பண்டிகை காலத்தை முன்னிட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட புல்லட் 350 மாடல்களில் பட்டாலியன் கருப்பு என்ற நிறத்தை ரூ.1,74,875 விலையில் விற்பனைக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்பாக இந்த மாடலில் மில்ட்டரி வரிசையில் சிவப்பு, கருப்பு, சில்வர் ரெட், சில்வர் பிளாக், இது தவிர ஸ்டாண்டர்டில் கருப்பு, மரூன் மற்றும் டாப் மாடலாக பிளாக் கோல்டு என 7 நிறங்கள் கிடைத்து வருகின்றது. மற்றபடி, எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லை தொடர்ந்து கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 என இரண்டு ஒரே J வரிசை 349சிசி எஞ்சினை பகிர்ந்து கொள்ளுகின்றது. 6100 RPM-ல் 20hp பவர் மற்றும் 4,000 RPM-ல் 27Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது கொண்டிருக்கும். 41 மிமீ முன்புற டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர், அகலமான டயர்களாக முன்புறத்தில் 100/90 -19 மற்றும்…
Author: MR.Durai
பிஎம்டபிள்யூ மோட்டார்டு இந்திய நிறுவனத்தின் புதிய F 900 GS, F 900 GS அட்வென்ச்சர் டூரிங் என இரு மாடல்களும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் ரூ.13.75 லட்சம் முதல் ரூ.14.75 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள இரு மாடல்களின் டெலிவரியும் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கலாம். புதிய F900 வரிசை மாடலில் இடம்பெற்றுள்ளதற்போதைய 853சிசி என்ஜினில் இருந்து புதுப்பிக்கப்பட்ட 895சிசி புதிய எஞ்சின் அதிகபட்சமாக 105hp பவர் மற்றும் 93Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.`இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. முந்தைய மாடலை காட்டிலும் கூடுதலாக 10hp வரை பவரும், 1Nm டார்க் உயர்ந்துள்ளது. ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக F 900 GS மற்றும் குறைந்த டூரிங் பயன்பாடுகளுக்கு ஏற்றதாக F 900 GSA விளங்க உள்ளது. முன்புறத்தில் 21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல ஸ்மோக்…
சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட நிறங்களை பெற்றிருந்த 2024 யமஹா R15M பைக்கில் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி பாடி கிராபிக்ஸ் டிசைன் பெற்ற மாடல் கூடுதலாக வெளியிடப்பட்டிருக்கின்றது. கூடுதலாக MT 15 பைக்கில் எந்த மாற்றங்களும் இல்லாமல் விலை மற்றும் ரூபாய் 700 உயர்த்தப்பட்டுள்ளது. மான்ஸ்டர் எனர்ஜி லோகோ பெற்று கூடுதலாக பாடி கிராபிக்ஸ் ஆனது மோட்டோ ஜிபி பந்தயங்களில் உள்ள பைக்குகளில் பயன்படுத்துவதற்கு இணையாக வழங்கப்பட்டிருக்கின்றது. மற்றபடி வழக்கமாக உள்ள மாடலில் உள்ளதைப் போன்றே மெக்கானிக்கல் மற்றும் எஞ்சின் சார்ந்த அம்சங்கள் உள்ளன. R15M மற்றும் MT 15 என இரண்டிலும் சக்திவாய்ந்த செயல்திறனை வெளிப்படுத்துகின்ற 155cc எஞ்சின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 14.2Nm at 7,500rpm மற்றும் அதிகபட்ச சக்தி 13.5 kW at 10,000 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. சமீபத்தில் ஆர்15எம் மாடலில் கார்பன் ஃபைபர் பேட்டர்ன் கொண்டுள்ள வகையிலான பேனல்கள் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு வெளியானது. கூடுதலாக R15M மாடலில்…
பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள மஹிந்திரா நிறுவனத்தின் வீரோ மினி டிரக் மாடலில் ஆரம்ப விலை ₹7.99 லட்சத்தில் துவங்குகின்றது. இந்த மாடலில் முதற்கட்டமாக சிஎன்ஜி மற்றும் டீசல் என இரண்டும் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் கூடுதலாக எலெக்ட்ரிக் மாடல் சில மாதங்களுக்கு பிறகு வெளியாகலாம். SCV பிரிவில் தனித்து விளங்கும் வகையில் தனித்துவமான கிரில் மற்றும் செங்குத்து ஹெட்லேம்ப்களை பெற்றுள்ள நிலையில் மஹிந்திரா வீரோ டிரக்கில் கார் போன்ற நவீனத்துவமான வசதிகளை பெற்றுள்ளது. 59.7 kW (80 hp)மற்றும் 210 Nm டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் mDI டீசல் எஞ்சின் அடுத்து, 67.2 kW (90 hp) மற்றும் 210 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்ற டர்போ mCNG எஞ்சின் என இரண்டிலும் 5 வேக கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ள மஹிந்திரா வீரோ வாகனத்தின் சிறந்த முறையில் சுமையை தாங்குவதற்கான அகலான கார்கோ பெட்டில் பேலோடு…
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 2024 அப்பாச்சி RR310 பைக் மாடல் விற்பனைக்கு ரூ.2.75 லட்சம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பாம்பெர் கிரே நிறத்துடன் பாடி கிராபிக்ஸ் தவிர பல்வேறு நவீனத்துவமான வசதிகள் அப்பாச்சி RTR 310 பைக்கில் இருந்து பெற்று இருக்கிறது. கூடுதலாக விங்லெட்ஸ், RT-DSC, க்விக் ஷிஃப்டர் போன்ற சில முக்கிய அம்சங்கள் பெற்றிருப்பதுடன் எஞ்சின் பவர் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. 2024 TVS Apache RR310 முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்போட்டிவ் மாடலில் தொடர்ந்து நேர்த்தியான பேனல்களைக் கொண்டிருப்பதுடன் ஏரோ விங்க்லேட்ஸ் (Aero Winglets) சார்ந்தது கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் மூன்று கிலோகிராம் வரை டவுன் ஃபோர்ஸ் கிடைக்கும் இதனால் சிறப்பான வேகத்தை அப்பாச்சி ஆர்ஆர் 310 வெளிப்படுத்தும் என்பதுடன் கூடுதலாக மிகத் தெளிவாக காட்சிக்கு கிடைக்கும் வகையில் ட்ரான்ஸ்பரண்ட் கிளட்ச் கவர் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. அப்பாச்சி RR 310 மாடலில் தற்பொழுது குறிப்பிடதக்க மற்ற வசதிகளில்…
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு செப்டம்பர் 16ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. சமீபத்தில் வெளியான அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கில் இருந்து பல்வேறு வசதிகளை பெற உள்ள இந்த புதிய மாடல் ஆனது புதுப்பிக்கப்பட்ட பல்வேறு நிறங்களும் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் கூட்டணி மூலம் உருவான என்ஜின் ஆப்ஷனில் மிக சிறப்பான வகையில் டியூன் செய்யப்பட்ட புதிய 313சிசி லிக்யூடு கூல்டூ எஞ்சின் அதிகபட்சமாக 35bhp அல்லது 40 bhp ஆக இருக்கலாம். மேலும் டார்க் 30Nm ஆக உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. ரைடிங் மோடுகளை பெற உள்ள இந்த மாடல் ஆனது புதிய டிஎஃப்டி கிளஸ்டரையும் பெறுவதுடன் பல்வேறு நவீனத்துவமான கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களும் டிவிஎஸ் மோட்டார் சேர்க்கலாம். சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்ற இந்த மாடல்…