ரூபாய் 4.57 கோடி விலையில் இந்தியாவில் லம்போர்கினி வெளியிட்டுள்ள புதிய உரூஸ் SE சூப்பர் காரில் 4.0 லிட்டர் V8 பிளக் இன் ஹைபிரிட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. வழக்கமான ஸ்ட்ராடா, ஸ்போர்ட் மற்றும் கோர்சா முறைகள் (சாலை மற்றும் ஆஃப் ரோடு பயன்பாட்டிற்காக), மற்றும் நிவி, சாப்பியா மற்றும் டெர்ரா போன்ற ரைடிங் மோடுகளுடன் நான்கு கூடுதல் மோடுகளாக EV டிரைவ், ஹைப்ரிட், ரீசார்ஜ் மற்றும் பெர்ஃபாமென்ஸ் என மொத்தமாக 10 மோடுகளை பெற்றுள்ளது. 4.0-லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு V8 இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 620hp மற்றும் 800Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. கூடுதலாக இந்த காரில் உள்ள 25.9kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக்கைப் பயன்படுத்தும் பிளக்-இன் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் சேர்க்கப்பட்டு. மொத்த பவர் 800hp மற்றும் 950Nm ஆகும். இந்த மாடலில் 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. உரூஸ் SE மாடல் 60km ரேஞ்ச் பேட்டரியில் மட்டும் இயக்கமுடியும்…
Author: MR.Durai
யாரும் எதிர்பார்க்காத விலையில் சிட்ரோன் நிறுவனம் பாசால்ட் கூபே எஸ்யூவி ஸ்டைல் மாடலை விற்பனைக்கு ரூ.7.99 லட்சத்தில் அறிமுகம் செய்துள்ளது. வேரியண்ட் வாரியான விலை விபரம் தற்பொழுது அறிவிக்கவில்லை என்றாலும் அறிவிக்கப்பட்டுள்ள விலையில் முன்பதிவு தற்பொழுது துவங்கப்பட்டுள்ளது. இந்த விலையானது அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு விநியோகம் செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என இந்நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படுகின்றது, இந்த மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் மற்றொன்று 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் என இரண்டு விதமான ஆப்ஷனில் கிடைக்கின்றது. 1.2 லிட்டர் Puertech 82 NA எஞ்சின் அதிகபட்சமாக 82 PS பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக லிட்டருக்கு 18 கிமீ வெளிப்படுத்தும்…
பஜாஜ் ஆட்டோ-ட்ரையம்ப் கூட்டணியில் ஏற்கனவே ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400X என இரண்டு மாடல் விற்பனையில் உள்ள நிலையில் புதிதாக இரண்டு மாடல்களை 400சிசி விரைவில் அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற இரண்டு மாடல்களிலும் உள்ள 400சிசி இன்ஜினில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தாமல் பயன்படுத்தப்பட்டு கூடுதலாக சில மாற்றங்கள் டிசைன் மற்றும் வடிவமைப்பில் மட்டுமே பெற்றதாக வரவுள்ளது. குறிப்பாக ஏற்கனவே சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த செமி ஃபேரிங் செய்யப்பட்ட திரஸ்ட்டன் 400 மாடல் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மற்றொரு மாடல் குறித்து எந்த ஒரு தகவலும் தற்பொழுது வெளியாகவில்லை. இரு மாடலிலும் TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.…
புதிய நிறங்களுடன் பாடி கிராபிக்ஸ் மேம்படுத்தப்பட்டு 2024 ஆம் ஆண்டிற்கான டிவிஎஸ் மோட்டார் என்டார்க் 125 மற்றும் என்டார்க் ரேஸ் எக்ஸ்பி என இரண்டு மாடல்களும் விற்பனைக்கு வெளியாகி உள்ளன. 2024 TVS Ntorq 125 இந்தியாவின் 125சிசி சந்தையில் மிகவும் பிரீமியம் ஸ்டைல் மற்றும் ஸ்போர்ட் தோற்ற அமைப்பு என பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கின்றது. இந்த மாடல் ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற ஸ்போர்டிவ் ஸ்டைல் பெற்ற சுசூகி அவெனிஸ், ஹோண்டா டியோ 125, ஏப்ரிலியா SR125 மற்றும் வரவிருக்கும் ஹீரோ நிறுவனத்தின் ஜூம் 125ஆர் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது. புதிதாக ப்ளூ, கிரே மற்றும் டர்க்கைஸ் என மூன்று விதமான நிறங்களை என்டார்க் 125 பெறுகின்ற நிலையில் அடுத்து என்டார்க் XP மேட் கருப்பு நிறத்துடன் புதுப்பிக்கப்பட்ட ரேசிங் பாடி கிராபிக்ஸ் பல்வேறு இடங்களில் டெக்ஸச்சர் பெற்றுள்ளது. எஞ்சின் மற்றும் மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது.…
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் செடான் மாடல் ஆனது புதுப்பிக்கப்பட்ட மாடலாக வருகின்ற ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்க மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது உள்ள மாடலின் வசதிகளில் கூடுதலான இன்டீரியர் அம்சங்கள் மற்றும் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த மாடலானது ஏற்கனவே சந்தையில் இருக்கின்ற ஹூண்டாய் ஆரா மற்றும் புதிதாக வரவுள்ள 2024 மாருதி சுசூகி டிசையர் போன்ற மாடல்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்த வகையில் அமைந்திருக்கும். தோற்ற அமைப்பில் புதிய டிசைன் அலாய் வீல் பக்கவாட்டில் பெரிதாக மாற்றங்கள் இல்லை என்றாலும் முன்புறத்திலும் பின்புற பம்பர் என பல்வேறு மாற்றங்கள் பெற்று இருக்கும் கூடுதலாக அடிப்படையான பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கலாம். தொடர்ந்து தற்பொழுது அமேஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 Hp பவர் வழங்குவதுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT…
டாடாவின் கர்வ்.இவி விற்பனைக்கு வந்துள்ள நிலையில் கர்வ் ICE மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 500 லிட்டர் பூட்ஸ்பேஸ் கொண்டுள்ள இந்த மாடல் ஆனது சிறப்பான வகையில் மைலேஜ் வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு இன்ஜினைக் கொண்டிருக்கின்றது புதிதாக உருவாக்கப்பட்ட 1.2 லிட்டர் ஹைப்பர்ஐயன் இந்த மாடல் ஆனது பெறுகின்றது. Tata Curvv Adaptive Tech Forward lifestyle architecture எனப்படுகின்ற ATLAS பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கர்வ் காரில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனை கொண்டிருக்கின்றது. புதிய Hyperion 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 125 hp பவரை 5,500RPMயிலும், 1700-3500RPM-ல் 225NM டார்க் வெளிப்படுத்தும். இதில் ஆறு வேகம் மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆறு வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் ஆனது பயன்படுத்தப்பட உள்ளது. Revtron 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 119…