இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் சிறப்பம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். 2025 Honda Activa இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான ஹோண்டா நிறுவனத்தின் 110cc ஆக்டிவா ஆரம்பத்தில் 6ஜி என்று அழைக்கப்பட்டு வந்தாலும் கூட தற்பொழுது ஆக்டிவா என்று அழைக்கப்படுகிறது. ஆக்டிவா ஸ்கூட்டரில் 110சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு மிகச் சிறப்பான வகையில் ஆன டிசைனை கொண்டிருப்பதுடன் மெட்டல் பாடியுடன் பல்வேறு நிறங்கள் கொண்டு இளைய தலைமுறை முதல் குடும்பங்கள் வரை கொண்டாடும் வகையிலான வரவேற்பினை பெற்றிருக்கின்றது. ஆக்டிவா 110 OBD-2B மாடலில் ஏர்-கூல்டு, 109cc, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 7.8hp மற்றும் 5,250rpm-ல் 9Nm டார்க் வழங்கும். கூடுதலாக OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கும் ஏற்ற அம்சத்துடன் விளங்குகின்றது. அன்டர் போன் ஃபிரேம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள ஆக்டிவா 110 ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும்…
Author: MR.Durai
குடும்பங்களுக்கு ஏற்ற வசதிகளை கொண்ட 125சிசி ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான டெஸ்டினி 125 முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட டிசைன் பெற்று மேம்பட்ட என்ஜின் 5 புதிய நிறங்களை பெற்று விற்பனைக்கு ஹீரோ மோட்டோகார்ப் வெளியட உள்ளது. சிவப்பு, வெள்ளை, கருப்பு, மெக்னெட்டா நீலம், மற்றும் காஸ்மிக் நீலம் என ஐந்து விதமான நிறங்களுடன் மூன்று விதமான வேரியண்டுகளை பெற்று டாப் வேரியண்டில் டிஸ்க் பிரேக்குடன், டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று Xtec கனெக்ட்டிவிட்டி அம்சங்கள், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் ஆகியவற்றை பெற உள்ளது. கூடுதலாக டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் 90/90-12 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல், வளைவுகளில் திரும்பிய உடன் தானாகவே அனைகின்ற டர்ன் இண்டிகேட்டர், க்ரோம் ஸ்டைலை அப்ரானில் பெற்று காப்பர் நிறத்தை டாப் மாடல்களிலும்,மற்ற வேரியண்டுகளில் க்ரோம் மட்டும் பெற்றிருக்கும். 9 BHP பவர் மற்றும் 10.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 124.6 cc என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் சிவிடி கியர்பாக்ஸ்…
இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற டூவீலர் மாடலான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2024 ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtech பைக்கில் கூடுதலாக டிஸ்க் பிரேக் வேரியண்ட் இணைக்கப்பட்டிருக்கின்றது. தற்பொழுது வரை டிரம் பிரேக் மட்டுமே பெற்று வந்த இந்த 100 சிசி பைக் ஆனது இப்பொழுது டிஸ்க் பிரேக் ஆப்ஷன் மூலம் கூடுதலான ஒரு பாதுகாப்பு அம்சத்தை ஹீரோ ஏற்படுத்தியுள்ளது. மற்றபடி, எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புற 130மிமீ டிரம் பிரேக்குகளுடன், ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் இரண்டு சக்கரங்களின் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருகிறது. இந்த ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் 113.6 கிலோ எடையும், 9.8 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவு பெற்றுள்ளது. தொடர்ந்து 97.2 சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 7.91bhp பவர் மற்றும் 8.05NM டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் நான்கு வேத கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது. Xtec வேரியண்டில் முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர்…
மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் செயல்படும் ஜாவா யெஸ்டி நிறுவனம் புதிய 42 FJ நியோ கிளாசிக் ஸ்டைல் மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு ரூபாய் 1,99,142 விலையில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சமீபத்தில் 2024 ஜாவா 42 மாடல் விற்பனைக்கு J-PANTHER என்ஜின் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் புதிதாக வந்துள்ள மாடல் Alpha 2 எனப்படுகின்ற 334cc இன்ஜின் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 42 மாடலை விட மிக நேர்த்தியான ஸ்டைலிஷ் அம்சங்கள் சேர்க்கப்பட்டு மிகவும் இளைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையிலான அம்சங்களை புதிய 42 எஃப்ஜே கொண்டிருக்கின்றது. இதில் FJ என்பது ஜாவா நிறுவனர் František Janeček அவர்களை நினைவுபடுத்தும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாவா 350 பைக்கில் உள்ள அதே என்ஜினை பகிர்ந்துகொள்ளும் 42 FJ பைக்கில் 334cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 22.5 hp பவர் மற்றும் 28.1 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக…
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள கூபே ரக ஸ்டைல் மாடலான கர்வ் பெட்ரோல் மாடல் ஆரம்ப விலை ரூபாய் 9.99 லட்சத்தில் துவங்குகிறது. சில வாரங்களுக்கு முன்பாக கர்வ்.இவி மாடல் ரூபாய் 17.49 லட்சத்தில் வெளியிடப்பட்டிருந்தது. சந்தையில் கிடைக்கின்ற நடுத்தர எஸ்யூவிகளான கிரெட்டா, செல்டோஸ், எலிவேட், டொயோட்டா ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், ஹெக்டர், மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா மற்றும் புதிதாக வந்த சிட்ரோன் பாசால்ட் கூபே எஸ்யூவி மாடலை நேரடியாக எதிர்கொள்ளும் கர்வ் கார் போட்டியாளர்களை விட கூடுதலான வசதிகள் சிறப்பான கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள், நவீனத்துவமான வசதிகளை கொண்டிருக்கின்றது. கர்வ் எஞ்சின் விபரம் ATLAS architecture (Adaptive Tech forward Lifestyle Architecture) வடிவமைக்கப்பட்டுள்ள கர்வ காரில் இரண்டு பெட்ரோல் ஒரு டீசல் என மொத்தம் மூன்று விதமான எஞ்சின் ஆப்சன் பெற்று முதன்முறையாக இந்த நடுத்தர எஸ்யூவி பிரிவில் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (DCA) பெறும்…
ராயல் என்ஃபீல்டு நிறுவன கிளாசிக் 350 பைக்கின் 2024 மாடல் விலை ரூ. 2,28,150 முதல் ரூ. 2,69,842 வரை அமைந்துள்ளது. கிளாசிக் 350 மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Royal Enfield Classic 350 J-சீரிஸ் என்ஜின் பெற்றுள்ள புதிய கிளாசிக் 350 பைக்கில் 349cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6,100 rpm-ல் 20.2 bhp பவர், 27 Nm டார்க் 4,000 rpmல் வழங்குகின்றது. இந்த மாடலில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. குறிப்பாக மிக சிறப்பான க்ரூஸர் அனுபவத்தை வழங்கும் உள்ள கிளாசிக் 350 மைலேஜ் லிட்டருக்கு 35 கிமீ தரக்கூடியதாகும். ட்வீன் டவுன்டீயூப் ஸ்பின் ஃபிரேம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள 2024 கிளாசிக் 350 பைக்கின் பரிமாணங்கள் 2145mm நீளம், 785mm அகலம் மற்றும் 1,090mm உயரம் பெற்றதாக அமைந்துள்ளது. 1390mm வீல்பேஸ் பெற்று 170mm கிரவுண்ட்…