Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் பஜாஜ் ஃபிரீடம் 125 மாடலுக்கான முன்பதிவு இரு மாநிலங்களில் மட்டும் தொடங்கப்பட்ட நிலையில் தற்பொழுது நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. அறிமுகத்தின்பொழுது முன்பதிவு மேற்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு தற்பொழுது சிஎன்ஜி மோட்டார் சைக்கிளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புனேவில் டெலிவரி துவங்கி உள்ளது. ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் அறிமுகம் முதல் தற்பொழுது வரை பல்வேறு விசாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குறிப்பாக 30,000க்கு மேற்பட்ட விசாரிப்புகளை இந்நிறுவனம் பெற்றுள்ளதாக குறிப்பிடுகின்றது. 125cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 9.7PS பவர் மற்றும் 9.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் உள்ள இரண்டு லிட்டர் பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி ஆனது ஒட்டுமொத்தமாக 330 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிடுகின்றது. இதில் சிஎன்ஜி எரிபொருள் ஒரு கிலோவுக்கு 102 கிலோமீட்டர் மற்றும் பெட்ரோல் லிட்டருக்கு 65கிமீ வழங்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.…

Read More

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரின் புதிய கொரில்லா 450 பைக்கின் சிறப்புகள் மைலேஜ் நிறங்கள் மற்றும் தமிழ்நாட்டில் ஆன் ரோடு விலை ரூ.2.89 லட்சம் முதல் துவங்குகின்ற பட்டியல் அறிந்து கொள்ளலாம். Royal Enfield Guerrilla 450 செர்பா 452 என்ஜின் பெற்ற புதிய ஹிமாலயன் 450 பைக்கை தொடர்ந்து அதே பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோட்ஸ்டெர் மாடல் பல்வேறு மாறுதல்களை கொண்டு மிகவும் நவீனத்துவமான வசதிகள் மற்றும் ரெட்ரோ தோற்ற அமைப்பினை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. 452cc என்ஜின் பொருத்தப்பட்டு சிங்கிள் சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 40.02 ps பவர் மற்றும் 5,500rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றுள்ளது. கொரில்லா 450-யின் பரிமாணங்கள் நீளம் 2,090mm அகலம் 833mm மற்றும்…

Read More

ரூபாய்  2.39 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய கொரில்லா 450 மோட்டார் சைக்கிள் ஆனது பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட நவீன மாடர்ன் ரோட்ஸ்டராக விளங்குகின்றது. ஏற்கனவே சந்தையில் உள்ள ஹிமாலயன் 450 பைக்கில் உள்ள ஷெர்பா 452 என்ஜினை பகிர்ந்து கொண்டாலும் முற்றிலும் மாறுபட்ட பெர்பார்மன்ஸ் வெளிப்படுத்தும் என இந்நிறுவனம் உறுதிப்படுத்துகின்றது. ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் மாடலை விட 11 கிலோ வரை எடை குறைவாக அமைந்துள்ள கொரில்லா 450-யில் 17 அங்குல ட்யூப்லெஸ் டயர் உள்ளது. 120/70-R17 முன்புறத்தில் 310மிமீ டிஸ்க் மற்றும் 160/60-R17 பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. செர்பா 452 என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 40 hp பவர் மற்றும் 40 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்று சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது. ஆரம்பகட்ட Analogue வேரியண்டில் மீட்டியோர் 650 பைக்கில்…

Read More

பஜாஜ் ஆட்டோவை தொடர்ந்து சிஎன்ஜி பைக் மீதான கவனத்தை செலுத்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் துவங்கியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் டிவிஎஸ் மோட்டார் புதிய எலெக்ட்ரிக் டூவீலர் மற்றும் ICE பைக், கூடுதலாக எலக்ட்ரிக் 3 வீலர் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றது. ஏற்கனவே ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதலான சில வேரியண்டுகளை விற்பனைக்கு கொண்டு வந்தது. சமீபத்தில் பஜாஜ் வெளியிட்ட ஃபிரீடம் 125 பைக் ஆனது எரிபொருள் செலவு 50% வரை குறைக்கும் என குறிப்பிட்டுள்ளதால் பல்வேறு வாடிக்கையாளர்கள் இதன் மீதான ஆர்வத்தை திருப்புவார்கள் என்பதால் இதற்கு போட்டியாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் அல்லது மோட்டார்சைக்கிளை சந்தைக்கான மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவங்கியுள்ளதாக தெரிகின்றது. டிவிஎஸ் மோட்டாரின் செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் அனைத்து விதமான நுட்பங்களிலும் (சிஎன்ஜி, EV, multi-fuels, மேலும்…

Read More

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட்டிருந்த ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கில் NG04 டிஸ்க் எல்இடி, NG04 டிரம் எல்இடி மற்றும் NG04 டிரம் என மூன்று விதமான வேரியண்டுகள் பெற்று இருக்கின்றது.  புதிதாக பஜாஜ் உருவாக்கியுள்ள 125 சிசி என்ஜின் ஆனது சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு 9.5 hp பவர் மற்றும் 9.7Nm டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேகத்தில் கியர் பாக்ஸ் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. நேரடியாக சிஎன்ஜியில் தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃப்ரீடம் 125ல் பெட்ரோல் என்பது ஒரு துணை எரிபொருளாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இருந்த பொழுதும் அவ்வப்பொழுது பெட்ரோலில் இன்ஜினை இயக்குவது என்ஜினின் ஆயுள் காலத்தை அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கும். முழுமையாக சிஎன்ஜியில் இயங்கும் வகையிலும் இந்த எஞ்சின் ஆனது வடிவமைக்கப்பட்டிருப்பதால் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்ப்படாது என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. Freedom 125 NG04 Drum ரூபாய் 95 ஆயிரம்…

Read More

விற்பனையில் உள்ள டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 2V பைக்கின் அடிப்படையில் வெளியாகியுள்ள ரேசிங் எடிசனின் விலை ரூ.1,28,720 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.முன்பாக   கிடைக்கின்ற ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி  வசதிகளை கொண்ட வேரியண்ட்டை விட ரூ.1,500 வரை கூடுதலாக அமைந்துள்ளது. அப்பாச்சி RTR 160 2V மாடலில்  15.82 bhp பவர், 13.85 Nm டார்க் ஆனது வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் ஆனது வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் ஆகிய மூன்று ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது. ரேசிங் எடிஷனில், எரிபொருள் டேங்க் மற்றும் டெயில் பகுதியில் சிவப்பு மற்றும் சாம்பல் நிற கோடுகளுடன் கூடிய மேட் பிளாக் நிறத்தை கொண்டுள்ளது. இதனுடன் கார்பன் ஃபைபர் மற்றும் ரேஸ் மாடல்களுக்கான பாடி கிராபிக்ஸ் மற்றும் ரேசிங் எடிஷன் லோகோ உள்ளது. கூடுதலாக, சிவப்பு அலாய் வீல் கொண்டுள்ளது. மற்றபடி, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் டிஸ்க் பிரேக்…

Read More