Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சொந்தமாக தயாரித்து உள்ள பாரத்செல் 4680 ஆனது முதல் முறையாக ரோட்ஸ்டெர் மற்றும் ஏப்ரல் 2025ல் வரவுள்ள மூன்றாவது தலைமுறை ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்பட உள்ளது. 4680 செல் என்றால் உருளை வடிவ லித்தியம்-அயன் பேட்டரி மின்சார வாகனங்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. பெயருக்கான காரணம் விட்டம் 46 மில்லிமீட்டர் மற்றும் உயரம் 80 மில்லிமீட்டர் ஆகும். உலகின் பிரசித்தி பெற்ற எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான டெஸ்லா நிறுவனமும் இது போன்ற பேட்டரி 4680 செல் மாடல்களை தான் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும் அதனை பின்தொடர்ந்தே தற்பொழுது ஓலா நிறுவனமும் இது போன்ற ஒரு பேட்டரி செல்லை வடிவமைத்திருக்கின்றது. இந்த தொழில்நுட்பம் தொடர்பாக 70க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்றுள்ளதாக ஓலா தலைவர் அகர்வால், “நாங்கள் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யவில்லை, நாங்களே உருவாக்கினோம்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது ஓலா நிறுவனம் பயன்படுத்தி வருகின்ற 2170 செல்களை விட கூடுதல் வேகத்தில்  சார்ஜிங் செய்யவும்…

Read More

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ரோட்ஸ்டெர் பைக்கின் ஆரம்ப விலை ரூபாய் 74,999 முதல் துவங்கி ரூ.2.49 லட்சம் வரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரோட்ஸ்டெர் X, ரோட்ஸ்டெர் மற்றும் ரோட்ஸ்டெர் புரோ என மூன்று விதமான வேரியண்டுகளில் ஏழு விதமான மாறுபட்ட வேரியண்டுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. Ola Roadster X துவக்கநிலை சந்தைக்கு வந்துள்ள ரோட்ஸ்டெர் X மாடலில் 2.5 kWh, 3.5kwh, மற்றும் 4.5 kWh என்ன மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. இந்த மாடல்களில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டத்துடன் 4.3 அங்குல எல்சிடி கிளஸ்ட்டர் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக் சஸ்பென்ஷன் இடம் பெற்று இருக்கின்றது. வழக்கமான எல்இடி ஹெட்லைட் பெற்று இந்த மூன்று மாடல்களிலும் ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈகோ என…

Read More

இந்தியாவில் பிஎஸ்ஏ நிறுவனத்தின் கோல்டு ஸ்டார் 650 மோட்டார்சைக்கிளை ரூ.2.99 லட்சம் முதல் ரூ.3.35 லட்சம் வரை விலையில் விற்பனைக்கு மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் ஜாவா, யெஸ்டி பெயரில் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் பிஎஸ்ஏ பைக்கும் வந்துள்ளது. கோல்டு ஸ்டார் 650 பைக்கில் 652சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு எஞ்சின் அதிகபட்ச பவரை 6500RPM-ல் 45 Hp , 4000RPM-ல் 55 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 41mm டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது. பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் 320mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 255mm டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. 12 லிட்டர் பெட்ரோல் டேங்கினை கொண்டு 780 மிமீ இருக்கை உயரத்துடன் முன்பக்கத்தில் 18 அங்குல வீல்…

Read More

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 78 வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ஐக்யூப் செலிப்ரேஷன் எடிசனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஐக்யூப் S மற்றும் ஐக்யூப் 3.4kwh என இரண்டிலும் மொத்தமாக 2000 யூனிட்டுகள் மட்டும் விற்பனைக்கு விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது. சிறப்பு டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 26 முதல் டெலிவரி தொடங்கும். iqube ஸ்கூட்டரின் குறிப்பிட்ட பகுதிகளில் ஆரஞ்சு மற்றும் கருப்பு ஆகிய இரட்டை-தொனி வண்ணத் திட்டத்தைக் கொண்டுள்ளது. கூடுதலாக #CelebrationEdition பேட்ஜ் உள்ளது. 3.4kWh பெறுகின்ற இந்த இரு வேரியண்டிலும் அதிகப்பட்சமாக 4.4kW பவர் மற்றும் 140Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. முழுமையாக பேட்டரி சார்ஜ் செய்யும்போது அதிகப்படியான ரேஞ்ச் 100 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்யூப் S – ₹ 1,47,155 ஐக்யூப் 3.4kwh – ₹ 1,37,363 (Ex-showroom Tamil…

Read More

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஜீரோ எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிலையில் இந்திய சாலையில் முதல்முறையாக ஜீரோ FXE எலெக்ட்ரிக் பைக்குகள் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படம் வெளியாகி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற FXE மோட்டார் சைக்கிள் ஆனது $12,495 (இந்திய மதிப்பில் ரூபாய் 10.49 லட்சம்) ஆக உள்ளது. ஆனால் இந்திய சந்தைக்கு வரக்கூடிய மாடல் ஆனது பல்வேறு மாறுபாடுகளை கொண்டதாகவும் விலை சற்று குறைவானதாகவும் அமைந்திருக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. பெங்களூரு அருகே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரத்தியேகமான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் உள்ளதால் அதன் அருகாமையிலே இந்த பைக் ஆனது சோதனை செய்யப்பட்டு இருக்கின்றது. அமெரிக்கா உள்ளிட்ட சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்ற இந்த மாடலில் 7.2Kwh லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக மணிக்கு 137 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறனுடன் முழுமையான சிங்கிள்…

Read More

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற ஸ்கூட்டர் ரக மாடலான ஜூபிடர் 110சிசி மாடலில் புதுப்பிக்கப்பட்ட மாடல் வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தற்பொழுது வரை இந்நிறுவனம் வெளியிட்டிருந்த டீசரில் எந்த மாடல் என்பது குறித்தன எந்த தகவலையும் வெளியிடவில்லை இருந்தாலும் புதிய ஜுபிடர் வெளியிடப்படலாம் என்ற தகவல் சில மாதங்களாகவே கசிந்து வருகின்றது. மேலும் இந்த புதிய ஜுபிடர் 110 விற்பனையில் உள்ள ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் உள்ள மிகவும் தாராளமான இருக்கைக்கு அடியிலான ஸ்டோரேஜ் இட வசதியை பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அதிக ஸ்டோரேஜ் பெற உள்ள 110சிசி ஸ்கூட்டர் மாடலாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. முன்புற அப்ரான் குறித்தான வெளியிடப்பட்டுள்ள டீசரில் எல்இடி ரன்னிங் விளக்கானது சேர்க்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகின்றது இது தற்பொழுது உள்ள மாடலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட டிசைனை வெளிப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.…

Read More