சந்தையில் கிடைக்கின்ற மூன்று கதவுகளை கொண்ட தார் எஸ்யூவி காரின் அடிப்படையில் தார் ராக்ஸ் (THAR ROXX) என்ற பெயரினை மஹிந்திரா சூட்டியுள்ளது. முன்பாக அர்மடா என்ற பெயரை எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்ட ராக்ஸ் பெயருடன் டீசரும் வெளியிடப்பட்டிருக்கின்றது. Mahindra Thar ROXX குறிப்பாக தற்பொழுது உள்ள மூன்று கதவுகளை கொண்ட தார் மாடல்களை விட அதிநவீன வசதிகளும் பல்வேறு சிறப்பம்சங்களையும் பெற உள்ள இந்த மாடலானது பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனையும் பெறவுள்ளது. RWD மாடல்களுக்கு 1.5 லிட்டர் டீசல் என்ஜின், AWD வேரியண்டுகளுக்கு 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் கூடுதலாக 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷனை பெறுவதுடன் மூன்று என்ஜினிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் பெற உள்ளது. 6 ஏர்பேக்குகள் உட்பட லெவல் 2 ADAS பாதுகாப்பு தொகுப்புடன் கூடுதலாக கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் 10.25 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்,…
Author: MR.Durai
இந்தியாவின் குறைந்த விலை அட்வென்ச்சர் ரக மாடாலாக வரவுள்ள மிகவும் மேம்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கினைஅடுத்த ஒரு சில மாதங்களுக்குள் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக தற்பொழுது விற்பனையில் உள்ள எக்ஸ்பல்ஸ் 200v மாடலுக்குப் பதிலாக கரீஸ்மா XMR210 பைக்கில் இடம்பெற்றுள்ள 210சிசி லிக்யூடு கூல்டு என்ஜினை பெறக்கூடும். Hero Xpulse 210 தற்பொழுதுள்ள மாடலில் உள்ள ஆயில் கூல்டு 199.6ccக்கு பதிலாக 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC (Double Overhead Camshaft) அமைப்பினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டிருக்கலாம். என்ஜினை தவிர மற்ற மெக்கானிக்கல் அம்சங்களில் சிறிய மேம்பாடுகளை பெற்று டிசைனில் புதுப்பிக்கப்பட்ட பெட்ரோல் டேங்க் மற்றும் முன்புற பேனல்களில் சில மாறுதல்களை பெற்றிருக்கலாம். முன்புறத்தில் 90/90-21 M/C 54S…
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா எலக்ட்ரிக் பிராண்டில் நடப்பு நிதியாண்டில் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வெளியிட உள்ளது. தற்போது V1Pro, V1 Plus என இரண்டு ஸ்கூட்டர்கள் விற்பனையில் உள்ள நிலையில் அடுத்து வரவுள்ள இரண்டு மாடல்களில் ஒன்று மிகக் குறைவானதாக ரூபாய் ஒரு லட்சத்திற்குள் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. Hero Vida EScooter ஹீரோ நிறுவனம் இந்திய அரசின் PLI (Production Linked Incentive) திட்டத்தின் சலுகைகளை பெறுவதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில், ரூ.1 லட்சம் விலைக்கு குறைவாக வெளியிட உள்ள இ-ஸ்கூட்டர் 80 முதல் 100 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம். நடப்பு நிதி ஆண்டில் இரண்டு வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் 2025-2026 ஆம் தேதி ஆண்டுக்குள் வீடா எலக்ட்ரிக் வரிசையில் ஆறு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் ஜீரோ மோட்டார் சைக்கிளுடன் இணைந்து 4 மோட்டார் சைக்கிள்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை…
உலகின் நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் கூடுதலாக 250சிசி பைக்குகளை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. Royal Enfield 250cc தற்பொழுது ராயல் என்ஃபீல்டு ஆரம்ப நிலை எஞ்சின் 350சிசி ஆக உள்ளதால் பல்வேறு மாடல்கள் இந்த இன்ஜினை பெற்று ஹண்டர் 350 ரூபாய் 1.50 லட்சம் விலையில் துவங்குவதனால் இதைவிட குறைவாகவும் அல்லது எதிர்காலத்தில் விலை அதிகரிக்கும் போது விலையை ஈடுகட்ட 250 சிசி என்ஜின் முக்கிய ஒரு காரணியாக இருக்கலாம். 250cc இஞ்சின் தயாரிப்பு தொடர்பாக பல்வேறு ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும் கூட தற்பொழுது மேல்மட்டத்தில் இருந்து அனுமதி codename V என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் வரவுள்ள புதிய மாடல்கள் 2026-2027 ஆம் நிதியாண்டில் குறைந்த சிசி பெற்றதாக வரக்கூடும் கூறப்படுகின்றது. குறிப்பாக அதிகரித்து வரும் போட்டியை ஈடுகட்டவும் மேலும் கடுமையான…
கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் எல்ட்ரா சிட்டி மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஷா விற்பனைக்கு ரூபாய் 3.66 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக கடந்தாண்டு இறுதியில் எல்ட்ரா சரக்கு வாகன உற்பத்தி மற்றும் விற்பனையானது தொடங்கப்பட்டிருந்தது தற்பொழுது பயணிகளுக்கான ஆட்டோ ரிக்சா ஆக வெளியிடப்பட்டுள்ளது. Greaves Eltra City 10.8 kWh பேட்டரி பேக் கொண்டுள்ள எல்ட்ரா கார்கோ மாடல் அதிகபட்சமாக 9.5 kW அதிகபட்ச பவர் மற்றும் 49 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. எல்ட்ரா ஒரே சார்ஜில் 160 கிலோ மீட்டர் மேல் செல்லும் திறன் கொண்டதாகும். எல்ட்ரா சிட்டி ஒரு அதிநவீன 6.2″ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரையும், வாகன இருப்பிடம் மற்றும் ஜியோ ஃபென்சிங், வாகனம் மற்றும் ஓட்டுநர் செயல்திறன் மேலாண்மை போன்ற அம்சங்களும் IoT திறன்களுடன் நிகழ்நேரத் தகவல் மற்றும் நேவிகேஷன் வசதி பயன்படுத்துவதில் ஓட்டுநர்களுக்கு உதவுகிறது. ஆட்டோரிக்ஷா தவிர எல்ட்ரா பிக்கப், எல்ட்ரா டெலிவரி மற்றும்…
பிரசித்தி பெற்ற சுசூகி ஆக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மேக்ஸி ஸ்டைல் என இரண்டு ஸ்கூட்டரிலும் ஏற்கனவே விற்பனையில் உள்ள நிறங்களில் கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் அவெனிஸ் 125 ஸ்கூட்டரில் நான்கு புதிய நிறங்களை பெற்றதாக வெளியானது. பொதுவாக இந்த மூன்று ஸ்கூட்டரிலும் 8.5bhp பவர் மற்றும் 10Nm டார்க்கை வழங்கும் 124சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் ஆனது வழங்கப்பட்டிருக்கின்றது. முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் ட்ரம் பிரேக்குடன் கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டமானது கொடுக்கப்பட்டிருக்கின்றது. முன்பக்கம் 12 அங்குல டயர் மற்றும் பின்பகுதியில் 10 அங்குல டயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. Access 125 Rs 84,135 – Rs 94,736 Burgman Street Rs 98,299 ஆக்செஸ் 125 இப்போது டூயல் டோனில் மெட்டாலிக் சோனோமா ரெட்…