Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அடுத்ததாக மீண்டும் 42 பைக் வரிசையில் புதியதாக சில வேரியண்ட் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பாக விற்பனையில் உள்ள 42 பைக்கின் அடிப்படையில் சில மேம்பாடுகள் பெற்று புதிய நிறங்கள் மற்றும் பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட J-PANTHER என்ஜின் கொடுக்கப்பட்டிருந்தது. வெளியிடப்பட்டுள்ள டீசர் மூலம் 42 என்ற எண் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்பது குறித்தான எந்த ஒரு தகவலும் தற்பொழுது வெளியிடப்படவில்லை. சமீபத்தில் வெளியான புதிய 42 பைக்கில் உள்ள பல்வேறு நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட எஞ்சின் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இதனுடைய விலையில் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு ரூ.1.73 லட்சம் முதல் துவங்குகின்றது. செப்டம்பர் 3 ஆம் தேதி இந்த மாடலின் விலை அறிவிக்கப்பட்டு மற்றும் முழுமையான விபரங்கள் வெளியிடப்பட உள்ளது.

Read More

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் புதிதாக ஃபேக்டரி கஸ்டம் (Factory Custom) என்று பெயரில் பிரத்தியோகமான கஸ்டமைஸ் வசதிகளை 2024 கிளாசிக் 350 மாடல் மூலம் அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட கிளாசிக் 350 மாடல் பல்வேறு புதிய நிறங்கள் சிறிய அளவில் கூடுதலாக வசதிகள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட செப்டம்பர் 1 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ளது. Factory Custom என்பதின் நோக்கமே ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வாரண்ட்டி தொடர்பான எவ்விதமான சிக்கல்களையும் எதிர்கொள்ளாமல் வாடிக்கையாளர்கள் தங்கள் மாடலை விருப்பம் போல கஸ்டம் செய்து கொள்ளும் ஒரு அம்சமாகும். குறிப்பாக இந்த கஸ்டம் வசதிகளின் மூலம் விருப்பமான பல்வேறு நிறங்களை தேர்ந்தெடுக்கும் வசதி, 2D/3D ஸ்டிக்கரிங், இருக்கையில் உள்ள தையல் மற்றும் கூடுதலான ஆக்செரீஸ் ஆனது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பல்வேறு உதிரிபாகங்களையும் பெற்றுக்கொள்ளலாம். சேஸ் உட்பட எந்தெந்த பாகங்கள் எந்தெந்த நிறத்தில் இருக்க வேண்டும்…

Read More

இந்தியாவின் 125சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டர் 2024 ஆம் ஆண்டிற்கான விற்பனைக்கு செப்டம்பர் முதல் வார இறுதியில் வெளியிடப்பட உள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான டெஸ்டினி மாடல் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட டிசைன் மற்றும் நேர்த்தியான ரெட்ரோ அமைப்பினை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு முன்புறத்தில் H ஆங்கில எழுத்தை நினைவுப்படுத்தம் வகையிலான குரோம் பாகங்கள் அல்லது பிரான்ஸ் நிறத்திலான பாகங்களை பெற்றிருக்கும் இரண்டு விதமான வேரியண்டுகள் ஆனது பெற உள்ளது. டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு விதமாக வழங்கப்படும். கூடுதலாக கனெக்டிவிட்டி சார்ந்த ஹீரோ Xtech அம்சங்களை பெறுகின்ற பெரிய டிஜிட்டல் கிளஸ்டர் பெற்றிருக்கும் மற்றபடி பார்த்தீர்கள் என்றால் இந்த மாடல் வெள்ளை, சிவப்பு, நீலம், கருப்பு, மேக்னெட்டா நீலம் என ஐந்து விதமான நிறங்கள் ஆனது பெற்று இருக்க வாய்ப்புள்ளது. 9 BHP பவர் மற்றும் 10.4…

Read More

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முற்றிலும் புதிய ஜூபிடர் 110 மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. குறிப்பாக முந்தைய மாடலில் இருந்து மேம்பட்ட டிசைன் மற்றும் பல்வேறு மாறுதல் கொண்டு புதிய எஞ்சின் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பு குறிப்பாக ஆக்டிவா உள்ளிட்ட 110cc மாடலுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் வசதிகளை கொண்டிருக்கின்றது. முந்தைய தோற்ற அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றது. வடிவமைப்பு அதே நேரத்தில் புதிய சேஸ் ஆனது ஏற்கனவே விற்பனையில் இருக்கின்ற ஜூபிடர் 125 ஸ்கூட்டருக்கு இணையாக மாற்றப்பட்டு பல சிறப்பம்சங்களை ஏற்படுத்தும் வகையில் கொண்டிருக்கின்றது. டிவிஎஸ் ஜூபிடர் 110 டிசைன், வசதிகள் விமர்சனம் முன்புறத்தில் பெரிய எல்இடி ரன்னிங் விளக்குடன் இணைந்த டர்ன் இண்டிகேட்டர் (பேஸ் வேரியண்டில் இல்லை) சேர்க்கப்பட்டுள்ளது. பின்புறத்திலும் இன்பினிட்டி எல்இடி என அழைக்கப்படுகின்ற நீளமான எல்இடி விளக்கு சேர்க்கப்பட்டு இன்டிகேட்டர் இணைக்கப்பட்டு இருக்கின்றது. பக்கவாட்டில் உள்ள பேனல்கள் கூட முற்றிலும் மாறுபட்டு நவீனத்துவ தலைமுறைக்கு ஏற்ற…

Read More

2024 ஆம் ஆண்டிற்கான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய கிளாமர் 125cc மாடலில் புதிய பிளாக் மெட்டாலிக் சில்வர் நிறம் மட்டும் சேர்க்கப்பட்டு கூடுதலாக பாடி கிராபிக்ஸ் ஆனது மேம்படுத்தப்பட்டிருக்கின்றது. மற்றபடி, மெக்கானிக்கல் மற்றும் வசதிகள் சார்ந்தவற்றில் எந்த ஒரு மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை மேலும் முந்தைய மாடலை விட ₹ 1000 வரை விலை உயர்த்தப்பட்டு தற்பொழுது 86,598 (ex-showroom) ஆக தொடங்குகின்றது. E20 ஆதரவினை பெற்ற 124.7cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7,500 rpm-ல் 10.7 bhp பவர் மற்றும் 6,000rpm-ல் 10.6 Nm டார்க் பெற்ற பைக்கில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் சேர்க்கப்பட்டுள்ளது. கிளாமர் 125cc மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கு மற்றும் பின்புற ட்வீன் ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டு 18 அங்குல அலாய் வீல் கொண்டுள்ள இந்த பைக்கில் 80/100-பிரிவு முன்புற டயரும் மற்றும் 100/80-பிரிவு பின்புற டியூப்லெஸ் டயர் உள்ளது. முன்புற டயரில் 240 மிமீ…

Read More

ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட ஹூண்டாய் நிறுவனத்தின் 2024 அல்கசார் எஸ்யூவி காரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த காருக்கான முன்பதிவு இன்று முதல் துவங்கப்பட்டு முன்பதிவு கட்டணமாக ரூபாய் 25,000 வசூலிக்கப்படுகின்றது. நடப்பு ஆண்டின் துவக்கத்தில் வெளியான புதிய கிரெட்டா காரின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த மாடலில் பல்வேறு டிசைன் மாற்றங்கள் அங்கிருந்து பெறப்பட்டிருந்தாலும் முன்புற கிரில் அமைப்பு போன்றவை எல்லாம் சற்று வித்தியாசமான அமைப்பினை வெளிப்படுத்துகின்றது மற்றபடி எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் H-வடிவ ஹெட்லைட் அமைப்பு போன்றவை எல்லாம் கிரெட்டா மாடலில் இருந்து பெறப்பட்டது போலவே அமைந்திருக்கின்றது. பக்கவாட்டினை பொருத்தவரை பெரிதாக மாற்றங்கள் இல்லை என்றாலும் ரூஃப் லைன் மற்றும் புதிய 18 அங்குல அலாய் வீல் பெறுகின்றது. பின்புறம் புதுப்பிக்கப்பட்ட எல்இடி லைட் பார் மற்றும் டெயில்லைட் ஆனது கொண்டிருக்கின்றது. நம்பர் பிளேட்டிற்கான இடவசதியானது சற்று மாற்றியமைக்கப்பட்டு கீழே உள்ள ஸ்கிட்பிளேட் ஆனது மிக சிறப்பாக…

Read More