2024 ஆம் ஆண்டிற்கான யெஸ்டி மோட்டார் சைக்கிளின் புதிய அட்வென்ச்சர் பைக்கின் சிறிய மாற்றங்களுடன் மேம்பட்ட எஞ்சின் மற்றும் புதிய நிறங்கள் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2024 Yezdi Adventure தொடர்ந்து அட்வென்ச்சர் என்ஜின் பவர் மற்றும் டார்க்கில் எந்த மாற்றங்கள் இல்லாமல் வந்திருந்தாலும் கூட என்ஜினுடைய பாகங்கள் முன்பை விட புதுப்பிக்கப்பட்டு இருப்பதுடன் பல்வேறு மேம்பாடுகளை செய்துள்ளதாகவும் மேலும் புகைப்போக்கில் உள்ள சில மாற்றங்களுடன் சிறப்பான ஒரு பயண அனுபவத்தை வழங்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. 334சிசி, சிங்கிள்-சிலிண்டர், DOHC, லிக்விட் கூல்டு எஞ்சின் பெற்று 8000 RPM-ல் 29.60 PS மற்றும் 6500 RPM-ல் 29.56 Nm டார்க் வழங்குவதுடன் இந்த மாடலில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் கொண்டுள்ள யெஸ்டி அட்வென்ச்சரில் முன்புறம் 41 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் 7-ஸ்டெப் ப்ரீ-லோட் அட்ஜஸ்ட்மென்டுடன்…
Author: MR.Durai
EST 69 எனத் தெரியும் வகையில் 1969 ஆம் ஆண்டு வெளியான யெஸ்டி பைக்கை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் அட்வென்ச்சர் மாடல் ஆனது மேம்படுத்தப்பட்ட எஞ்சின் மற்றும் புதிய நிறங்களை பெறுவது உறுதியாகி உள்ளது. 2024 Yezdi Adventure தற்பொழுது உள்ள அட்வென்ச்சர் மாடலின் பவர் மற்றும் டார்க்கில் பெரிதாக எந்த ஒரு மாற்றங்களும் இருக்காது ஆனால் என்ஜின் உடைய உட்புற பாகங்கள் பல்வேறு மாற்றங்கள் பெறப்பட்டு மேலும் சிறப்பான ரைடிங் அனுபவத்தை வெளிப்படுத்த வகையிலான அமைப்பினை கொடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் யெஸ்டி வெளியிட்ட டீசரில் புதிய எஞ்சின் என குறிப்பிட்டு இருக்கின்றது. எனவே மிக முக்கியமான சில மாற்றங்கள் ஆனது இந்த என்ஜினில் எதிர்பார்க்கலாம். 334சிசி, சிங்கிள்-சிலிண்டர், DOHC, லிக்விட் கூல்டு எஞ்சின் பெற்று 8000 RPM-ல் 30.2 PS மற்றும் 6500 RPM-ல் 29.9 Nm டார்க் வழங்குவதுடன் இந்த மாடலில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது.…
5 டோர் பெற்ற மாடலாக வரவுள்ள தார் ராக்ஸ் ஆஃப் ரோடு எஸ்யூவி ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் மற்றொரு டீசரை மஹிந்திரா ஆட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற மஹிந்திராவின் தார் 3 டோர் மாடலில் இருந்து பெறப்பட்ட அடிப்படையான டிசைனில் ராக்ஸ் மாடலுக்கான நவீனத்துவமான வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. மஹிந்திரா தார் ராக்ஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனையும் பெறவுள்ள ரியர் வீல் டிரைவ் மாடல்களுக்கு 1.5 லிட்டர் டீசல் என்ஜின், ஆல் வீல் டிரைவ் வேரியண்டுகளுக்கு 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் கூடுதலாக 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷனை பெறுவதுடன் மூன்று என்ஜினிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் பெற உள்ளது. 6 ஏர்பேக்குகள் உட்பட Level 2 ADAS பாதுகாப்பு தொகுப்பு கொண்டிருக்கலாம். கூடுதலாக கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்இடி லைட்டுகள்,…
நடுத்தர எஸ்யூவி சந்தையில் கூபே ஸ்டைல் பெற்ற மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள டாடா மோட்டார்சின் கர்வ் ICE மாடலில் இடம் பெற உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜினை பற்றி அறிந்து கொள்ளலாம். 40.5kwh மற்றும் 55kwh பேட்டரி ஆப்ஷனைப் பொறுத்தவரை இரண்டு விதமான பேட்டரிகளை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. Tata Curvv and Curvv.ev ICE வரிசையில் இடம் பெறுகின்ற மூன்று எஞ்சினிலும் Eco, City மற்றும் Sports என மூன்று விதமான டிரைவ் மோடுகள் ஆனது பெற உள்ளது. மூன்று எஞ்சினிலும் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்று இருக்கும். புதிதாக ஒரு 1.2 லிட்டர் டர்போ GDI எஞ்சின் ஆனது கொண்டு வருகின்றது. இந்த மாடலுக்கு அந்த மாடலின் பவர் விபரங்கள் தற்பொழுது வெளியாகவில்லை.…
இந்தியாவின் 160சிசி பைக் செக்மெண்டில் மிகவும் பிரபலமான ஒரு ஸ்போர்டிவாக பிரிவாக உள்ள சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் ஆனது சில மாறுபாடுகளுடன் கூடுதலான சில வசதிகளையும் பெற்று போட்டியாளர்களுக்கு ஒரு கடும் சவாலினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சந்தையில் கிடைக்கின்ற பல்சர் NS160 , டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V என இரு மாடல்களை நேரடியாக எதிர்கொள்கின்ற நிலையில் மற்ற மாடல்களான யமஹா நிறுவனத்தின் MT-15, சுசூகி ஜிக்ஸர், ஆகியவற்றுடன் சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்றது. 2024 Hero Xtreme 160R 4V குறிப்பாக அடிப்படையான எக்ஸ்ட்ரீம் 160R 4V டிசைனில் மாற்றங்கள் இல்லை என்றாலும் ஸ்பிளிட் சீட்டிற்கு பதிலாக இந்த முறை ஒற்றை இருக்கை அமைப்பானது கொடுக்கப்பட்டு மிகவும் கம்ஃபோர்ட்டான இருக்கை சேர்க்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலின் ஸ்பிளிட் சீட் ஆனது பின்புறத்தில் அமருபவர்களுக்கு கடும்…
இந்தியாவில் ரூ.14.90 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CE04 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் முதல் டெலிவரி வழங்கப்பட உள்ளது. இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஸ்கூட்டர்களில் அதிக விலை கொண்ட மாடலாக விளங்குகின்றது. BMW CE04 பிஎம்டபிள்யூ CE 04 மாடலில் 8.5kWh பேட்டரி கொண்டு இயக்கப்படுகிற நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 130km தூரத்தை வழங்குகிறது. திரவ-குளிரூட்டப்பட்ட நிரந்தர காந்த மோட்டார், பொருத்தப்பட்டு 31kW (42hp) மற்றும் 62Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. Eco, Rain, Road என மூன்று விதமான ரைடிங் மோடுகளுடன் CE 04 மாடல் 2.6 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 50 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்றும், எலக்ட்ரானிக் முறையில் வரையறுக்கப்பட்ட 120 கிமீ வேகத்தை எட்டும் என குறிப்பிட்டுள்ளது. டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ஆஃப்செட் மோனோஷாக் பெற்று ஸ்டீல் இரட்டை லூப் சேஸ் உடன் பிரேக்கிங் அமைப்பில் J.Juan ரேடியல் பொருத்தப்பட்ட…