புடன் கிடைக்கின்றது. 2024 Jawa 350 புல்லட் 350 பைக்கினை நேரடியாக எதிர்கொள்ளுகின்ற ஜாவா 350 மாடலில் 334cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 22.5 hp பவர் மற்றும் 28.1 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. கிளாசிக் ஸ்டைல் பெற்ற இந்த மாடலில் அலாய் வீல் மற்றும் ஸ்போக்…

Read More

கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில் வெளியிட உள்ளது உறுதி செய்யும் வகையில் டீசரை வெளியிட்டு இருக்கின்றது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள கார்னிவல் மாடலில் 7, 9, மற்றும் 11 என மூன்று விதமான இருக்கை ஆப்சனில் சர்வதேச அளவில் கிடைத்த வருகின்றது. இந்திய சந்தைக்கு வரவுள்ள மாடல் இருக்கை, எஞ்சின் குறித்த எந்த தகவலும் தற்போது இல்லை. சர்வதேச அளவில் புதிய கார்னிவல் மாடலில் 3.5 லிட்டர் பெட்ரோல் வி6 எஞ்சின், 1.6 லிட்டர் ஹைபிரிட் பெட்ரோல் எஞ்சின் என இரண்டு பெட்ரோல் கூடுதலாக 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் என மூன்று ஆப்ஷன்களை கொண்டிருக்கின்றது. வரவுள்ள மாடலில் 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் என இரட்டை பிரிவு கொண்டுள்ள இன்டிரியரில் பின்புற பயணிகளுக்கு தனியான பொழுதுபோக்கு சார்ந்த 14.6 இன்ச்…

Read More

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. ஹூண்டாய் ஆரா Hy-CNG E மாடலில் 1.2L Bi-Fuel பெட்ரோல் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டு 6000 rpm-ல் 50.5 kW (69 PS) பவர், 95.2 Nm டார்க் வழங்குகிறது. இந்த மாடலின் மைலேஜ் கிலோ ஒன்றுக்கு 28.4 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் பவர் ஜன்னல்கள், டிரைவர் இருக்கை உயரம் சரிசெய்தல், சரிசெய்யக்கூடிய பின்புற இருக்கை ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் 3.5”அங்குல கிளஸ்ட்டர் உட்பட. செடான் ஸ்டைலான Z-வடிவ எல்இடி டெயில்லேம்ப் கொண்டுள்ளது. 6 ஏர்பேக்குகள், 3 பாயின்ட் சீட் பெல்ட்கள் (அனைத்து இருக்கைகள்), சீட் பெல்ட் நினைவூட்டல் (அனைத்து இருக்கைகள்) மற்றும் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. சிஎன்ஜி, கசிவு இல்லாத வடிவமைப்பு, சிஎன்ஜி சுவிட்ச் மற்றும் பெட்ரோல் நிரப்பும் பகுதிக்கு…

Read More

பஜாஜ் சேத்தக் அர்பேன் இ-ஸ்கூட்டருக்கு மாற்றாக புதிய சேத்தக் ப்ளூ 3202 அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது இதன் மூலம் கூடுதலான ரேஞ்ச் மற்றும் சிறப்பான வகையில் பல்வேறு வசதிகளை தொடர்ந்து பெற்றிருப்பதுடன் விலை ரூபாய் ₹8000 வரை குறைக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஐக்யூப் மாடலுக்கு போட்டியாக சேத்தக் மிகச் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகின்ற நிலையில் இரண்டு மாடல்களுக்கும் கடுமையான போட்டி உள்ள நிலையில் தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சேத்தக் வரிசை புதுப்பித்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது மேம்படுத்தப்பட்ட பேட்டரி ரேஞ்ச் கொண்ட இந்த மாடலானது விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றது. குறிப்பாக முந்தைய பேட்டரியை விட தற்பொழுது மேம்பட்ட வகையில் திறன் வாய்ந்ததாகவும் அதே நேரத்தில் நுட்பம் சார்ந்த அடிப்படையான அம்சங்களில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்படாமல் விளையும் ரூபாய் 8000 வரை குறைக்கப்பட்டுள்ளதால் நிச்சயமாக ஐகியூப் மாடல் மிகப்பெரிய சவாலினை எதிர்கொள்ளும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. முழுமையான ஸ்டீல் பாடி…

Read More