எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த பிறகு முதல் மாடலாக வின்ட்சர் இவி ரூ.9.99 லட்சம் மற்றும் ஒரு கிமீ பேட்டரி பயன்பாடுக்கு ரூ.3.5 கட்டனமாக வசூலிக்கப்படுகிறது. அக்டோபர் 3 முதல் முன்பதிவு துவங்கப்பட்டு அக்டோபர் 13ல் டெலிவரி வழங்கப்பட உள்ளது. மிகவும் ஆடம்பரமான வசதிகள் பல்வேறு டிஜிட்டல் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் என அதிநவீன அம்சங்களை புகுத்தியதாக விற்பனைக்கு வந்துள்ள இந்த ஐந்து இருக்கை கொண்ட மாடலில் மிகவும் தாராளமான இடவசதியை கொண்டு 2700 மிமீ வீல்பேஸ் கொடுக்கப்பட்டு பின் வரிசை இருக்கையில் அமருபவர்களுக்கும் மிகவும் தாராளமான இடவசதி கொண்டிருப்பதுடன் 135 டிகிரி கோணத்தில் சாய்க்கும் அளவில் ஏரோபிளேனில் உள்ளதை போன்றதாக வழங்கப்பட்டு பல்வேறு இணையம் சார்ந்த அம்சங்களை பயணிகள் பெறுவதற்கு ஏற்றதாக உள்ளது. வின்ட்சர் இவி டிசைன், இன்டிரியர் CUV எனப்படுகின்ற வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட எம்ஜி Windsor EV மாடல் முன்புறத்தில்…
Author: MR.Durai
125சிசி சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டெஸ்டினி 125 ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஒரு விற்பனை எண்ணிக்கை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்த நவீனத்துவமான வசதிகளுடன் கூடிய ரெட்ரோ ஸ்ட்டைல் அமைப்பு போன்றவை எல்லாம் கவர்ச்சிகரமாக அமைந்திருப்பது மிகப்பெரிய பக்கபலமாக அமைந்திருக்கின்றது . குறிப்பாக 125சிசி சந்தையில் சுசூகி ஆக்செஸ் 125 அதிகப்படியான வரவேற்பினை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும் டிவிஎஸ் ஜூபிடர் 125, யமஹா ஃபேசினோ 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 போன்ற மாடல்கள் கடும் போட்டியை டெஸ்டினி 125க்கு ஏற்படுத்துகின்றது. 2024 ஹீரோ டெஸ்டினி 125 டிசைன் புதுப்பிக்கப்பட்ட டிசைன் என்பது முற்றிலுமாக தோற்ற அமைப்பில் மாற்றப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக ரெட்ரோ சார்ந்த அம்சங்கள் பல்வேறு இடங்களில் பிரதிபலிக்கின்றது டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் அப்புறம் பகுதியிலும் சரி பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கின்ற பேனல்கள் மற்றும் ஹெட்லைட் அமைப்பு நவீனத்துவமாக மேம்படுத்தப்பட்டிருக்கின்றது. எல்இடி புராஜெக்டர் விளக்கு…
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் முதல் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு மார்ச் 2025ல் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 64வது SIAM வருடாந்திர கூட்டத்தில் பேசிய HMSI சிஇஓ திரு.சூட்சுமூ ஓட்னி கூறுகையில், மின்சார ஸ்கூட்டர் வெளியீடு ஏற்கனவே குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு மேல் தாமதமாகிவிட்டது என்று அவர் கூறினார். இருப்பினும், இப்போது முதல் எலெக்ட்ரிக் மாடல் மார்ச் 2025ல் அறிமுகப்படுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஏற்கனவே ஹோண்டா நிறுவனம் குறிப்பிட்டபடி வரவுள்ள ஆக்டிவா இ-ஸ்கூட்டர் பேட்டரி ஸ்வாப் மற்றும் ஃபிக்சிட் பேட்டரி என இரண்டு விதமான ஆப்ஷனிலும் வர உள்ளது. பேட்டரி ஸ்வாப்பிங் செய்வதற்கு இந்நிறுவனத்தின் ஹோண்டா e-power நிறுவனத்தை இந்நிறுவனம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள உள்ளது. இதற்கான பேட்டரி ஸ்வாப்பிங் மையங்களை இந்நிறுவனம் நிறுவிக்கொள்ளும் எனக் குறிப்பிடப்படுகின்றது. நாடு முழுவதும் உள்ள ஹோண்டா டீலர்கள் மூலம் பேட்டரி ஸ்டாப்பிங் நிலையங்களை திறப்பதற்கான முயற்சியை ஹோண்டா நிறுவனம்…
2024 ஆம் ஆண்டிற்கான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 2V மாடல் ஆனது ஒற்றை வேரியண்டில் மட்டும் விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றது கூடுதலாக சில வசதிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் விலை முந்தைய மாடலை விட ரூபாய் 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இருக்கையின் அமைப்பு மேம்படுத்தப்பட்டதாகவும் டிஜிட்டல் கிளஸ்டரில் டிராக் டைமர் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. முன்பாக டிஸ்க் பிரேக் பின்புறத்திலும் கொடுக்கப்பட்டு பல்வேறு வேரியண்ட் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது ஒற்றை வேரியண்ட் மட்டும் சிங்கிள் டிஸ்க் உடன் ஸ்டெல்த் கருப்பு நிறத்தில் கிடைக்கின்றது. புதுப்பிக்கப்பட்ட டையில் லைட் , எக்ஸ்ட்ரீம் 160R 4V மாடலை போல டிராக் டைமர் (Drag Timer) என்ற பெயரில் ஆக்சிலிரேஷனை அறிவதற்காக D1 மோடில், 0-60 km/h) மற்றும் லேப் டைம் நேரம் அடுத்து, D2 மோடில், quarter mile timing ஆகியவற்றை அறிவதற்கும், உங்கள் வேகமான நேரத்தை பேக்கப் எடுக்கவும் அனுமதிக்கின்றது. 163.2cc ஏர்-ஆயில் கூல்டூ…
இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற ஹேச்பேக் ரக மாடலான மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது வந்துள்ள 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் Z12E அடிப்படையாகக் கொண்டு வரவுள்ள இந்த புதிய சிஎன்ஜி மாடல் மிகச் சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டதாக விளங்கலாம். Maruti Suzuki Swift S-CNG மாருதி நிறுவனம் S-CNG என அழைக்கின்ற சிஎன்ஜி மாடல்கள் மிக சிறப்பான வரவேற்பதின் நாடு முழுவதும் பெற்று வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனம் சிஎன்ஜி கார் விற்பனை சந்தையில் முதன்மையாகவும் விளங்கி வருகின்றது. புதிய எஞ்சின் மிகவும் சிறப்பான வகையில் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பவர் அதிகபட்சமாக 81.6 PS மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல்…
பஜாஜ் ஆட்டோவின் சிஎன்ஜி பைக்கை தொடர்ந்து அடுத்ததாக முழுமையான 100 % எத்தனால் மூலம் இயங்கும் வகையிலான பல்சர் என்எஸ் 160 ஃபிளெக்ஸ் பைக்கினை அறிமுகம் செய்துள்ளது. மாசு உமிழ்வினை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வரும் நிலையில் பெற்றோருக்கு மாற்றாக இருசக்கர வாகனங்களில் எலெக்ட்ரிக் மற்றும் மாற்று வடிவ எரிபொருள்களுக்கான முன் வடிவங்களை பல்வேறு நிறுவனங்கள் ஏற்படுத்தி வருகின்றன அந்த வகையில் ஏற்கனவே பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜி பைக்கை கொண்டு வந்திருக்கின்றது. இதை தவிர முன்பாக 2019 ஆம் ஆண்டிலேயே டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் அப்பாச்சி பைக் அறிமுகம் செய்திருந்தது. ஆனால் போதுமான எத்தனால் வழங்கும் மையங்கள் இல்லாத காரணத்தாலும் வரவேற்பு பெரிதாக எதிர்பார்த்த அளவு இல்லாததாலும் இந்த மாடல் விற்பனைக்கு தொடர்ந்து வழங்கப்படவில்லை. India Bio-Energy & Tech (IBET) Expo 2024 அரங்கில் பஜாஜ் E100 பல்சர்…