Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

2024 ஆம் ஆண்டிற்கான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய Xtreme 160R 4V மாடல் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் பேனிக் பிரேக் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் பிரவுன் நிறம் மட்டுமல்லாமல் பல்வேறு சிறப்பம்சங்கள் கூடுதலான வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது அவற்றின் விபரங்கள் தொடர்ந்து பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது. Hero Xtreme 160R 4V 2024 முந்தைய ஸ்பிளிட் இருக்கைக்கு பதிலாக ஒற்றை இருக்கையுடன் வந்துள்ள எக்ஸ்ட்ரீம் 160R 4V  2024 மாடலில் பேனிக் பிரேக் அலர்ட்(Panic Brake Alert) அவசரமாக பிரேக்கினை இயக்கும் பொழுது பிரேக் லைட், இண்டிகேட்டர் வாயிலாக பின்னால் வருபவர்களுக்கும் அவசரகால பிரேக் என்பதை உனரரும் வகையிலான அமைப்பினை இந்த பிரிவில் முதன்முறையாக ஹீரோ கொண்டு வந்துள்ளது. டிராக் டைமர் (Drag Timer) என்ற பெயரில் ஆக்சிலிரேஷனை அறிவதற்காக D1 மோடில், 0-60 km/h) மற்றும் லேப் டைம் நேரம் அடுத்து, D2 மோடில், quarter mile…

Read More

ஆகஸ்ட் 7ஆம் தேதி வரவுள்ள டாடா மோட்டார்சின் கர்வ்.இவி கூபே ஸ்டைல் எலெக்ட்ரிக் காரில் 40.5Kwh மற்றும் 55Kwh இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் பெற வாய்ப்புள்ளது. குறைந்த ரேஞ்ச் வெளிப்படுத்தக் கூடிய 40.5 kWh பேட்டரி ஏற்கனவே சந்தையில் உள்ள பிரபலமான நெக்ஸான்.இவி காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட உள்ள டாப் வேரியண்டில் 55Kwh பேட்டரியும் பெற உள்ளது. இந்த பேட்டரி அடுத்த ஆண்டு வரவுள்ள ஹாரியர்.இவி காரில் கூட பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது Tata Curvv.ev Battery and Range டாடா கர்வ்.ev காரில் புதிய 55kWh பேட்டரி பெற்று முழுமையாக சிங்கிள் சார்ஜில் 550Km வரை வெளிப்படுத்தும். இருப்பினும், குறைந்த விலை 40.5kWh பேட்டரியின் ARAI சான்றிதழ் படி 465km ரேஞ்ச் வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது முன்புற ஆக்ஸ்லில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் வெளிப்படுத்தக் கூடிய பவர் மற்றும் டார்க் தொடர்பான எந்த விபரங்களும் தற்பொழுது வெளியாகவில்லை. முழுமையான…

Read More

மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற செடான் ரக 2024 டிசையர் மாடல் ஆகஸ்ட் மாதம் மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் புதிய டிசையரை பற்றி பல்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் ஸ்விஃப்ட் காரில் இருந்து என்னென்ன வசதிகள் பெறப்போகின்றது, கூடுதலாக என்ன வசதிகள் இடம் பெறலாம் போன்றவற்றை எல்லாம் தொடர்ந்து இப்பொழுது நாம் பார்க்கலாம். 2024 Maruti Suzuki Dzire முந்தைய நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜினுக்கு பதிலாக தற்பொழுது மூன்று சிலிண்டர் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் Z சீரியஸ் இடம் பெற உள்ளது. Z12E 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 82 hp மற்றும் 112 என்எம் டார்க் வெளிப்படுத்தும். டிசையருக்கும் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படும். ஸ்விஃப்ட் மாடலில் இருந்து வேறுபடுத்தி வித்தியாசமான கிரில் மற்றும் டாப் வேரியண்டுகளில் எல்இடி புராஜெக்ட்ர் ஹெட்லைட் பெற்று ஃபோக் விளக்கு அறையில் சிறிய மாற்றங்கள்…

Read More

சமீபத்தில் மராஸ்ஸோ எம்பிவி மாடலை தனது இணையதளத்தில் நீக்கியிருந்த மஹிந்திரா மீண்டும் தனது இணையதளத்தில் ரூ.20,000 வரை விலையை உயர்த்தி வெளியிட்டுள்ளதால் ரூ.14,59,400 முதல் ரூ.17,00,200 வரை அமைந்துள்ளது. மராஸ்ஸோ காருக்கு போட்டியாக இந்திய சந்தையில் ரெனால்ட் ட்ரைபர், பிரசத்தி பெற்ற மாருதி எர்டிகா, XL6, டொயோட்டா ரூமியன் மற்றும் கியா கேரன்ஸ் போன்றவை கிடைத்து வருகின்றது. Mahindra Marazzo மராஸ்ஸோ காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 123hp மற்றும் 300Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து வேரியண்டிலும் 2 எர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி, ரியர் பார்க்கிங் சென்சாரை கொண்டிருக்கிறது. 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டராய்டு ஆட்டோ, ஸ்டீயரிங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆடியோ கண்ட்ரோல், புரஜெக்டர் ஹெட்லேம்ப், ஆட்டோ ஏசி கட்டுப்பாடு மற்றும் மூன்று வரிசைகளுக்கு ஏசி வெண்ட்,…

Read More

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மோட்டார்சைக்கிளின் என்ஜின் விபரம் உண்மையான மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃப்ரீடம் 125 பைக்கில் 2 கிலோ கொள்ளளவு பெற்ற சிஎன்ஜி சிலிண்டர் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. Bajaj Freedom 125 CNG True Mileage ஃப்ரீடம் 125 மாடலில் பொருத்தப்பட்டுள்ள 124.8cc என்ஜின் CNG எரிபொருளில் 8,000 rpm-ல் 9.5 hp பவர் மற்றும் 5,000 rpm-ல் 9.7 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேகத்தில் கியர்பாக்ஸ்  கொடுக்கப்பட்டிருக்கின்றது. 2 லிட்டர் பெட்ரோல் நிரப்பும் வகையிலான டேங்க் கொடுக்கப்பட்டு மைலேஜ் லிட்டருக்கு 65கிமீ என மொத்தமாக 130கிமீ வழங்கவும் மற்றும் 1 கிலோ சிஎன்ஜி எரிபொருள் 100கிமீ என 2 கிலோ சிஎன்ஜி சிலிண்டருக்கு 200கிமீ என…

Read More

ராயல் என்ஃபீல்டின் நிறுவனத்தின் புதிய ரோட்ஸ்டெர் மோட்டார்சைக்கிள் மாடலாக வெளியிடப்பட்டுள்ள Guerrilla 450 பைக்கின் ஆரம்ப விலை ரூ.2.39 லட்சம் முதல் ரூ.2.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை அமைந்துள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள ஹிமாலயன் 450 பைக்கின் அடிப்படையிலிருந்து பெறப்பட்ட என்ஜின் உட்பட சேஸ் என அடிப்படையான பல்வேறு அம்சங்களை பகிர்ந்து கொண்டு தனித்துவமான வடிவமைப்பினை Guerrilla கொண்டுள்ளது. Royal Enfield Guerrilla 450 Sherpa 452cc என்ஜின் பொருத்தப்பட்ட Guerrilla மாடலில் சிங்கிள் சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 40.02 ps பவர் மற்றும் 5,500rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் 43mm டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் லிக்ங்டூவகை மோனோஷாக் அப்சார் கொண்ட ஸ்விங்கார்ம் இடம்பெற்றுள்ளது. சியட் நிறுவனத்தின் பிரத்தியேகமாக முன்புறத்தில் 120/70-R17…

Read More