Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான ஜூபிடர் 110 மாடலை ரூ.73,700 முதல் தற்பொழுது பல்வேறு மாறுபாடுகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றது. முந்தைய மாடலிலிருந்து முற்றிலும் மேம்பட்ட டிசைன் மற்றும் தொடர்ந்து மெட்டல் பாடியை கொண்டிருக்கின்ற இந்த மாடலில் மிகவும் நேர்த்தியான வகையில் பெட்ரோல் டேங்க் ஆனது முன்புறத்தில் உள்ள ஃப்ளோர் போர்டு அடியில் கொடுக்கப்பட்டிருப்பதால் இதற்கான இருக்கைக்கு அடியிலான ஸ்டோரேஜ் அமைப்பு தற்பொழுது ஜூபிடர் 125 போல விரிவடைந்து இரண்டு முழுமையான ஹெல்மெட்டுகளை உட்புறம் வைக்கும் வகையில் 33 லிட்டர் கொள்ளளவு ஸ்டோரேஜ் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. முன்புறத்தில் அப்ரானில் மிக அகலமான எல்இடி ரன்னிங் விளக்கு சேர்க்கப்பட்டு அதன் இரு பகுதிகளிலும் டர்ன் இன்டிகேட்டர் ஆனது இணைக்கப்பட்டிருக்கின்றது மேலும் முழுமையான எல்இடி ஹெட்லைட் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த மாடலில் மிக சிறப்பான வகையில் ஸ்டைலிங் அம்சங்கள் ஆனது மேம்படுத்தப்பட்டு நவீனத்துவமாகவும் விளங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. புதிதாக…

Read More

இந்தியா சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் F 900 GS, F 900 GS அட்வென்ச்சர் டூரிங் என இரு மாடல்களை விற்பனைக்கு வெளியிட உள்ளதை உறுதி செய்ய முடியும் டீசரை வெளியிட்டு இருக்கின்றது. தற்போது, ​​இந்த இரண்டு மாடல்களுக்கும் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. முந்தைய F 850 GS மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய எஃப் 900 வரிசை மாடலில் இடம்பெற்றுள்ளதற்போதைய 853சிசி என்ஜினில் இருந்து புதுப்பிக்கப்பட்ட 895சிசி புதிய எஞ்சின் அதிகபட்சமாக 105hp மற்றும் 93Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. முந்தைய மாடலை விட கூடுதலாக 10hp பவர் மற்றும் 1Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக F 900 GS மற்றும் குறைந்த டூரிங் பயன்பாடுகளுக்கு ஏற்றதாக F 900 GSA விளங்க உள்ளது. முந்தைய மாடலை விட 27 கிலோ கிராம் எடை குறைவாக அமைந்துள்ள இந்த மாடலில் முன்புறத்தில் 21 அங்குல…

Read More

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அடுத்ததாக மூன்றாம் தலைமுறை ஸ்கூட்டர் வரிசையை இந்தியாவில் 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தகவல்களை இந்நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. குறிப்பாக புதிதாக வரவுள்ள ஸ்கூட்டரின் அலுமினியம் ஸ்ட்ரெஸ்டு ஃபிரேமில் எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த அம்சங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டதாக வழங்கப்பட்டிருக்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. தற்பொழுது பயன்படுத்தப்பட்ட வருகின்றார் 2170 பேட்டரி செல்களை விட இந்த புதிய செல்கள் கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டிருக்கின்றது. இது தவிர முக்கியமாக ஓலா நிறுவனம் தனது சொந்தமாக நான் தயாரிப்பாக வெளியிட்டுள்ள பாரத்செல் எனப்படுகின்ற 4680 செல்களை பேட்டரிக்கு பயன்படுத்தி கூடுதலான பவர் மற்றும் சிறப்பான ஆற்றல் சேமிப்புத் திறனை கொண்டதாகவும் அதிக ரேஞ்ச் மற்றும் அதிக சார்ஜிங் சைக்கிள் கொண்டிருக்கும் இந்த பேட்டரிகளை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும்…

Read More

ஸ்கோடா இந்தியாவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலுக்கு கைலாக் (Skoda Kylaq) என்ற பெயரை சூட்டி உள்ளது மேலும் விற்பனைக்கு ஜனவரி 2025-ல் அறிமுகம் செய்யப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கை-லாக் (Kai-lock) என்று உச்சரிக்கப்படும் என ஸ்கோடா குறிப்பிடும் நிலையில், இது கைலாஷ் மலைக்கு ஒரு தலையீடு என்றும், செக் குடியரசின் புகழ்பெற்ற கிரிஸ்டலுக்கான சமஸ்கிருத வார்த்தையிலிருந்து இந்தப் பெயர் உருவானது என்றும் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக 10 பெயர்களில் அதிக நபர்களால் வாக்களிக்கப்பட்ட பெயரை ஸ்கோடா இந்தியா நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது இந்த பெயரில் அதிக வாக்களித்தவர்களுக்கு சிறப்பு பரிசாக சிலருக்கு மட்டும் செக் குடியரசு நாட்டில் உள்ள என் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளது மேலும் பல்வேறு நபர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது நான்கு மீட்டருக்கு குறைவான நீளம் உள்ள பல்வேறு மாடல்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலுக்கு 1.0 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின்…

Read More

ஹீரோ மற்றும் ஹார்லி டேவிட்சன் கூட்டணியில் தயாரிக்கப்பட்ட X440 பைக்கில் தற்பொழுது மூன்று புதிய நிறங்களை இந்நிறுவனம் சேர்த்துள்ளது. Vivid மற்றும் டாப் S வேரியண்டுகளில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ள இந்த நிறங்களானது பேஸ் வேரியன்டான Denim-ல் சேர்க்கப்படவில்லை. டாப் S வேரியன்டில் முன்பாக மேட் பிளாக் என்ற ஒற்றை நிறம் மட்டும் பெற்று வந்த நிலையில் தற்பொழுது பாஜ ஆரஞ்சு என்ற நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்து நடுத்தர வேரியண்ட் Vividல் கோல்ட்ஃபிஸ் சில்வர் மற்றும் மஸ்டார்டு என இரு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்பாக இதில் டார்க் சில்வர், சிவப்பு நிறம் மற்றும் இடம்பெற்றிருந்தது. இந்த மோட்டார்சைக்கிளில் 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 4000rpm-ல் 38 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. S வேரியண்டில் டைமண்ட் கட் அலாய் வீல், பிராண்ஸ்டு என்ஜின் வசதி,…

Read More

டிவிஎஸ் மோட்டாரின் மிகவும் பிரசித்தி பெற்ற ஜூபிடர் 110 ஸ்கூட்டரில் தற்பொழுது பல்வேறு மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டு ஜூபிடர் 125 போல அதிக இட வசதியை இருக்கைக்கு அடியில் வழங்குவது டீசர் உறுதியாகி இருக்கின்றது. 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் அதிகப்படியான வசதிகள் மற்றும் முதலில் வெளியிடப்பட்ட மாடலுக்கு பிறகு அதிக மாற்றத்தை இந்த மாடலில் இந்நிறுவனம் ஏற்படுத்த உள்ளது. டிவிஎஸ் மோட்டார் வெளியிட்டுள்ள டீசரில் முன்புற அப்ரானில் புதிய எல்இடி லைட்பார் ஆனது ஏற்கனவே டிவிஎஸ் ஐக்யூப் மாடலில் உள்ளதை போன்று பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதே நேரத்தில் இருக்கைக்கு அடியில் இரண்டு ஹெல்மெட்டுகள் அதாவது நாம் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் பார்ப்போம் அதிகப்படியான இடவசதி இருக்கும் அதுபோன்று ஜூபிடர் 110 மாடலும் பெற உள்ளது. அதே நேரத்தில் தற்பொழுது உள்ள மாடலில் இருந்து மாறுபட்ட டிசைன் அமைப்பினையும் கூடுதலான கனெக்ட்டிவிட்டி வசதிகளையும் இந்த மாடலானது பெறுவது உறுதியாகியுள்ளது. 109.7cc ஏர்…

Read More